Tuesday, January 4, 2022

திருவைகாவூர் வில்வவனநாதர்

 இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

சோழ நாடு காவிரி வடகரை தலங்கள்

48. திருவைகாவூர்

சிவஸ்தலம் பெயர்

திருவைகாவூர்

இறைவன் பெயர்
வில்வவனநாதர்
இறைவி பெயர்
சர்வஜனரட்சகி, வளைக்கை அம்மை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
கோழைமிட றாககவி
திருவைகாவூர்
பண் :சாதாரி

பாடல் எண் : 1 விளக்கம்

சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத ஏழையடியவர்கள் , கோழை பொருந்திய கழுத்து உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின் முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ , அதன் வரிசையான குலைகள் சிதறி வாழைக்குலையில் விழ , அவ்வாழை மரங்களினின்றும் உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச் செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 2 விளக்கம்

வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும் , அக்கினியைக் கணையாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு , பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி , வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட , அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 3 விளக்கம்

மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களால் செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய் , நல்ல தவத்தை மேற்கொண்டு , பதிநூல்களை நன்கு கற்று , கேட்டுத் தெளிய உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க , நாடோறும் அருள்செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நல்ல வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த மதில்களும் , மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும் விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 4 விளக்கம்

சிவபெருமானை இன்ன உருவம் உடையவன் ; இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால் அறியமுடியாது . புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன் . அப்பெருமான் அருளோடு வீற்றிருந்தருளும் இடம் , முன்னை வினைகளெல்லாம் நீங்க , அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை , மாலை என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும் , வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 5 விளக்கம்

வேதங்களை ஓதியும் , ஓதுவித்தும் , வேள்விகள் பல செய்தும் , விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும் , உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , சிறந்த தாழைகள் , புன்னை , புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும் , மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 6 விளக்கம்

சிவபெருமான் நஞ்சை அமுது போன்று உட்கொண்டவன் . நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன் . சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன் , பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்து உச்சரித்து , ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களைப் பாடி , எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும் , வயல்வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 7 விளக்கம்

நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி , ஞானமலர்களான கொல்லாமை , அருள் , ஐம்பொறி அடக்கல் , பொறை , தவம் , வாய்மை , அன்பு , அறிவு இவை கொண்டு தோள்களும் , கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர , அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய , அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும் .

பாடல் எண் : 8 விளக்கம்

இருபது கைகளும் , வலிமையான உடம்பும் துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இவ்வையகத்திலுள்ள அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு , காலையும் , மாலையும் தியானித்து , பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப் போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

பாடல் எண் : 9 விளக்கம்

இவ்வுலக ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணனான சிவபெருமான் , பிரமனும் , திருமாலும் தங்கள் செருக்கொழிந்து ` எம் தந்தையே ! தலைவனே ! இறைவனே ` என்று தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்துவீற்றிருந்தருளும் இடமாவது , சிந்தித்துப் பாடும் அடியார்களும் , தன் மேனியிலே திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும் மலர்களை ஏந்தி , வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற , நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

பாடல் எண் : 10 விளக்கம்

சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும் தந்தை , தலைவன் , இறைவன் என்று போற்றுதல் செய்யாத சமணர்கள் , புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற , நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

பாடல் எண் : 11 விளக்கம்

முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி , தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர் .

🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன. சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்
திருவைகாவூர்
திருவைகாவூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612301
தொடர்பு : 09443586453, 09655261510.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

 திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் 
இறைவர் திருப்பெயர் : வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர். இறைவியார் திருப்பெயர் : சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி. 
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : எமதீர்த்தம், 
சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். 
சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். 
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும்.
பிரம்மா, விஷ்ணு, அக்னி வழிபட்ட தலம் 
எமனை விரட்டிய நந்தி
யமன் தண்டிக்கப்பட்ட திருத்தலம். 
சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம்.
இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.
கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் அம்பிகையின் சந்நிதி.
இதனை மணக்கோலம் என - அகத்திய மாமுனிவர் தரிசனம் கண்டார்.
அருணகிரி நாதரும் வழிபட்டிருக்கின்றனர்.
உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது.
துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன.
மூலவர் சுயம்பு மூர்த்தி .

இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.

மகா சிவராத்திரி தலங்களாக போற்றப்படும் திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி என்ற வரிசையில் திருவைகாவூரும் ஒன்றாக விளங்குவதற்கு சுவையான வரலாறு உண்டு. 

வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது.

நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

இத் தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக நின்று உள்ளார்கள் . அதற்குக் காரணம் பிரளய காலத்தில் தன்னுடைய படைக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கிணற்றை  தோண்டி  அதில் குளித்து  சிவபெருமானை வழிபட்ட பின் ஆலய துவாரகாலகனாக ஒரு புறத்தில்  அமர்ந்து விட்டார்.

அரக்கனான சலந்திரன் என்பவனை  அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறி அவனை வதம் செய்த   மகாவிஷ்ணுவை  ஒரு பேடி எனக் கூறி சலந்தரனின் மனைவி சபித்தாள்.  ஆகவே ஒரு பெண்ணால் கிடைத்த சாபத்தை நீக்கிக் கொள்ளவே  தீரவே மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை துதித்து வணங்கி அவர் ஆலய முகப்பில் துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது இந்த ஆலயத்தின் தலபுராணம் என்று கூறுகிறார்கள் . இப்படி பிரும்மாவும், விஷ்ணுவும் துவாரகா பாலகர்களாக நிற்பது  வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.

ஒரு மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.

 ஒரு வேடன் வேட்டைக்காக மான் ஒன்றை துரத்தி வந்தான். உயிர் பிழைக்க தப்பியோடிய மான் காட்டில் உள்ள ஒரு சிவலாயத்தில்(திருவைகாவூரில்) தஞ்சம் புகுந்தது. அங்கு தவநிதி என்ற முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். 

வேடனும் வில்லோடு அந்த தலத்திற்குள் நுழைந்தான். அப்போது, தவம் கலைந்த முனிவர் அவருக்கு பின்புறமாக மறைந்து நின்ற மானையும், எதிரே மானை வேட்டையாட நின்ற வேடனையும் கண்டார். நிலைமையை புரிந்து கொண்டார். அந்த மானிற்கு அவர் அபயமளித்தார். ஆனால் இறை நம்பிக்கையும் இரக்க குணமும் துளியும் இல்லாத அந்த வேடன், முனிவர் மீது கடும் கோபம் கொண்டான். 

உடனே தன் கையில் வைத்திருந்த வில்லெடுத்து, முனிவரை தாக்க முற்பட்டான். தன்னையே கதியென நினைக்கும் முனிவருக்கே ஆபத்து என்றால் சிவன் விட்டுவிடுவாரா என்ன? உடனே  புலி வடிவெடுத்து ஆலயத்திற்குள் நுழைந்தார். சற்றும் எதிர்பாராத அந்த வேடன் பயத்தில் தன் கையில் வைத்திருந்த வில்லையும் அங்கேயே போட்டு விட்டு அருகே இருந்த மரத்தில் ஏறிக்கொண்டான். 

அந்த புலி, 'அவனை விடுவதில்லை' என்பது போல் மரத்தடியிலே நின்று விட்டது. நேரம் செல்ல செல்ல வேடனுக்கு பயமும் பசியும் அதனால் சோர்வும் ஏற்பட்டது. இரவும் நெருங்கியது. எங்கே களைப்பு மிகுதியால் உறங்கி விடுவோமோ, உறக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவோமோ என்று அஞ்சினான் வேடன். இதனால் உறக்கம் வராமல் இருக்க மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை அனைத்தும் கீழே புலி வடிவம் கொண்டிருந்த சிவபெருமானின் மேலேயே விழுந்த வண்ணமிருந்தது. 

வேடன் தான் செய்வது இன்னதென்று அறியாமலேயே, ஒவ்வொரு வில்வ இலையாகப் பறித்து கீழே புலி வடிவத்திலிருந்த சிவபெருமான் மேல் போட்டதன் மூலமாகச் மகா சிவராத்திரியன்று சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தை அவன் அறியாமலேயே பெற்றுவிட்டான். 

மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.

அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான்.நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை.

சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.

 யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். 

எமன் திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, தன் பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் அமர்ந்தார்.

பிரம்பு - அது அடியவர்களுக்கு அல்ல!...

தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!... 

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் - போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் - திருவைகாவூர்.

திருவைகாவூர் தலத்தில் நுழைவு வாசலில் அர்த்த மண்டபத்தில்  4 அடி உயரத்தில் வடிக்கப்பட்டஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ள தட்சணாமூர்த்தி  நின்ற கோலத்தில் கையில் வீணையுடன் அருள்பாலிக்கிறார்.

சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும்.

மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர்.

மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளும்  பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.

தீர்த்தம் எம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் நோய்கள் அகன்று நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும்,  சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர்.

ஆலயத்தின் மூலவர்  வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து இருக்க  அவர் சன்னதியின் இடதுபுறம் வளைக்கைநாயகி எனும் பெயருடன் அன்னை தனி சன்னதியில் இருக்கின்றார். 

1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறப்படும் இந்த ஆலயத்தில் சப்த கன்னிகைகளின் சன்னதி, வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான், தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை , சண்டீஸ்வரர், சூரியன், சந்திரன், சனிபகவான் என அனைவரும் தனி பீடங்களில்  உள்ளார்கள்.

ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி-தெய்வானைசமேதராக   கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ள அற்புதம் பொக்கிஷமுமாகும்.

சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது.

முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

இங்கு உள்ளார்.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றோர் சிறப்பு.

அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் கொலுவிருக்கிறார்கள். 

ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான, எமபயம்  போக்கும் தலம்

அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். . சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை  தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம்.

அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள்.

வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம்.

குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும்.

 அக்னி தேவரும்  இங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து ஒரு தீர்த்தத்தை உருவாக்க  அதை அக்னி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.  

நான்கு வேதங்களும் கூட இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை துதித்தபடி வில்வ  மரங்களாக அமர்ந்து உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த நான்கு வில்வ மரங்களின் கிளைகளும் ஒன்றாகிப் பின்னிக் கொண்டு ஒரே மரம் போலக் காட்சி தருகிறது ஒரு அதிசயமான காட்சியாகும்.

கோவில் 6.00  முதல்  11.00 காலை  மாலை  5.00  முதல்  9.00 இரவு வரை திறந்திருக்கும்

கும்பகோணத்தில் இருந்து 15km

கும்பகோணம் திருவையாறு சாலையில் தியாகசமுத்திரம் வழியாக புள்ளபூதங்குடி அடுத்து திருவைகாவூர் சென்றடையலாம்

சிவராத்திரி

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை, சிவனை பூஜித்து வணங்கிய நாளையே இந்துக்கள் மகாசிவராத்திரி விழாவாக கொண்டாடி வருகின்றனர். 

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம்கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். 

அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன் இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க, காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம்.

இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக - அதாவது வேடனைப் பிடிக்க எமன்வர, நந்தியும், துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க, மீறி வருமவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது.

திருவைகாவூர் மகாசிவராத்திரி நாளுக்கு மிகவும் பெயர் பெற்ற தலம். வேடன் ஒருவனுக்கு ஒரு மகாசிவராத்திரி நாளில் இறைவன் காட்சி கொடுத்து அவனுக்கு அருளிய தலம். வேடன் ஒருவன் கொள்ளிடக் கரையிலுள்ள ஒரு புதரில் ஒரு மானைக் கண்டு அதை துரத்திச் தென்றான். மான் வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பூஜை செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. மானைத் துரத்திச் சென்ற் வேடன் முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான். மானின் மீது குறி பார்த்து அம்பெய்யச் சித்தமானான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேண்டினார். மானை விடாவிட்டால் முனிவரையே கொன்று விடுவேன் என்று வேடன் மிரட்டினான். முனிவர் தஞ்சமடைந்த மானை விடமாட்டேன் என்று கூற, அவர் மீது அம்பு தொடுக்க ஆயத்தமானான். அடியார்களை எப்போதும் காக்கும் இறைவன் ஒரு புலி வடிவில் அங்கு தோன்றி வேடனை துரத்தினார். வேடன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது. இரவு வந்துவிட, பயத்தினாலும், பசியினாலும் வேடன் தூங்காமல் மரத்தில் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாக்ப் பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான்.

அன்று மகாசிவராத்திரி தினம். புலியாக மரத்தடியில் இருந்த சிவபெருமான் மீது அவன் பறித்துப் போட்ட இலைகள் விழுந்தன். அவன் உட்கார்ந்திருந்த மரம் விலவமரம். இரவு முழுவதும் சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்ததால் அவனுக்குச் சிவபதம் கிடைத்தது. சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார். சிவராத்திரியை அடுத்த நாள் விடியற் காலையில் வேடன் ஆயுள் முடிகிறது. யமன் அவன் உயிரைப் பறிக்க வந்தான். நந்திதேவர் அவன் வருவதைக் கவனிக்கவில்லை. சிவன் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு யமனை விரட்டி அடித்தார். யமனை உள்ளே விட்டதற்காக சிவன் நந்திதேவரைக் கடிந்து கொள்ள, நந்தி வெளியே ஓடிவரும் யமனை தன் மூச்சுக் காற்றால் நிறுத்தி விட்டார். பின்னர் யமன் சிவனை வேண்டி மன்னிப்புக் கேட்க, யமனை வெளியேற அனுமதிக்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார்.

யமன் தன் பக்தியை இறைவனுக்குக் காட்ட, ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றான். யமன் பணி செய்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாப்ம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.

அக்கினி தீர்த்தம் என்று அக்கினியால் தோற்றுவிக்கப்பட்ட வேறொரு தீர்த்தமும் இங்கே இருக்கிறது. வேதங்கள் வில்வ விருட்சங்களாக இங்கே தவம் புரிவதாக ஐதீகம்.

கோவில் அமைப்பு: ஆலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது. முகப்பு வாயிலின் மேற்புறம் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்பு வாயிலுக்கு எதிரே யம தீர்த்தம் உள்ளது. வாயில் வழியே உள்ளே சென்றால் பலிபீடத்தையும், வாசலை நோக்கி காட்சி தரும் நந்தியையும் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வயானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இச் சந்நிதியில் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. இவற்றையடுத்து சுற்றிலும் மதிற்சுவருடனுள்ள ஒரு சிறிய 3 நிலை கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால், இடதுபுறம் இத்தல வரலாறான வேடன் முக்தி பெற்ற நிகழ்ச்சி சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி அழகான திருவுருவம். அரிய வேலைப்பாடுடையது. லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் கோஷ்டத்தில் உள்ளனர். துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன. இத்தல மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார். இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம். மிகவும் பிரசித்திபெற்ற அம்பாள். திருமால், நாராயணி, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் பீடமிட்டு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணா தட்சிணாமூர்த்தி மூலத் திருவுருவங்கள் உள்ளன.

சிறப்புகள்

சிவராத்திரிக்கு சிறப்புடைய தலம்.

இத்தலத்திற்கு வில்வவனம் என்றும் பெயருண்டு.

உள்கோபுர வாயிலில் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் முருகன் வீற்றிருக்கும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது.

துர்க்கைக்கு எதிரில் இரு சண்டேஸ்வரர் திருமேனிகள் உள்ளன.

மூலவர் சுயம்பு மூர்த்தி .

இத்தலத்தில் சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் வேடன், வேடுவச்சி, இறைவன் காட்சி தரும் ஐதீகம் புறப்பாடு நடைபெறுகின்றன.

  மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு.

நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது....🙏🏼

 திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 48வது சிவத்தலமாகும்.

தொடரும் 

திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment