இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்
சோழ நாடு காவிரி வடகரை தலங்கள்
54. திருமழபாடி
சிவஸ்தலம் பெயர்
ஸ்ரீ ப்லவ ஆண்டுlஇந்த ஆண்டு பங்குனி மாதம் 26தி சனிக்கிழமை09. 04.2021
திருமழபாடி (அரியலூர் மாவட்டம்)
இறைவன் பெயர்
வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண்நாதர் வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்
இறைவி பெயர்
அழகம்மை
தேவாரப் பாடல்கள்
1. களையும் வல்வினை
2. காலையார் வண்டினங்
3. அங்கையாரழ லன்னழகார்
அப்பர்
2. அலையடுத்த பெருங்கடல்
சுந்தரர்
1. பொன்னார் மேனியனே
🔸சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமழபாடி பதிகம்🍀
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.🙏
பொழிப்புரை :
🌿அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் 🔥
🌹திருச்சிற்றம்பலம் 🌺
l: சிவாயநம
ஸ்ரீ நந்தியெம்பெருமான், ஸ்ரீ சுயசா தேவியுடன், திருமணக்கோலம், திருமழபாடி
திருமழபாடி ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி கோவிலில் 8.2.2022 முதல் 17.2.2022 வரை நடக்கவிருக்கும் மாசி மக ப்ரும்மோதஸவ நிகழ்ச்சிகளையும், அதை முன்னிட்டு கோவிலில், திருமழபாடி ஸ்ரீ வைத்யநாதஸ்வாமி யஜுர் வேத பாராயண டிரஸ்டால் நடத்தப்படும் நித்ய யஜுர் வேத க்ரம பாராயணத்தையும் நேரடி ஒலி, ஒளி பரப்பும்படி ஜோதி டி.வி. யை கேட்டுக்கொள்கிறேன்.
கே.வி.ராமதாஸ்..Mobile 9840355881🐚
மறைஞானமூர்த்தி சம்பந்தர் பெருமான்-திருமழபாடி🙏
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.👏
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம்.
ஆலய முகவரி
திருமழபாடி அஞ்சல்
அரியலூர் வட்டம்
அரியலூர் மாவட்டம்
PIN - 621851
தொடர்பு : 04329 - 292890, 09786205278
இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்
ஆலய தொடர்புக்கு: எஸ். கணேச சிவாச்சாரியார், கைபேசி: 9843360716
தல வரலாறு
ஈசன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி, நடனமாடிய பதியாதலின்,இப் பெயர் பெற்றது. நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். பிரமலோகத்திலிருந்தச் சிவலிங்கத்தை, புருஷாமிருக ரிஷி இங்கு எழுந்தருளுவித்தார். இதை மீண்டும் பிரமன், பெயர்க்கமுனைந்தபோது, முடியாமல், பிரமன், இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால், இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார். ஈசன், சுந்தரர் பால், "மழபாடிக்கு வர மறந்தனையோ" என அழைத்த திருத்தலம்.
இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வச்சிரதம்பேஸ்வரர், அம்மனின் பெயர் அழகம்மை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.
இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டதாகும். இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார்.
இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.
நந்தி கல்யாணம்: இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் தடைபெறுகிறது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு தடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும். இந்த 2022-ம் வருடம் மார்ச் மாதம் பங்குனிம் தேதி இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் நந்தி கல்யாண உற்சவ விழா நடைபெற இருக்கிறது.. பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுக.
கொள்ளிட நதி இத்தலத்தில் வடக்கு முகமாக உத்தரவாஹினியாக ஓடுவது இத்தலத்தின் சிறப்பம்சம்.
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.
சிறப்ப இந்த வருஷம் நீங்களும் வர்றீங்கதானே..
நந்தி திருக்கல்யாணம்
இந்த ஆண்டு ஸ்ரீ ப்லவ 9.04.2022 பங்குனி மாதம்26தி சனிக்கிழமை மங்கல மேளங்கள் முழங்க - திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து - திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன் பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய - ஐயாறப்பரையும், அறம் வளர்த்த நாயகியையும், நந்தீசனையும் - எதிர் கொண்டு அழைத்தனர் -
அங்கே முன்னதாகவே கண்ணாடிப் பல்லக்கில் சென்று காத்திருந்த சுந்தராம்பிகையும் வைத்தியநாதப்பெருமானும்!..சந்தனம் தாம்பூலம் வழங்கி - நல்வரவு கூறி வரவேற்றனர்.
அனைத்தையும் முன்பே உணர்ந்திருந்த வியாக்ரபாத முனிவர் -அனைவரையும் அன்புடன் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்தார்.
வியாக்ர பாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு அழைத்து மாலை அணிவித்து வரவேற்றான்.
இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக , பசி தாளாது அழுதபோது தான் - ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்ததாக திருக்குறிப்பு உள்ளது.
திருமழபாடி வேத மந்த்ர கோஷங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க - மணப் பந்தலினுள் கம்பீரமாக நந்தீசன் நுழைந்ததும் - இல்லத்தினுள் தனியறையில் தோழியர் மத்தியில் இருந்த - சுயம்பிரகாஷினி தேவிக்கு செய்தி மின்னலெனச் சென்றது.
''கொள்ளை அழகு மாப்பிள்ளை!.. கொடுத்து வைத்தவள் நீ !'' -
தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டினர். மண் பொதிந்த மரபின் வழி வந்த நாணத்தால் முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசை.
இந்த தேவி - சுயசாம்பிகா எனவும் அழைக்கப்படுவாள்.
மணப்பந்தலில் குழுமி இருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம்.
என்ன அழகு மாப்பிள்ளை முகத்தில் !..
இப்படியொரு தேஜஸை இதுவரை எங்கும் கண்டதில்லையே!.. - என்று ஒவ்வொருவரும் வியப்பு எய்தினர்..
அந்த அளவில் மங்கல நிகழ்வுகள் தொடங்கின..
பங்குனி26தி மாத09.04.2022 சனிக்கிழமைபுனர்பூச நட்சத்திரங் கூடியதான - சுபதினத்தில் ] சுபயோக சுபவேளையில் [மாலை 5 மணிக்கு மேல்] -
விநாயகனும் வேலவனும் அருகிருக்க, முப்பத்து முக்கோடிதேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க,
பஞ்சபூத சாட்சியாக, அக்னி சாட்சியாக - அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னின்று - ஸ்ரீநந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைத்து அருளினர்.
சகல தேவதா மூர்த்திகளும் நல்லாசி வழங்கி மகிழ்ந்தனர்..
அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன. எட்டுத் திக்கிலும் மங்கல வாத்யங்கள் முழங்கின.
பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.
இந்த ஆனந்த வைபவம் - மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது.
திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார்.
இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானை வலஞ்செய்து வணங்கினர்.
மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.
ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும் மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.
சித்ரா பௌர்ணமியை அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று- தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.
[அந்த நிகழ்வே திருவையாறு சப்தஸ்தான விழா ஆகும்]
அனைவருக்கும் மனம் நிறையும்படி அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள் பாலிக்கப்பட்டது.
அந்த அளவில், அனைவரும் இன்புற்றிருக்க வேண்டி - ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் சிவசாயுஜ்யம் பெற்றனர்.
சிவதாஜதானியாகிய திருக்கயிலாய மாமலையில் - நெற்றிக்கண் இலங்கும் ரிஷபமுகத்துடன் அதிகார நந்தி எனத் திருத்தோற்றங் கொண்டு, வலத் திருக்கரத்தினில் மழுவும் இடத் திருக்கரத்தினில் மானும் ஏந்தி, மற்ற திருக்கரங்களில் பொற்பிரம்பு தாங்கிய வண்ணம் திருக்குறிப்பு காட்டி- திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்.
இந்த அளவில் - என் தந்தையினும் தந்தையாய், எங்கள் குல தெய்வமாய் விளங்கும் -ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவி திருமண வைபவம் சிந்திக்கப்பட்டது.
நந்தீசர் திருமண வைபவத்தினைக் கேட்டவர்க்கும் படித்தவர்க்கும் சிந்தித்தவர்க்கும் மனை மங்கலம் சிறக்கும் என்பது திருக்குறிப்பு!..
நந்தியம்பெருமான் திருமணத்தைத் தரிசித்தால் - திருமணத் தடைகள் உடைபட்டு திருமணம் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.
இதனால் தான் - நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்!.. - எனும் சொல்வழக்கு வழங்குகின்றது.
வருடந்தோறும் - திருமழபாடியில் திருமண வைபவம் கோலாகலமாக நடைபெறுகின்றது. இந்த வைபவத்தில் திருமழபாடியைச் சுற்றியுள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டு நீங்களும்தான : சுந்தரர் (மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?):
*
சுந்தரனார் காவிரியின் வடகரையிலுள்ள திருவையாறு திருத்தலத்தினைத் தரிசித்துப் பின் தென்கரையிலுள்ள பூந்துருத்தி; திருவாலம்பொழில் முதலிய தலங்களைப் பணிந்து, ஆலம்பொழிலிலுள்ள திருமடமொன்றில் தங்கித் துயில் கொள்கின்றார். ஆலமுண்டருளும் ஆதி மூர்த்தி வன்தொண்டரின் கனவில் எழுந்தருளி வந்து 'மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ?' என்று அருள் புரிகின்றார். -
மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோஎன்று
குழகாகியதம் கோலமெதிர் காட்டியருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபாலேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பியாரூரர்.
*சுந்தரர் உளம் நெகிழ்ந்து, மழபாடி தலத்திற்குச் சென்று, கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய், 'உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' எனும் பாமாலையால் பணிந்தேத்துகின்றார்,
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.
கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது.
இங்குள்ள சிற்பங்கள் (ஒரே கல்லாலான சோமஸ்கந்தர், ரிஷப வாகனத்தில் குரு தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்காரமூர்த்தி, புருஷாமிருக ரிஷி வழிபடும் காட்சி முதலியன) மிகச் சிறப்பு.
திருவையாற்றைச் சுற்றியுள்ள சப்த ஸ்தானங்களுடன் தொடர்புடையது.
இக் கோவிலில், சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
உனக்குப் பணி செய்ய உன்தனை எந்நாளும் நினைக்க வரமெனக்கு நீதா - மனக்கவலை நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும் ஆக்குகின்ற சொக்கநாதா- சொக்கநாத வெண்பா
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌙சொக்கே🌟 நின் தாளே👣 துணை🙏🏻
தொடரும்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment