சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 5
இன்னிக்கு தர்மபுரி.
தர்மபுரி.
இது அதியமான் ஆண்ட ஊராம்..
இனி இவர் பேசுவார்.
அதியமான் கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் இருக்குன்னு சொல்லி ஒரு ஆட்டோல போறோம்.
தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை இருக்கு. .
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசர். வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும்.
இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுதியில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். மன்னர் அதியமான் காலத்தில் அவரது அரசின் தலைநகராக தர்மபுரியும், அவரது கோட்டையாக இந்த அதியமான் கோட்டையும் விளங்கி இருக்கிறது. இந்த அதியமான் கோட்டைக்கு செல்ல ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.
மல்லிகார்ஜுனர் கோயில்
கோவில் கருவறையில் சிவலிங்க உருவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர பீடமாக அமைந்திருக்கிறது. சிவலிங்கம் 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் கருவறையின் முன்பாக மகர மண்டபத்தில் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆலய விதானத்தில் வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும். மூலவரின் கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம், இருபுறமும் மாறுபட்ட முறையில் நீர்
சொரியும் யானைகளைக் கொண்டதாக இருக்கிறது. இத்தல முருகப்பெருமானும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் சபரிமலை ஐயப்பனைப் போல, குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார்.
மயிலின் வாயிலும், முருகப்பெருமானின் காலடியிலும் நாகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் சன்னிதியில் உள்ள விநாயகர் உருவம் மற்றும் அவரது சன்னிதிக்குரிய விமானம் ஆகியவை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கிறது.
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. அதாவது18 படிகள் கொண்ட உயர்ந்த குன்று அமைத்து அதன்மேல் அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை 15 யானைகள் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியில் நீர் தெளித்து வழிபட்டால் நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தின் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தால், ராமாயணக் காவியத்தின் சிறப்புகள் முழுவதும் புடைப்புச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோவில்கள் அடிப்பாகம் ஒளியும், நிழலும் விழுமாறு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு நடைபெறுவது போல, இந்தக் கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. பவுர்ணமியில் காமாட்சிக்கும், அமாவாசையில் ராஜதுர்க்கைக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
மறுபடியும் பஸ்ஸ்டாண்ட் வரோம்.
இப்ப நாம கிருஷ்ணகிரி ஓசூர் போய் பெங்களூர் மூணு மணி நேரத்துல போயிடலாம். அதுல என்ன ரிஸ்க் இருக்கு.
ஒண்ணு இந்த
ஒகேனக்கல் மலைக்கு அந்த பக்கம் தான் கர்நாடகா..காவிரியை எதுத்துண்டு பரிசல் ல போய் அக்கறைல எறங்கி காடுமலை தாண்டி பெங்களூர் போகணும். பரிசல் கவுந்தா நம்ம ரெண்டு பேருக்கும் நீச்சல் தெரியாது. காவிரிலேயே சமாதிதான்.
இன்னொரு வழி மேற்கு தொடர்ச்சி மலை ஓரமா மேட்டூர் போய் வீரப்பன் காடு மாதேஸ்வரன் மலை வழியா கர்நாடகாவுல நுழைஞ்சு மைசூர் தல காவேரி போய்ட்டு பெங்களூர் போகணும். எது உனக்கு பிடிக்கும்கறார்
ஐயோ ஜலசமாதி அல்லது வீரப்பன் காடான்னு திக் ப்ரமை பிடிச்சு நிக்கறேன்.
அந்த ஆபத்தான அருவி விழறதயும் அது வழியா இவர் சொல்ற வழியையும் நெனச்சா புன்னகை மன்னன் படத்துல ரேகா கண்ல வர்ற மாதிரி ஒரு பயம் ஓட, தர்மபுரிக்கே பஸ் ஏறுங்கோங்கறேன்...
பெங்களூரே வேண்டாம் மெட்ராஸ் திரும்பலாம்கறேன்.
No comments:
Post a Comment