சுஜாதாவின் ஓரிரு எண்ணங்கள் .
*************
சுஜாதாவின் ஆழ்ந்த அறிவிற்குக் காரணம் அவரது புத்தக வாசிப்பே !
அதை நிரூபிக்கும் வகையில் இந்தக் கட்டுரை அமைந்துள்ளது . அவர் , தான் படித்த இரு புத்தகங்களில் இருந்து கீழ்க்கண்ட கட்டுரையைத் தருகிறார்.
"""""""""""""""""""""""""""""""""""""""'"'""""""""""""""""'"'''''''''''''''''
சுவாரசியமான இரு புத்தகங்கள் .
Imponderables என்கிற வரிசையில்
டேவிட் ஃ பெல்டுமான் என்பவரின்
" ஆஸ்பிரின் எப்படி தலைவலியைக் கண்டு பிடிக்கிறது ? " என்கிற தலைப்பிட்ட புத்தகமும் ஸ்டீபன் ஜே கோல்டு எழுதிய " The Mismeasure of man " என்னும் புத்தகமும் .
வாழ்க்கையில் நமக்கு சில வேளைகளில் வினோதமான சந்தேகங்கள் எழும் . அவைகளையேல்லாம் யாரிடம் கேட்டுத்
தீர்ப்பது என்று கூடத் தெரியாது .
உதாரணமாக தினம் எனக்குக் காலைவேளையில் தொப்புளில் கொஞ்சம் பஞ்சு இருக்கிறது . அது எப்படி என்று தெரியவில்லை . யாரிடமாவது சந்தேகம் கேட்டால் அவரும் " ஆமா சார் ! எனக்குக் கூட வருது ! இது எப்படி ? " என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார் .
அம்மாதிரியான கேட்கத் துடிக்கும் கேள்விகளைத் தொகுத்து , தகுந்த இடத்தில் விடை கேட்டுத் தெளிவு பெற்று , அந்த சுவாரசியமான கேள்விகளையும் பதில்களையும் நான்கு புத்தகங்களாகத் தொகுத்திருக்கிறார் ஃபெல்டுமான் .
கேள்விகளுக்குச் சில உதாரணங்கள்
இவை .
அமெரிக்காவின் 'க்ரீன் கார்ட் ' என்பது நிஜமாகவே பச்சையா ?
( இல்லை .ஒரு காலத்தில் பச்சையாக இருந்தது . இப்போது நீலம் . )
வண்ணத்துப் பூச்சிக்கு தும்மல் இருமல் வருமா ?
( வராது . அவைகளுக்கு மூக்கு நம்முடையது போல் இல்லை . உடம்பு தான் மூக்கு . )
பாம்புகளுக்குத் தும்பல் வருமா ?
( வரும் ).
மீன்கள் ஒன்றுக்குப் போகுமா?
( போகும்.)
ஏழைக் குழந்தை களுக்கு ஏன் வயிறு பெரிதாக இருக்கிறது ?
( புரோட்டின் பற்றாக்குறையால் )
ஒரு சிலந்தி மற்றொரு சிலந்தி வலையில் அகப்பட்டால் தப்பிக்க முடியுமா ?
( முடியாது ).
இவ்வாறான கேள்விகள் பல .
ஸ்டீபன் கோல்டு ஆங்கிலத்தில் எளிய அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் முதன்மையானவர் . அவர் " Biological determinism " என்பது பற்றி எழுதுகிறார் . சென்ற நூற்றாண்டில் வெள்ளைக்கார விஞ்ஞானிகள் , தம் இனத்தைச் சேர்ந்தவர்கள் , செவ்விந்திய, கருப்பர் , எஸ்கிமோ , இனங்களை விட
உயர்ந்தவர்கள் என்று காட்ட , எப்படி விஞ்ஞான ஆராய்ச்சியை ஒரு கருவியாகப் பயன் படுத்தி , முடிவை முன்பே தீர்மானித்து , அதற்கேற்ப பரிசோதனைகள் நடத்தினார்கள் என்பதைப் ' புட்டு புட்டு ' வைக்கிறார் .
மிகவும் பிரசித்தி பெற்ற மூளை ஆராய்ச்சியாளரான , சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த பால் ப்ரோக்கா என்பவரையும் அம்மாதிரி பார பட்ச ஆராய்ச்சிக்குக் காய்ச்சுகிறார் .
மேலும் இந்த நூற்றாண்டில் நடத்தப்படும்
"ஐ க்யூ " பரிசோதனைகள் எல்லாம் உண்மையான புத்திசாலித்தனத்தைக் கண்டு பிடிப்பதல்ல . அதை வைத்து ஒரு இனத்தை மந்தபுத்தி என்றோ , மற்றொரு இனத்தை உயர்ந்தது என்றோ தீர்மானிக்க முடியாது என்பதையும் நிலை நிறுத்துகிறார் .
அதனால் யாராவது உங்களை " ஐ க்யூ குறைவு " என்றால் நீங்கள் 'ஹ! 'என்று பதில் சொல்லவும் . விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்த அபாயம் எப்போதும் உண்டு .முடிவைத் தீர்மானித்து விட்டு அதற்கேற்ப பரிசோதனைகளை நடத்தி அதன் விபரங்களைக் கூட்டிக் குறைத்து வெளியிடுவது . இதைச் சாதாரண மக்களின் பாஷையில் ஃப்ராய்டு அல்லது 'ஹம்பக்' என்றும் , தூய தமிழில் ' ஒத்லா ' என்றும் சொல்வார்கள் .
( சுஜாதாட்ஸ்லிருந்து ).
""""""""""""""""""""""""'''""""""""""""""''''""'''''""""""""""""""""""'"'"'
மிக சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா ?
இப்படித்தான் சுஜாதா அவரது ஓரிரு எண்ணங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்து விட்டுச் செல்வார் . ஒவ்வொரு கட்டுரையும் நம்மை ஒவ்வொரு விதத்தில் ஈர்க்கும் . அதுதான் அவரது எழுத்தின் வலிமை .
No comments:
Post a Comment