Monday, December 27, 2021

பதில் தேடுகிறேன் தொடர் 5

 🙏🌹 பதில் தேடுகிறேன் தொடர்:--5

வாசலில் வந்த டாக்டர்.....ராமனிடம்..."அவங்க நிலமை ரொம்பவே மோசமாக இருக்கு"என்று பேச ஆரம்பித்தார்....

மாடியில் ரத்த வாந்தி எடுத்த சரஸ்வதியை

மன்னி மீனாவை மேலேசாய்த்துக்கொண்டாள்....

"ஏன் மன்னி டாக்டர் அண்ணாவை கீழேஅழைத்துப்போகறார்????நான் பிழைக்க மாட்டேனா????"

திணறி திணறி கேட்ட சச்சு" மன்னி என் பத்மாவை அவள் அப்பாவிடம் விடாதேஎன்றுஅண்ணா விடம்சொல்லியிருக்கேன்மன்னி...பாத்துக்கோ மன்னி"என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரஸ்வதியின் 

தலை சாய்ந்து விட்டது!!!மீனா போட்டகூச்சலில் எல்லோரும் மாடிக்கு ஓடினார்கள்!!! டாக்டர் தலை குனிந்தபடி தெருவில் இறங்கினார்......எல்லாம் முடிந்து விட்டது!!!!

சோதனைக்கு ஓர் அளவே இல்லையா??

சீதாலட்சுமிக்கும் ஒன்றும் அதிகவயதாகவில்லை!!!!அந்த காலத்தில் சின்ன வயதில் வயதான பையனுக்குத்தான் திருமணம் செய்து வைப்பார்கள்!!! அப்படி பார்த்தால் சீதாலட்சுமி 45வயதுதைக்கூட நெருங்கவில்லை!!!

சரசு காலமான இரண்டு நாள் சென்றபின்  பத்மாவின் ஆண்டு நிறைவுக்கு அவள் அப்பா அனுப்பிய மணியார்டர் பணம் இங்கு வந்தது!!!!!

குழந்தை பத்மா பாட்டி சித்தி மாமி என்று எல்லோரது கவனிப்பிலும்வளர ஆரம்பித்தாள்!!!ஆனால் மாமா ராமனுக்கு தன் தங்கை சரசுவை ரொம்ப பிடிக்கும்!!!அவள் இப்படி சின்ன வயதில் இறந்ததற்கு இந்த குழந்தைதான் காரணம் என்று சதா சொல்லி சொல்லி வறுத்தப்படுவார்!!!தூளியில் குழந்தை அழுதால் வேகமாக வந்து தூளியை ஆடவிட்டு எதிர் எதிர் சுவற்றில் முட்டிகொள்ளும்படிசெயவார்!!!!வீட்டில் உள்ளவர்கள் பதை பதைத்து அப்படி செய்யாதே என்று கத்திக்கொண்டு வந்து தடுப்பார்கள்!!!ஒருவாராக 4மாதங்கள்ஓடிவிட்டது!!!

இரண்டு முறை குழந்தையைபார்க்க தகப்பனார் பெயருக்கு வந்து போனார்!!!

ஒரு நாள் சரஸ்வதியின் கணவர்வீட்டுக்கு வந்து சொன்ன கேட்ட விஷயம் எல்லோரையும் கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோய் விட்டது!!!!.....ஏ.வி.பிரேமா..

No comments:

Post a Comment