மனதோடுமலர்கள்_17
அத்யாயம் 17
சற்று ஓய்வெடுத்தவன் எழுந்து, 'அம்மா, நான் ராஜி ஆத்து வரைக்கும் போயிட்டு வரேன்'.
'ஏண்டா, சாப்டுட்டு நிதானமா போயேண்டா'
'போயிட்டு உடனே வந்துடறேன்'.
வாசல் ஜன்னலை ஒட்டிய ரூமில் ராஜி படித்துக் கொண்டிருந்தாள். பெரிய புக். அவள் படிக்கும் ஒவ்வொரு மெடிகல் புக்கையும் பார்த்து அசந்து போவான்.
'ஏன் ராஜி, ஒரு புக்கை படிக்கவே ஒரு ஆயுசு வேணும் போல இருக்கே. அப்படி என்னத்தைதான் படிப்ப'. வெகுளித்தனமான அவன் பேச்சுக்கு சிரிப்பாள்.
'நமக்கும் அப்பா, சொத்து, சுகம்னு இருந்திருந்தா, நாமும் மெடிகல், இன்ஞினியரிங்னு படிச்சிரிக்கலாம்'.
பொறாமை இல்லாவிட்டாலும் பெருமூச்சு கூடவா இல்லாம போயிடும்?
'வாடா, காதல் மன்னா' என்று ராஜி.
அப்படி வரவேற்கும்போதே அவனுக்கு புரிந்து விட்டது மாலதியோடு பேசியிருக்கிறாள் என்று. அதற்குள்ளாகவா? ஆச்சர்யம்தான்.
'ஏண்டா, கல்யாணத்துக்கு போறேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு உன் கல்யாணத்தை நிச்சயமா பண்ணிட்டு வருவே. இருந்தாலும் இது ஓவர் டா'.
'மாலதி என்ன சொன்னா?'
'ம்ம்ம், உன்ன பிடிக்கலையாம்'.
லேசில் சொல்லிவிடுவாளா என்ன?
'எல்லாம் உன்னாலத்தான்'.
'இத பாருடா, பச்சை குழந்தைக்கு ஒண்ணுமே தெரியாது பாரு? ஜோக்ஸ் அபார்ட், ஐ ஆம் வெரி ஹாப்பி சந்துரு. நல்ல முடிவை எடுத்திருக்கேள் ரெண்டு பேரும். சித்த நேரம் முன்னாடிதான் மாலதியோட பேசினேன். நான் ஏதோ விளையாட்டா பண்ணப்போக, இப்படி இவ்வளவு சீக்கிரம் ...? ஊருக்கு போயிட்டு வந்து அவ கிட்ட என்ன தூது போகச் சொல்லுவனு பார்த்தா, ரொம்ப தைரியம் தான்'.
'என்ன நடந்ததுன்னு சொல்லு. அப்பத்தான் அவ என்னத்தை என்னிட்ட மறச்சான்னு தெரியும்'
'அம்மா, சந்துரு வந்திருக்காம்மா. குழந்தைக்கு ஒரு கப் காஃபி'.
நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன்னான். நடு நடுவே கிண்டல் கேலிகள் ராஜியிடமிருந்து. இல்லாமல் இருக்குமா?
'சந்துரு. நானே உங்க அம்மாகிட்ட பக்குவமா சொல்லி எப்படியாவது சம்மதத்தை வாங்கிடறேன். இருந்தாலும் ரியாலிடி ரிமெய்ன்ஸ், யூ நீட் டு வெயிட் ஃபார் அட்லீஸ்ட் எ ஃப்யூ இயர்ஸ். ஹோப் யூ வில் அண்டர்ஸ்டாண்ட்'.
'புரியறது ராஜி. ஐ வில் சர்ட்டன்லி வெயிட் ஃபார் ஹர்'.
'பீச்சிலும் பார்க்கிலும் சினிமா போகறதிலும் இல்ல காதல். இட் இஸ் ஜஸ்ட் டெவலப்பிங் அண்டர்ஸ்டாண்டிங் டுவோர்ட்ஸ் ட்யூடிஃபுல் லைஃப்'.
'நீ சௌகர்யமா வந்துட்டையான்னு கேட்டா. வந்துருப்பான் கவலைப் படாதேன்னு சொன்னேன். நீயும் வேணா பேசிடு.'
'கூடிய சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க ட்ரை பண்ண சொல்லியிருக்கேன். பார்க்கலாம்.'
'எனக்கென்னவோ எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தோணறது. டோண்ட் வொரி. ஆல் தி பெஸ்ட். இப்ப வெரி இம்பார்ட்டெண்டே அவளோட ரெண்டு அக்காக்களுக்கு கல்யாணம் ஆகறது தான். ஹெல்ப் ஹர் ஆன் திஸ்'.
கூட பிறக்கவில்லை அவனோடு. எத்தனை பாசம் அவன் மீது.
பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஆறிய காஃபியை கட கடவென்று குடித்தான்.
அவள் அம்மா லலிதா அப்பா நாகராஜ ஐயரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினான் ராஜி வீட்டிலிருந்து.
தொடரும்
No comments:
Post a Comment