மதராஸ் பட்டணம் - 20
மேற்கு மாம்பலம்
ஒரு காலத்தில் மாம்பலம் வில்வ மரங்கள் (Aegle mermelos) அடர்ந்து வளர்ந்துநிறைந்திருந்த பகுதியாக இருந்தது
மாவில்வம்=மாவிலம்=மாம்பலம் என்று பெயர் மருவியது
×××
மதராஸ் பட்டணத்தில் பல நகரங்கள் இருந்தாலும் அதற்கு பெருமை சேர்க்கும் நகரங்களில் மேற்கு மாம்பலம் ஒன்று
நாகரிகம் நிறைந்த பகுதி நடுத்தர பாமரர்கள் நிறைவுடன் வசிக்கும் பகுதி சண்டை சச்சரவுகள் இல்லாத பகுதி
பெரும்பாலும் அரசாங்க வேலையில் இருப்பார்கள் இங்கே வசிப்பார்கள்
அந்தணர்கள் அதிகம் வசிக்கும் பகுதி
×××
அந்த காலத்தில் ரயில்வே லைனுக்கு கிழக்குப் பகுதிக்கு தியாகராஜ நகர் என்று பெயர். மேற்குப் பகுதிக்கு மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்பட்டது
×××
கும்பினி மதராஸ் ராஜதானியை ஆண்ட காலத்தில் செங்கல்பட்டு ஜில்லா சைதாப்பேட்டை வட்டத்தில் மாம்பலம் ஒரு கிராமமாக அடங்கி இருந்தது
×××
தியாகராஜ நகர் வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது
சங்கீத வித்வான்கள் சினிமாக்காரர்கள் நாடக நடிகர்கள் இங்கே வசிப்பார்கள்
வளராத, சுகாதாரமில்லாதது என்று பரிகாசம் செய்யப்பட்ட பகுதி மேற்கு மாம்பலம்
சினிமா நடிகர்கள் மேற்கு மாம்பலத்தில் வசிப்பதை விரும்பமாட்டார்கள் மேற்கு மாம்பலத்தில் வசிப்பது அவமானம் Below dignity என்று நினைப்பார்கள்
×××
அப்போது பாதாள சாக்கடை வசதி கிடையாது ஒவ்வொரு வீட்டிலும் தெருவை ஒட்டி வீட்டின் முன் ஒரு தண்ணீர் தொட்டி கட்டிவைத்திருப்பார்கள்
வீட்டில் கழிவு நீர் (உபயோகப்படுத்தப்பட்ட நீர்) இங்கே தேக்கி வைக்கப்படும்
வாரத்திற்கு ஒருமுறை மதராஸ் கார்ப்பரேஷன் லாரி வந்து தண்ணீரை எடுத்துச் செல்வார்கள்
ஒரு மாட்டுவண்டியில் பிப்பாய் கட்டி தண்ணீரை மொண்டு ஊற்றி நிரப்பி எடுத்துச் செல்வார்கள்
அதற்குள் சாக்கடைத் தண்ணீர் ஆறாக தெரு முழுவதும் ஓடும்
வசிப்பதற்கு யாராவது வாடகை வீடு கேட்டு வந்தால் வீட்டுக்காரர் கேட்கும் முதல் கேள்வி குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்
×××
மாலை ஆறு மணிக்கு ஒவ்வொருவர் வீட்டிலும் கொசு வத்திச்சுருள் புகையும்
தெரு விளக்குகள் பிரகாசமாக இருக்காது
சாயங்காலம் ஆறு மணிக்குமேல் வாசலில் அமர்ந்து யாரும் பேசமாட்டார்கள் காரணம் வாய்க்குள் கொசு புகுந்துவிடும்
நாலைந்து தெருவிற்கு ஒரு நேப்பாள கூர்க்கா இருப்பான்
எங்கள் தெரு கூர்காவிற்கு ராம்சிங் என்று பெயர்
ஒவ்வாரு வீட்டிலிருந்து கூலி பத்து ரூபாய் வாங்குவதற்குள் இவன் நிலைமை படுமோசம்
ராம்சிங் பணம் வாங்க வருவதைப் பார்த்து பலர் கதவை சாத்திவிடுவார்கள்
×××
மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து அப்போது கை ரிக்ஷா சைக்கிள் ரிக்ஷா வசதிகள் இருந்தன
×××
1911ல் மாம்பலம் ரயில்நிலையம் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது
எழும்பூரிலிருந்து தெற்கே செல்லும் மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்தது
மதராஸ் பட்டணம் விரிவுபடுத்தப்பட்டபோது மேற்கு மாம்பலம் முக்கியத்துவம் ஆனது
×××
மேற்கு மாம்பலம் அந்த காலத்தில் பெரிய நீர்நிலை ஏரியாக இருந்தது
1) ஏரிக்கரை தெரு
மாம்பலம் ரயில்வே கேட் இதுதான் ஆரம்ப எல்லை
Health centre வரை நீண்ட தெரு இது
TVS சீமா ஐயங்கார் நிறைய செலவுசெய்து இந்த Health centre அமைத்தார்
முற்றிலும் தரமான இலவச சிகிச்சை அளித்தார்
×××
அந்த காலத்தில் மேற்கு மேம்பாலத்திற்கு ஏரிக்கரைத் தெருதான் பஜார் தெரு
×××
ஏரிக்கரைத் தெருவில் நேஷனல் தியேட்டர் இருந்தது
தெற்கே ஸ்ரீநிவாசா தியேட்டர் இருக்கிறது
×××
ரயில்வே கேட் கையால் சுற்றி உயரத் தூக்கும் கேட் அதிகாலையில் செங்கோட்டை பாசஞ்சர் வந்துவிடும்
அதன் பிறகு காலை 6.00 மணியிலிருந்து 9.00 மணிவரை இந்த கேட் பெரும்பாலும் மூடியிருக்கும்
சைக்கிளில் செல்பவர்கள் நுழைந்து சென்றுவிடுவார்கள்
தியாகராஜ நகரிலிருந்து பஸ் 49 ஏரிக்கரை தெரு வழியாக வடபழனி செல்லும் மொத்தம் 4 பஸ்
பெரும்பாலும் 4 பஸ்ஸும் ஒரே திசையில் மாட்டிக்கொள்ளும்
செக்ரடேரியட்டில் வேலை செய்பவர்கள் electric trainல் சென்று விடுவார்கள்
மௌண்ட் ரோடில் வேலை செய்பவர்கள் இந்த ரயில்வே கேட்டைக் கடக்க திண்டாடுவார்கள்
துரைசாமி சப்வே வந்தபின் இந்த மாம்பலத்திற்கு மதிப்பு வந்தது
×××
2) ஆர்ய கௌடர் சாலை
ராவ்பகதூர் ஹூபடாலே பெல்லி ஹரி கௌடா
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் அமைய தன் சொந்த நிலத்தை இவர்தான் தானமாக அளித்தார்
நீலகரி படுகர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அரசியல் தலைவர்
இவர் பெயரால் அமைந்ததுதான் ஆர்ய கௌடர் சாலை
இந்த சாலைக்கு சிறப்பைக்கூட்டுவது ஸ்ரீ ராம சமாஜம் (அயோத்யா மண்டபம்)
ஸ்ரீ ராம சமாஜம் 1954ல் தொடங்கப்பட்டது
சைவ, வைஷ்ணவ ஆன்மிக வழிபாட்டு சமாஜமாக விளங்குகிறது.
இங்கு ஸ்ரீ ராம நவமி உத்ஸவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
×××
3) உமாபதி சாலை
மெட்ராஸ் காளிபாரி கோவில் இருக்கிறது
×××
4) கிருபாசங்கரி சாலை
சாரதா பீடம்
அன்னை ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் இருக்கிறது
×××
5) வாசுதேவபுரம்
ராமகிருஷ்ண பள்ளிக்கூட ஆசிரியர்கள் சேர்ந்து உருவாக்கிய கண்ணியமான சிறிய பகுதி
×××
6) சக்ரபாணி சாலை மேற்கு மாம்பலத்தின் வடக்கு எல்லைத் தெரு
×××
7)எல்லையம்மன் கோவில் தெரு புஷ்பவதி அம்மாள் தெரு மேற்கு மாம்பலத்தின் தெற்கு எல்லைத் தெரு
×××
8) சத்தியபுரித் தெரு (துரைசாமி சப்வே) மேற்கு மாம்பலத்தின் கிழக்கு எல்லைத் தெரு
இங்கே ஒரு எல்லையம்மன் கோவில் இருக்கிறது
மேற்கு மாம்பலத்தின் காவல் தெய்வம் இவள்
×××
9) ஆஞ்சநேயர் கோவில் தெரு ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் இருக்கும்
ஏரிக்கரைத் தெருவை பிரிக்கும் சிறிய தெரு
×××
10) காசி விஸ்வநாதர் தெரு பழைமையான காசி விஸ்வநாதர் ஆலயம் இருக்கும்
சங்கர மடம் கோசாலை அப காரியங்கள் செய்ய வசதியான இடம்
×××
ஸ்ரீநிவாச ஐயர் தெரு ஸ்ரீநிவாச பிள்ளைத் தெரு
தபால்காரனுக்கு அடிக்கடி தலைவலி தரும் தெருக்கள்
இப்போது சீனிவாசா தெரு
×××
பரோடா தெரு
தம்பையா ரெட்டி தெரு
பட்டேல் தெரு
சர்தார் மாணிக்கம் தெரு
ராஜகோபாலன் தெரு
போஸ்டல் காலனி
மிதிலாபுரித் தெரு
பக்தவச்சலம் தெரு
மூர்த்தி தெரு
இப்படிப்பல தெருக்கள் இருக்கின்றன
×××
ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில்
ஸ்ரீ காசி விசுவநாதர் கோவில்
ஸ்ரீ சத்தியநாராயணா பெருமாள் கோவில்
×××
மேற்கு மாம்பலத்தில் இருக்கும் சிறந்த பள்ளிக்கூடங்கள்
கல்விதொகு இங்குள்ள சில பள்ளிகள்:
அஞ்சுகம் உயர்நிலைப் பள்ளிக்கூடம்
ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா
ஸ்ரீ பி. எஸ். மூதா பெண்கள் பள்ளிக்கூடம்
ஸ்ரீ நாராயணா மிஷன் பள்ளிக்கூடம்
பாரதமாதா துவக்கப்பள்ளிக்கூடம்
×××
மேற்கு மாம்பலம் வசிப்பதற்கு ஒரு தரமான பகுதி
வாழ்க தமிழ் ஹிந்து தேசம்
வாழ்க பாரதம்
No comments:
Post a Comment