பதில் தேடுகின்றேன் தொடர் 3
By பிரேமா மாமி(80 yrs)
எப்படி 15நாட்கள் ஓடியது என்றே தெரியவில்லை!!!! பிள்ளை அன்று வந்து எப்படி கோபித்துக் கொண்டான்? என்ன செய்வது?பாவம் மனிதர் பசி என்று சொன்னார்! ஒரு வாய் பாயசம் கொடுத்துஅனுப்பியிருக்கலாம்!நினைத்து நினைத்து அழுது சீதாலக்ஷ்மிக்குவேதனைதான் மிஞ்சியது!! இப்போதுஇந்தசெலவுவேறு!!
கோவையில் பிறந்த வீடு போயிருந்த மருமகள் வந்துவிட்டாள்!அவள்பிறந்தவீட்டில் மூத்த பெண்!!ரொம்ப செல்லம்!!!!அடிக்கடி மயக்கம் என்று சொல்லிக்கொண்டு பிறந்த வீட்டுக்கு கிளம்பி விடுவாள்!!
சீதாலட்சுமியும் முடிந்தவரை அவளை வேலை வாங்குவாள்!! திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் மருமகள் மீனாவுக்கு குழந்தை பிறக்கவில்லை!
ஆச்சு! இரண்டாவது பெண் சச்சு.. இப்போது தான் மூன்றாவது பெண் குழந்தை உடனேயே 60நாட்கள்ஆனதும் கொண்டுவிட்டு ஆகிவிட்டது!
என்ன செய்வது என்று கலங்கி நிற்கும் போது.... அடுத்த பிரச்சனை! போஸ்ட் கார்டு ரூபத்தில் வந்துவிட்டது.....
மதியம் கடையிலிருந்து வந்த மகன் ராமன் அவசரம் அவசரமாக சாப்பிட்டு அம்மாவிடம் இரண்டாவது மகளிடமிருந்து வந்த போஸ்ட் விஷயத்தை சொன்னான்!
அதில் குறிப்பிட்டிருந்த விஷயம்--"அண்ணா நீ உடனே வந்து என்னை அழைத்துப் போய் விடு இங்கு இனி நான் இருந்தால் பிழைக்க மாட்டேன்"
அதில் அவளது இயலாமையும் துக்கமும் கஷ்டமும் ஏகமாக பிரதிபலித்தது...
உடனே இராமன் தங்கையை அழைத்துவர கிளம்பிவிட்டான். பஸ்ஸில் போனால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம்.
மகன் கிளம்பிப் போனதும் சீதாலட்சுமி மனம் மீண்டும் முன்பு வந்தபோது மகள் சொன்ன விஷயங்கள் நினைவில் வந்து மோதியது...
மகளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் ஆறு நாத்தனார் அதில் நான்கு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. வீட்டில் இரண்டு பேர். உறவில் மாமா ஒருவர் கூட இருக்கிறார். குடும்பமே கோபக்கார குடும்பம். வாய் பேச்சே கிடையாது. எதற்கும் அடிதான். அந்த மகானுபாவர் ஓ தன் தங்கைகளையும் கொஞ்சம் அடிக்கத்தான் செய்வார். ஆனால் மனைவியை அடித்து நொறுக்கி விடுவார்.
அவருக்கு பதினெட்டு வயதிலும் சரஸ்வதிக்கு பதிமூன்று வயதிலும் (சாரதா சட்டம் வருவதற்கு முன்) திருமணம் ஆகிவிட்டது. சரசு பெயருக்கு ஏற்றார் போல் மிக அழகாக இருப்பாள். அவளுக்கு வெந்நீரில் குளிப்பது ரொம்ப பிடிக்கும். வெந்நீரில் குளித்தால் உடற்கட்டு குறைந்துவிடும் என்று கணவர் சம்மதிக்க மாட்டார். அதற்கு அடி. சரசுவுக்கு காப்பி ரொம்ப பிடிக்கும்.. காபிக்கும் இதே கதை அடிதான். சமையலில் பாகற்காய் கறிக்கு சர்க்கரை போட்டால் சரசுவுக்கு பிடிக்கும். அதுவும் கூடாது அடி. இன்னும் ஒரு சில பல விஷயங்கள் வீட்டில் உள்ள இரண்டு நாத்தனார்கள் மூலம் கணவரின் கோபத்தை தூண்ட ஏதுவாக இருக்கும்.
சரசுவுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை.
இன்றும் இப்படித்தான் சரசு நெஞ்சில் ரொம்ப வலிக்கிறது. டாக்டரிடம் காட்ட வேண்டும். முடியவில்லை என்று சொல்லி இருக்கிறாள். அதற்கு கணவரோ இந்த வயதில் எப்படி நெஞ்சு வலி வரும்? பொய் சொல்லுகிறாய். அதற்கு செம அடி கொடுத்துவிட்டு ஆஃபீஸ் போய்விட்டார். இரண்டு நாத்தனாரும் மாமாவும் கிராமத்திற்கு போய் விட்டார்கள். சரசு முடியாமல் மயங்கி கீழே விழுந்து விட்டாள். நினைவு வந்த பின் மெதுவாக எழுந்து வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டாவது பெண் உள்ளே வந்தபோது கொஞ்சம் தண்ணி வேண்டும் என்று கேட்டாள். ஆதி விளையாட்டுப் போக்கில் போ போ என்று சொல்லிவிட்டு திரும்ப விளையாட போய்விட்டது. சிறிது நேரம் பொறுத்து பெரிய பெண் உள்ளே வந்தபோது சரசு தண்ணி வேண்டும் என்று ஜாடையால் கேட்டிருக்கிறாள். அந்தப் பெண் தண்ணி கொண்டு கொடுத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு தன் அண்ணனுக்கு தபால் கார்டு எழுதி போட்டு விட்டாள்!
தங்கையைப் பார்க்க வந்த அண்ணனோ சரஸ்வதி நிலைமையைப் பார்த்து உடனேயே அவளையும் 3மாத கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.. மற்ற பெரிய இரண்டு பெண் குழந்தைகளையும் பக்கத்து வீட்டில் சொல்லி விட்டு விட்டு வந்து விட்டார்!
அழைத்து வந்து இரண்டு நாட்களில் டாக்டரிடம் காட்டினாள் டீபி என்று சொல்லிவிட்டார்!! அந்த காலத்தில் இந்த வியாதி ரொம்ப அபாயகரமானது! மருந்து கிடையாது! ஒட்டுவாரொட்டி! எல்லோரும் பயப்படுவார்கள்! ஆகவே சரசுவை மாடியில் உள்ள தனியறையில் வைத்து பூட்டி விட்டார்கள்.
மூன்றுமாத கைக்குழந்தை தனியாக தாயிடமிருந்து பிரிக்கப்பட்டது! சீதாலட்சுமியோ சின்ன மூணாவதுபெண்ணோ மாடிபக்கம் போக மாட்டார்கள்! மகனும் மருமகளும் தான் மாடிக்குப் போய் சரசுவுக்கு ரூமை சுத்தம் செய்து அவளுக்கு தலைவாரி விட்டு அவளது துணிகளை துவைத்து கொடுத்து அவருக்கு சாப்பாடு போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து பழங்களை ஜூஸ் செய்து கொடுப்பது என்று அவளுக்கு உள்ள அத்தனை வேலைகளையும் மகனும் மருமகளும் தான் கவனிப்பார்கள்! டாக்டர் வீட்டுக்கு வந்து அடிக்கடி பார்ப்பார்! ரத்த ரத்தமாக வாந்தி எடுப்பாள்! அதையும் சுத்தம் செய்ய வேண்டும்! அவளது கணவரோ எப்பவாவது வருவார். வரும்போது சாத்துக்குடி பழம் (அந்த காலத்தில் துணிகளே ரேஷனில் தான் கிடைக்கும்) கொஞ்சம் ஜாக்கெட் பிட் என்று ஏதோ முடிந்ததை வாங்கி வந்து சரஸ்வதி இடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு போய்விடுவார்! அவரைக் கண்டாலே சீதாலட்சுமிக்கு பிடிக்காது! அப்போது அவருக்கு அரசாங்க சம்பளம் 40 ரூபாய் தான்!இப்படியே எட்டு மாதங்கள் கடந்துவிட்டன?
No comments:
Post a Comment