சப்த விடங்க ஸ்தலங்கள்
======================
விடங்கம் என்றால் சிற்பியின் உளி இல்லாமல் சுயம்பு லிங்கம். டங்கம் என்றால் கல் சிற்பியின் சிற்றுளி என்று அர்த்தம்.
விடங்க லிங்கம் என்பது மிகச்சிறிதாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் கோவில்களில் இதை ஒரு பெரிய LOCKERக்குள், இன்னொரு சிறிய LOCKERல் வைத்திருக்கிறார்கள்.
இதை தரிசித்தால், சொர்க்கம் செல்லலாம் மற்றும் அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விடங்க லிங்கத்தை, இந்திரன் தனக்கு பூஜிக்க தருமாறு வற்புறுத்தி கேட்டதால் இந்திரனிடம் சிவன் விடங்க வடிவத்தை தந்தார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.
சிவபெருமான் போகத்திற்கு இடமளிக்கும் இந்திர லோகத்தில் விடங்க லிங்கத்தை வழிபாடு செய்வது கடினம் என்று விடங்க லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என திருவுள்ளம் கொண்டார்.
முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஒரு சிவராத்திரி இரவில், சிவன் காட்சி கொடுத்து இந்திரனிடம் இருக்கும் சிவலிங்கத்தை வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்ற அசுரனை கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவதம் வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.
வாலாசுரனைக் கொன்று விடங்க வடிவத்தை வாங்கி வரும்படி சிவன் முசுகுந்தனுக்கு யோசனையும் சொன்னார். முசுகுந்தன் சிவனிடம், அப்படியே செய்கிறேன். ஆனால், விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும் என்றான். சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் மட்டுமின்றி முனிவர்கள், தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.
பிறகு, முசுகுந்தன் வாலாசுரணை வெற்றிக்கொண்டு இந்திரனிடம் விடங்க லிங்கத்தை கேட்க, இந்திரன் தேவலோக விஸ்வகர்மாவை அழைத்து தன்னிடம் இருந்த அசல் விடங்க லிங்கம் போலவே இன்னொரு லிங்கம் செய்து தருமாறு சொல்லி அதை முசுகுந்தனிடம் கொடுத்தான், சிவபெருமான் கருணையால் முசுகுந்தன் இது அசல் அல்ல என்று தெரிந்து கொண்டு, (தினமும் தேவலோக மலர்களால் பூஜிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட செங்கழுநீர் பூ வாசம் கொண்டு கண்டுபிடித்தார் என்றும் சொல்வதுண்டு )
இவ்வாறு ஆறுமுறை நடந்து, பின்னர் கடைசியில் ஏழாவதாக தன்னிடம் இருந்த அசல் விடங்க லிங்கத்தைக் கொடுத்தான் இந்திரன், அதுமட்டுமல்ல பின்னர் எல்லா ஏழு லிங்கங்களும் உனக்குத்தான் என்று தேவேந்திரன் முசுகுந்தனுக்கு கொடுத்து விட்டான். இந்த ஏழு விடங்க லிங்கங்களும் முசுகுந்தச் சக்ரவர்த்தியால் ஏழு ஊர்களில் வைத்துப் பூஜை செய்யப்பட்டு வந்தன.
தற்போதும் இவை தினமும் பத்திரமாக எடுத்து பாலும் தேனும் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள்.. யாரையும் அருகே அனுமதிப்பதில்லை. வெளியிலிருந்தே பார்க்கவேண்டும். அபிஷேகத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு தருகிறார்கள். அபிஷேகம் முடிந்தவுடன் பட்டுத் துணியால் துடைத்து சிறிது புஷ்பம் சந்தனம் வைத்து உள்ளே வைத்து பூட்டி விடுகிறார்கள். சுவாமி சன்னதி அருகே உள்ள தியாகராஜர் சன்னதியில் இருக்கும்.. அபிஷேக சமயத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்..
திருவாரூர் 👉 வீதி விடங்கர் 👉 அஜபா நடனம் ( மூச்சுக்காற்று )
திருநள்ளாறு 👉 நாகவிடங்கர் 👉 உன்மத்த நடனம் (பித்தன் ஆடுவது போல் )
நாகப்பட்டினம் 👉 சுந்தரவிடங்கர் 👉 தரங்க நடனம் ( கடல் அலைகள் போல் )
திருக்காராயில்👉 ஆதிவிடங்கர் 👉 குக்குட நடனம் ( கோழியைப் போல்)
திருக்கோளிலி 👉 அவனிவிடங்கர் 👉 பிருங்க நடனம் ( வண்டு மலருக்குள் குடைந்து )
திருவாய்மூர்👉நீலவிடங்கர்👉கமலநடனம் (தாமரைபோல் )
வேதாரண்யம் 👉புவனிவிடங்கர் 👉 ஹம்சபாத நடனம் ( அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது )
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரே நாளில் 7கோவில்களையும் பார்க்கலாம். திருவாரூரில் தங்கிக் கொண்டால் சிறப்பு..
அருகருகே நிறைய பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருப்பதால் நாங்கள் இரண்டு நாட்களில் பார்த்தோம்.. நாங்கள் மூன்று பெரிய கோவில்களில் அபிஷேக நேரத்திற்கு சென்று விடங்க லிங்கத்தையும் அதன் அபிஷேகத்தையும் பார்த்தோம்.
நல்ல தேனாக கொண்டு சென்றதால் எங்கள் தேனிலேயே அபிஷேகம் செய்தார்கள்.. அங்கேயே சுத்தமான பசும் பாலும் வாங்கிக் கொடுக்கலாம்..
அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.. 🙏Thanks: A FB Post
No comments:
Post a Comment