அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்.....
இன்பம் தரும் இரட்டை ஆஞ்சநேயர்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மேலப்பாதி கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
முன் காலத்தில் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது. எனவே அந்தப் பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மக்களுக்கு இரண்டு மனித குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன.
சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாக இந்தக் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது. எனவே அந்த மக்கள், இரண்டு குரங்குகளுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கிவிட்டனர். இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி யாகும்.
அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல்....
தோஷங்களை விலக்கும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலபாதி என்ற ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனைத்து ஆலயத்திலும் ஒரு மூலவர் மற்றும் ஒரு உற்சவர் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆலயத்தில் ஒரே தெய்வம் இரட்டையராக இருப்பது மிகவும் அரிது. இத்தலத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிப்பட்டால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம், மற்றும் சனி தோஷம், ராகு, கேது, போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக் வணங்குவார்கள். பிறகு தான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
No comments:
Post a Comment