மீண்ட சொர்க்கம்
=================
சேகருக்கு மிகவும் எரிச்சலாக வந்தது காரணம் வர்ஷா. சேகர் ஒரு முப்பத்தி எட்டு வயசு இளைஞன். ஐஐஎம் MBA graduate அந்த கம்பெனியின் பெரிய பொறுப் பில் இருப்பவன்.வர்ஷா அவன் கீழ் வேலை செய்பவள்.அவள் Mtech graduate. அந்த கம்பெனி யில் உள்ள பெண்களில் சில பேர் சேகர் தன்னை பார்க்க மாட்டானா என்று ஏங்கி கொண்டு இருக்க வர்ஷா மட்டும் அவனை கண்டு கொள்வ தாகவே இல்லை .சொல்லப் போனால் அவனுக்கு அது பெரிய இன்சல்ட் ஆகவே இருந்ததது. வேலைக்காக அவன் கேபின் க்குள் வந்தாலும் அதை தவிர எதுவும் பேசாத அவள் ,அவன் அப்படி எதாவது கேட்க ஆரம்பித்தால் சாரி sir இந்த கேள்விக்கும் என் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொன்னாள்.அவளுக்கும் கிட்டத்தட்ட ஒரு 25 வயசு .resume ல பார்த்து தெரிந்து கொண்டது.
இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத அவனுக்கு வர்ஷா வின் நடவடிக்கை மிகவும் டிஸ்டர்ப் செய்தது .அறுபது பெர்சென்ட் பெண்கள் அவனுடன் வேலை செய்பவர்கள். எல்லோருமே ஆண்கள் மேல் விழுந்து பழகுவர்கள் இல்லை.ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் சிலர் அதில் இருக்கத்தான் செய்தார்கள்.இதில் வர்ஷா மட்டும் மிகவும் வித்தியாசமான கேரக்டர் ஆக இருந்தாள். நீ பாஸ் என்றால் கம்பெனி வேலைக்கு மட்டுமே என்பது போலவும் பொது வெளியில் இரு பாலாரும் வேலை செய்யும் இடத்துல ஒருவர் மற்றவரிடம் நட்பாகவும் பழகுவது அவசியமில்லை என்பது போலவும் இருந்தது அவளது நடவடிக்கை இது வரை பெண்களிடம் இருந்து விலகி இருந்த அவனுக்கு வர்ஷா interesting ஆக தெரிந்தாள். எப்படியாவது அவளை மடக்கி விட வேண்டும் என்ற அவன் எண்ணம் நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்தது..ஆனால் அவள் கழுவிய மீனில் நழுவிய மீனாக இருந்தாள்.நாளுக்கு நாள் அவளின் பாராமுகம் அவனை வதைத்தது. பேசாமல் வேலையை விட்டு போய் விடலாமா என்று நிலைமைக்கு வந்து நின்றான்.
அன்றைக்கு வேலைக்காக அவளை கேபின் க்கு கூப்பிட்ட போது ரிசப்ஷன் லிருந்து ஒரு ஃபோன் வர அதில் வர்ஷா வின் உறவினர்கள் இருவர் அங்கு வெயிட் பண்ணுவதாக சொன்ன உடன் அவன் வர்ஷா வை கீழே அனுப்பினான் ஆனால் அவனுக்கு வர்ஷா வின் உறவினர்கள் யார் என்று பார்க்கும் ஆசையில் கேண்டீன் க்கு வந்த அவன் அங்கு யாரையும் காணாமல் வெளியே வந்தான். வந்தவன் அங்கு அவளுடன் ஆபீஸ்ன் முகப்பில் இருந்த கார்டன் ல நின்று கொண்டு இருந்த இருவரையும் பார்த்து திகைத்தான் . அவன் மனசுக்குள் ரயில் ஓடியது .தடக் தடக் எனும் சப்தம் அவனுக்கே கேட்டது. முகத்தில் இருந்த வியர்வையை கர்ச்சீப் ஆல் துடைத்த அவன் கேபின் சேர்ல எப்படி வந்து உட்கார்ந்தான் என்று அவனுக்கே புரிய கொஞ்ச நேரம் ஆனது. வலி தலையை பிளந்தது.ஆபீஸ் பாய் ஐ கூப்பிட்டான் அனாசினும் காப்பியும் வாங்கி வர சொன்னான்.மூன்று மணி வாக்கில் அவனால் தலைவலி தாங்க முடியாமல் வீட்டில் போய் படுத்தான் .திருப்பி திருப்பி அவன் கண்களில் அவர்கள் வந்து நின்றார்கள் .தவித்தான். தான் செய்த தப்பை நினைத்துவருந்தினான்
எப்படி பிராயச்சித்தம் செய்வது என்று தெரியாமல் தவித்தான். வர்ஷா வுக்கு அவர்கள் என்ன உறவு வேண்டும் என்று மனம் கேட்டு அலை பாய்ந்தது
தவித்து கொண்டு இருந்த அவனுக்கு வாசல் மணி சத்தம் கேட்டதும் எழுந்து கதவை திறந்த அவன் நின்றவர்கள் பார்த்து அதிர்ந்தான் .அக்கா நீ எப்படி இங்க என் அட்ரஸ் எப்படி கிடைத்தது வர்ஷா உனக்கு யாரு நீ இத்தனை நாள் எங்கு இருந்த என்று வரிசையாக கேள்வி கேட்ட அவனிடம் என்னை உள்ளே வர விடுவாயா இல்லை கேள்வி கேட்டு அப்படியே அனுப்பி விடுவாயா என அவள் கேட்க அவன் நகர்ந்து உள்ளே வர வழி விட்டான்
அவன் மனது பல வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த பழைய கதையை அசை போட்டது.அது அவனுடைய உடன் பிறந்த அக்கா. அவனுக்கும் அக்காவிற்கும்11 வயசு வித்தியாசம் more or less அவள் அவனுக்கு ஒரு தாய் போல தான் இருந்தாள் .அந்த 13 வருஷம் அவனுக்கு ஒரு சொர்க்கத்தில் இருப்பது போல தான் இருந்தது .அக்கா அவனிடம் மிகவும் பிரியமாகவும் தான் பெற்ற பிள்ளையை வளர்ப்பது போல த்தான் அவளை வளர்த்தாள். அவனுடைய 13 வது வயதில் அக்கா தான் காதலிப்பதாக சொன்னதை அப்பா ஒத்து கொள்ள வில்லை அதனால் அவள் காதலித்தவன் உடன் ரகசிய திருமணம் செய்ய வீட்டை விட்டு ஓடினாள். அவள் ஓடிய அன்று இரவே அவன் அப்பா அதை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கினார்
அவன் மேல் உயிரையே வைத்து இருந்த அம்மா அப்பாவின் இழப்பில் இருந்தே வாழப் பிடிக்காமல் இருந்தவள் அவனுடைய 18வது வயதில் இறந்தாள். அம்மா இறப்பிற்கு வந்த அக்காவை அவன் உள்ளே விடவில்லை நான் ஒரு முறை அம்மாவை பார்த்து விட்டு போகிறேன் என்ற அவளை கதற கதற வெளிய துரத்தினான் .தன்னை பெற்ற பிள்ளை போல வளர்த்த அவள் மேல் அவனுக்கு ஏன் தான் அப்படி ஒரு கண் மூடித் தனமான கோபம் வந்தது என்று எத்தனை தடவை யோசித்தாலும் அவனுக்கு புரியவில்லை. அம்மாவின் இழப்பு அதற்கு இன்னும் தூபம் போட்டது .அதற்கு பிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறான்
பதினெட்டாவது வயதில் இருந்து இன்று வரை கண்ணால் கண்ட நிறைய விஷயங்கள் அவன் அக்காவுக்கு செய்தது மகா பெரிய துரோகம் என்று உணர்த்தியது
எத்தனையோ friends களின் காதல் திருமணத்துக்கு சாக்ஷி கையெழுத்திட ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் வந்தான் ஒவ்வொரு தடவை போய் வரும் போதும் அக்கா நினைவு வரும் அவள் என்ன பெரிய தப்பு செய்தாள்.விவரம் புரியாத வயதில் அவளுக்கு பெரிய தண்டனை குடுத்து விட்டேன் என்று வருத்த படுவான் அவளை கண்டு பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் முடியவில்லை இன்று கண்ணெதிரே நிற்கிறாள் என்று நினைத்த அவனை சேகரு என்ற அக்கா குரல் இந்த உலகத்துக்கு கொண்டு வந்தது.
சொல்லுக்கா என்றான்
உன்னை நான் எப்படி கண்டு பிடித் தேன் பார்த்தாயா என்றவள் வர்ஷா அவள் பெண் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல மறுத்து விட்டாள் வேணும்னா வர்ஷா ட்ட கேட்டு தெரிஞ்சுக்க என்றாள்
நான் இங்கு வந்தது வர்ஷா க்கு தெரியாது உன் ஆஃபிஸ் ல இருந்து வர்ஷா க்கு தெரியாமல் உன் அட்ரஸ் வாங்கி வந்தேன் என்ற அவளிடம் அக்கா நீ இங்க என்கூட ஒரு இரண்டு மூன்று நாள் தங்கு நாளை காலை நான் ஆபீஸ் கிளம்பி கொஞ்ச நேரம் கழித்து நீ ஆபீஸ் வா என்றதும் அவளும் மறுப்பு ஏதும் சொல்ல வில்லை .
மறுநாள் காலை ஆபீஸ் கிளம்பிய அவன் கர்ம சிரத்தையாக டிரஸ் செய்து கொண்டான் .அவனுக்கும் வர்ஷா க்கும் 13 வயசு வித்தியாசம் என்ற உறுத்தல் அவன் நினைவில் இருந்தது. அக்கா பெண் என்று தெரிந்தது, அதிக வயசு வித்தியாசம் இதெல்லாம் இத்தனை நாளா எழுந்த அவனது ஆசையை அவன் மனதுள் அடக்கியது இது தப்பு ,நடக்காது நான் ஒரு நல்ல மாமனா அவளுக்கு தகுந்த வரன் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் .ஆனாலும் மனக் குரங்கு ஒரு ஓரத்தில் இந்த முடிவை ஒத்து கொள்ள முடியாமல் தவித்தது.
ஆபீஸ் ல நுழைந்த அவன் வர்ஷா வை பார்த்து come to my cabin என்று அதிகாரமாக சொல்லி விட்டு கேபின் ல போய் உட்கார்ந்தான்.வர்ஷா உள்ளே நுழைந்த வுடன் எழுந்தவன் அவள் பக்கத்து chair ல உட்கார்ந்தான். வர்ஷா க்கும் அவன் நடவடிக்கைகள் சிறுது கலக்கத்தை உண்டு பண்ணியது.
நான் யார் தெரியுமா உன் முறைப் பையனாக்கும் என்று அவளை வம்புக்கு இழுத்தான் .திகைத்து போன அவளை மேலும் மேலும் பேசி சீண்டினான் .ஒரு ஸ்டேஜ் ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது .
அவளுக்கு புரிந்து விட்டது அவன் தான் யார் என்பதை கண்டு பிடித்து விட்டான் என்று.
மாமா என்ன மன்னிச்சுடு நான் உன்னை ரொம்ப insult செய்தேன் காரணம் என்ன தெரியுமா நீ பாட்டியின் சாவுக்கு வந்த அம்மாவை அழ அழ திருப்பி அனுப்பின. அப்போ எனக்கு விவரம் புரியாத வயசு .அதற்கு பிறகு நான் வளர வளர அம்மா எப்போதும் உன் போட்டோ வை பார்த்து பார்த்து அழுவாள்.ஒரு ஸ்டேஜ் ல எனக்கே கோபம் வந்து அம்மாவை திட்டி இருக்கிறேன் உனக்கு என்னை விட அவன் முக்கியமா என்று. ஆனால் அம்மாவுக்கு நீ என்றால் எவ்வளவு உயிர் என்று புரிந்து கொண்டேன்
உன்னையும் அம்மாவையும் சேர்த்துக் வைத்தது க்கு அப்புறம் தான் என் திருமணம் என்று அம்மாவிடம் தெளிவாக சொன்னேன் நான் காலேஜ் ல ஹாஸ்டல் ல படிக்கும் போது நம்ம ஊர் பெண் ஒருத்தி என்னுடன் படித்தாள் அவள் மூலமாக உன்னை பற்றிய தகவல்கள் ,அந்த ஊர் நண்பன் திருமணத்தில் நீ இருந்த போட்டோ எல்லாம் எனக்கு கிடைத்தது .கடவுளின் கருணை தான் போல எனது ஃபைனல் இயர் ல உங்க கம்பெனி எங்கள் காலேஜ் க்கு கேம்பஸ் இன்டர்வியூ வர எனக்கு இந்த கம்பெனி ல வேலை கிடைத்தது.அதும் நீ இருக்கும் ப்ராஜக்ட் க்கு நான் செலக்ட் செய்யப்பட்டேன் என்பது எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் .நீ சரியான விஸ்வாமித்திரர் என்று கேள்விப் பட்டேன்.அதனால் தான் இந்த வித்தியாசமான அணுகுமுறை.
வாயில புண்ணு வந்தா நாக்குக்கு தெரியும் அந்த புண்ணை போய் தொட்டால் வலிக்கும் என்று ஆனாலும் அந்த நாக்கு என்ன செய்யும் அந்த புண்ணையே போய் தொட்டு தொட்டு வலியை ஏற்படுத்தி கொள்ளும் அது போல தான் நான் உன்னை இன்சல்ட் பண்ண பண்ண நீ என்னை பற்றி அதிகமாக யோசிக்க ஆரம்பித்தாய். நீ மாறியிருக்கிறாயா,
அம்மாவை மன்னித்தாயா இதெல்லாம் என் மனதில் இருந்த பெரும் பாரம். உன்னையும் அம்மாவையும் இப்போது
எப்படி பார்க்க வைப்பது என்று யோசி த்து கொண்டு இருந்தேன் ஆனால் நான் உன் அத்தை பெண் என்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அப்போது கேபின் உள்ளே வந்து கொண்டு இருந்த தன் அம்மா அப்பாவை கேள்வியுடன் பார்த்தாள்.
அம்மாவும் வர்ஷா என்னை மன்னிச்சிடு இவ்வளவு தூரம் வந்து விட்டு என் தம்பியை பார்க்காமல் போக மனசு கேட்கவில்லை .அதான் நீ சொன்னதை கேட்காமல் உனக்கு தெரியாமல் ஆபீஸ் ல அட்ரஸ் வாங்கி வீட்டிற்கு போனேன் என்ற அவளிடம்
ஏன் மா இவ்வளவு அவசரம் ஆக்க பொருத்த உனக்கு ஆர பொருக்க முடியவில்லையா என்று கேட்டாள்.
சரி அக்கா இப்போ வர்ஷா க்கு நல்ல பையனா பார்த்து மாமனா லக்சனமா திருமணம் செய்து வைக்கனும் அதுதான் இப்போது என்னுடைய project என்று சொன்ன அவனிடம்
வர்ஷா மாமா அம்மா உன் போட்டோ வை பார்க்கும் போது எல்லாம் கோபத்தில் அவளிடம் இருந்து பிடுங்கிய நான் என் தோழி கொடுத்த போட்டோ வில் உன்னை பார்த்த பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு என் மனதில் இடம் குடுக்க தொடங்கி விட்டேன் .அம்மாவுக்காக மட்டும் நான் இங்கு வர வில்லை எனக்காகவும் தான் நான் வந்தேன் .திருமணம் என்று எனக்கு உண்டானால் அது உன்னோடு தான் என்று சொன்ன அவளிடம் வயசு வித்தியாசம் பற்றி அவன் பேச ஆரம்பிக்க
தம்பி இரண்டு மனங்கள் ஒன்று சேர்ந்த பின் வயசு ஒரு பெரிய விஷயமில்லை. உனக்கு வர்ஷா வை பிடித்து இருக்கா என கேட்க அவன் பதிலுக்கு அக்கா, கரும்பு தின்ன கூலியா என்றவன் வர்ஷா வின் அருகில் வந்து அவள் கையையும் அருகில் இருந்த அக்காவின் கையையும் பற்ற அவனது மீண்ட சொர்க்கம் அவர்கள் கைகளில் இருந்தது அவன் மனதுக்கு புரிந்தது
சாரதா ஸ்ரீ நிவாசன்
24/12/2021
PC Mohan Manimala
No comments:
Post a Comment