சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 15
கார்த்தால காவேரி ஸ்நானத்துக்கு அப்புறம்வயிறு கபகப ன்றது. ஓட்டல்ல இன்றைய ஸ்பெஷல் பிஸிபேளாபாத்! லோக்கல் சமாச்சாரம்! எப்படி இருக்குன்னு பார்த்துடணும். கூடவே ரெண்டு வடையும், ஒரு கிண்ணம் தயிரும் ! அருமையான ஃபில்ட்டர் காஃபி! சும்மாச்சொல்லக்கூடாது..... கர்நாடகாவில் காஃபி நல்லாவே இருக்கு!
கும்பாஸ்.
திப்புவோட சமாதிக்கு பேராம். அவன் அப்பா அம்மாவுக்காக கட்டின சமாதில அவனையும் புதைச்சுட்டாளாம்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்னாங்கறது உண்மைன்னாலும் இந்துக்களை கொடுமை பண்ணிருக்கான்னும் சொல்லி இவரை இழுத்துண்டு வெளில வரேன்.
சமாதி போன தீட்டு போக காவிரில மறுபடி ஒரு முழுக்கு போட்டுட்டு ரூமை காலி பண்ணின்டு மேலகோட்டைக்கு பஸ் ஏறரோம்.
சரியா பனிரெண்டுமணிக்குக் கோவில் வாசலுக்கு வந்திருந்தோம். ஐயோ மூடி இருப்பாங்களோன்னு எனக்குள் ஒரு பதற்றம். இல்லையாம்..... ஒன்னரை வரை திறந்துதான் இருக்குமாம்!
அக்கம்பக்கம் ஒன்னும் கவனிக்காமல் சட்னு கோவிலுக்குள் புகுந்துட்டேன்.
விடுவிடுன்னு நேராப்போனது நாராயணனைத் தரிசிக்கத்தான்! நின்ற திருக்கோலம்! கையில் Gகதை இருக்கு! இவரை தரிசனம் செய்வது அந்த பத்ரி நாராயணரையே தரிசனம் செஞ்சதுக்கு ஈடாகுமாம். இங்கேயும் ஸ்தலவிருக்ஷம் பதரி மரமே! இந்தக் கணக்கில் நமக்கு ரெண்டு முறை பத்ரி ஆச்சு! இன்னொருக்கா போகணுமுன்னு இருக்கேன் பத்ரிநாத்துக்கு. அந்த அர்ஜுனனைப் பார்க்கணும் :
பலராமர் ஒருமுறை இந்தக் கோவிலுக்கு வந்துருக்கார். மூலவர் திரு நாராயணரைப் பார்த்தவுடன், த்வாரகாவில் பூஜையில் உள்ள ராமப்பிரியாவைப் போலவே இருக்காரேன்னு கவனிச்சுருச்சார். திரும்பிப்போய் கிருஷ்ணனிடம் சொன்னதும், ரெண்டுபேரும் திரும்ப வந்து பார்த்துருக்காங்க.'ஸேம் ஸேம்'னு ஆச்சரியமா இருக்கு! அப்ப இந்த விக்ரஹத்தை, இந்தக் கோவிலுக்கே கொடுத்துடலாமுன்னு முடிவு செஞ்சுட்டாங்க. அப்படித்தான் ராமப்பிரியா இங்கே வந்து சேர்ந்ததா கதை போகுது!
மொத்தத்துலே யுகங்கள் கடந்து போயும் ராமப்பிரியர் விக்கிரஹம் பூலோகத்தில் தங்கி இருக்கு!
கலிகாலம் ஆரம்பிச்சது!
எல்லா கெட்டதும் நடக்க ஆரம்பிச்சது.
இஸ்லாமியர், பாரதநாட்டுக்குள் நுழைஞ்சு ஆட்சி செய்ய ஆரம்பிச்சாங்க. கோவில்களில் செல்வங்கள் இருப்பதைத் தெரிஞ்சுக்கிட்டுக் கொள்ளையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. நல்லதெல்லாம் சாமிக்குன்னு ஒரு மனசு நமக்கு இருக்குல்லே! அதுதானே பட்டும், நகையுமா கடவுளரை அலங்கரிச்சுப் பார்த்துச் சந்தோஷப்படறோம், இல்லையா?
மாலிக்காஃபூர் படையெடுத்து வந்து கோவில் செல்வங்களையும் விக்கிரஹங்களையும் கொள்ளையடிச்சுக்கிட்டுப்போய் தில்லி சுல்தான் கஸானாவில் சேர்த்துக்கிட்டு இருக்கான். கூட்டத்தில் ராமப்ரியாவும் தில்லியில்!
No comments:
Post a Comment