Monday, December 27, 2021

அயல்நாடும் என் ஊரே

 பொது

      என் நாடும் பொன்னாடே

      அயல்நாடும்  என் ஊரே

   இங்கே USல் இந்தியர்களிடையே நவராத்திரி, தீபாவளி, பொங்கல் என்றாலும் களைகட்டுகிறது. கோவில்களில் ஆடிப்பூரம். கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம்,என அனைத்து பூஜைகளும் வெகு சிரத்தையாக செய்கிறார்கள். Halloween, Thanksgiving,  Christmas என்றாலும் அமெரிக்கர்களை விட ஆர்வமாக கொண்டாடுகிறார்கள் 

    இங்கு வந்ததற்காக எதையும் இழக்க இவர்கள் தயாராக இல்லை. நவராத்திக்கு ஒருமாதம் முன்பே மரபலகைகளை வாங்கி டிரில்லர் ஸ்க்ரு சகிதம் படிக்கட்டுகள் கட்டுவதில் நவராத்திரி தொடங்கி  விடுகிறது. கொலு பார்க்க குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தை காட்டித்தர ஒவ்வொரு வீடு களுக்கும் 200, 300பேர்கள் என விஜயம் செய்கிறார்கள். வாழைஇலை போட்டு வகைவகையான உணவுகளும் பாரம்பரிய முறையில் விருந்தினருக்கு வழங்குகிறார்கள். 

    தீபாவளி என்றால் மூன்று நாட்கள் பூஜையும் விரதமும் உண்டு ஒன்று கூடி வானங்கள் விட்டு கொண்டாடுதலிலும் குறைவில்லை.

    பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். அவரவர் வீட்டில் பொங்கல் கொண்டாடி விட்டு. மண்வாசனை மணம் வீச இங்குள்ள பள்ளிகளின் அரங்கத்தை வாடகைக்கு எடுத்து தமிழ் மணம் வீசும் கவிதை போட்டி பாட்டு போட்டி நடன போட்டி, கோலப்போட்டி ஆடைஆணிகலப் போட்டி என குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊர் நினைவை உசுப்பேத்துகிறார்கள ( இங்கே என் மருமகள் ஒரு பக்கம் பேத்தி ஒருபக்கம் பாட்டி நான் ஒருபக்கம் போட்டிகளில் பங்கெடுக்க தயாராகி வருவது தனிக்கதை)

தமிழ் மன்றங்களில் தமிழ் கற்றும், சின்மயா பள்ளிகளில் வேதமும், இதிகாசங்களும் கற்றும் குழந்தைகள், புடம் போட்ட தங்கங்களாக ஜொலிக்கிறார்கள். (நம்ம ஊர்களில் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பது பெருமை. இங்கே தமிழ் தெரியும் என்பதே பெருமை.)

    எவ்வளவுக் கெவ்வளவு நம் கலாசாரத்தை பேணுகிறார்களோ அவ்வளக்கவ்வளவு,  அமெரிக்கப் பண்பாட்டையும் பின்பற்றுகிறார்கள். நம் குழந்தைகள் இங்கே அன்னியப் பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். அவர்களது பண்டிகைகளை மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 

           Halloween பண்டிகைக்கு அவர்கள் சாக்கலேட் தந்தால் இவர்கள் சிறு சிறு பரிசுப் பொருட்களையும் சேர்த்து தருகிறார்கள். ஒரு நாள்தான் Halloween ஆடை குழந்தைகள் அணியமுடியும் என்றாலும் அவர்கள் விருப்பம்போல் வாங்கி தந்து வீடு வீடாக சென்று மிட்டாய்களை சேகரித்து மகிழ்கிறார்கள்

      Thanks giving  day அன்று அமெரிக்கன் style ல் சமைத்து குடும்பத்திலுள்ள அமர்ந்து சாப்பிடுகிறார்கள். சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள் அன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு தினம் அனைவர் வீட்டு வாசலிலும் Amazonம் Wal-Martம்  பெட்டி பெட்டியாக  வந்து இறங்கிக் கொண்டே  இருக்கும். 

     நவம்பர் கடைசி வாரம் ஆரவாரமாக ஆடை ஆபரணங்களுடன் Christmas tree முளைத்து விடும். எங்கள் வீட்டிலும் ready ஆகிவிட்டது. பேத்தி empty பெட்டிகளை gift wrap செய்து அதன் கீழ் அடுக்கினாள். மாட்டுப் பெண் பேத்திக்கு தெரியாமல் அவற்றில் gifts ஐ ஒளித்து வைத்து இருக்கிறாள். போறா குறைக்கு fire place மீது sacks தொங்குகிறது. Christmas அன்று பேத்திக்கு ,🎅, நிறைய gifts தரப்போகிறார். Christmas eve அன்று எங்கள் வீட்டில் getogether இருக்கிறது.பேத்தி choir ல் பாடுகிறாள். புது வருடம் பிறக்கும் வரை Christmas கொண்டாட்டங்கள் தொடரும். ஜனவரி பிறந்த உடன் மண்வாசனை தொடரும். பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம் ஆகிவிடும். 

ஒரு சொந்தமுமில்லே
ஒரு பந்தமுமில்லே
நட்புக்களே சேர்ந்து 
சொந்த மண்ணையும் 
வந்த மண்ணையும்
மதித்து பண்டிகை கொண்டாடி மகிழ்கிறார்கள்

அனைவருக்கும் கிருஸ்துமஸ் புதுவருட நல் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment