Saturday, December 25, 2021

சென்னை To பெங்களூரு பகுதி 14


சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 14

கோயிலில் தரிசனம்முடிந்து வெளியே கோபுரத்தின்முன் சிற்பங்களின் முன் போட்டோ எடுத்துக்கறோம் 

பின்னர் அழகான பச்சை பசேல் வயல் வெளியில் என்னை போட்டோ எடுக்கறார்

பச்சை பசு வெளியில் நடந்து போனா அங்க ஒரு சின்ன ஓட்டல். கார்த்தாலேர்ந்து அலைஞ்சதுல பயங்கர பசி. 

சூடா இட்லியும் கத்தரிக்காய் கொத்ஸும். அமிர்தமா இருக்கு. 

அப்படியே நடந்து ரோடுக்கு வரோம். அடுத்ததா ஶ்ரீரங்கப்பட்ணம் போகறோம்கறார். 

கூட்டமா வர பஸ்ல அடைஞ்சுண்டு ஒருமணி நேரம் கழிச்சு ஶ்ரீரங்கப்பட்டணம் போறோம். லாடஜ் தேடி அங்க இங்க அலைஞ்சு ஏசி ரூமோட 1000/- க்கு எடம் கிடைக்கறது. 

ஶ்ரீரங்கம் மாதிரியே காவேரி ரெண்டாப்பிரிஞ்சு்ரங்கனாதர் பள்ளி கொண்ட கோயில். 

1400 வருஷத்துக்கு முன்னால கட்டினதாம். 
காவேரி தீர்த்தமாடிட்டு கோயில் போறோம் 
ஆதிசேஷன் மீது கள்ள கொண்ட பெருமாள். 

பஞ்சரங்க ஷேத்திரத்தில் ஒன்று. 

மேல்கோட்டையில் தங்கியிருந்த ராமானுஜர் இங்கயும் கைங்கர்யம் செய்து இருக்கார். 

ரங்கநாயகி தாயாருக்கு அதன் சன்னதி. 

கோயில் தரிசனம் முடிஞ்சு வெளில வந்தா 

நிமிஷாம்பா கோயில்...வர்ற வழியில நந்திவரம் ஸ்கூல்ல கூட வேலை பார்த்த உமா டீச்சரை பார்க்கறோம். வேற டூர்ல வந்துருக்காளாம். 

உள்ளூர்ல பார்க்க முடியாத ஃப்ரெண்டை வெளியூர்ல பார்க்கறதுல ஒரு சந்தோஷம். 

நிமிஷாம்பா நம்ம வேண்டுதல ஒரே நிமிஷத்துல நிறைவேத்துவாங்கறதால அந்த பேராம். 

பக்கத்துல க்ஷனாம்பிகா கோவில் அனு ஒண்ணு இருக்கு

இந்த அம்பாள் ஒரு க்ஷனத்துல(நொடி)வேண்டுதல நிறைவேத்துவான்னு அந்த பேராம். 

நாங்க போன வருஷம் கொரானான்னா என்னனு தெரியாத சமயம்கறதால 

அது சம்பந்தமா வேண்டிக்க முடியல. அடுத்து கரிகிரி வாசன் கோயில். 

ஶ்ரீனிவாசர்க்குதான் இந்தப்பேரு..இது ஶ்ரீரங்கப்பட்டணத்துக்கு வெளில ஒரு மலை மேல ( கரிகட்டான்னு பேரு)இருக்கு..பெருமாள பைராகி வெங்கட்ரமணான்னு உள்ளூர்காரா அழைக்கிறா..

450 படி ஏறி பெருமாள சேவிச்சுட்டு வெளிய வந்தா 

காவேரி மாலை போல ரங்கநாதர சுத்தி இருக்கற கண்கொள்ளா காட்சி. 

இதைத்தவிர லஷ்மி நாராயணர் ,கங்காதரேஸ்வரர் ஜோதி மகேஸ்வரர்னு நெறைய கோயில் இருக்கு. 

இவர் திப்பு சமாதிக்கு இன்னக்கே போயிட்டு மேலகோட்டை போகணும்கறார். 

நான் கோயில் போய்ட்டு இன்னிக்கு அங்கல்லாம் வேண்டாம். ரெஸ்ட் எடுத்துண்டு நாளைக்கு ‘ங்கறேன்.







No comments:

Post a Comment