சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 16
ராம்ப்ரயாவுக்கு என்னவாயிற்று?
பாரதத்தின் தென்பகுதியில் சோழர் ஆட்சி நடக்கும் சமயம். கிருமி சோழன், சைவமே பெருசுன்னு விஷ்ணு பக்தர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டு இருக்கான். நம்ம ராமானுஜரை சிறையில் அடைச்சுச் சித்திரவதை பண்ணால், வைணவம் அழிஞ்சுருமுன்னு அவனுக்கொரு தோணல். ராமானுஜரின் சிஷ்யன் கூரத்தாழ்வானைப் பிடிச்சு வச்சுக்கிட்டு, உன் குரு எங்கேன்னு கேட்டு சித்திரவதை செஞ்சு (தசாவதாரம் படத்து முதல் ஸீன் நினைவுக்கு வருதா? )கண்களைத் தீய்ச்சுடறான். அவர் கடைசிவரை சொல்லவே இல்லை. அவருக்கு(ம்) தெரியாதுன்றதுதான் உண்மை.
ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் ராமானுஜரை, அவருடைய பக்தர்கள் வேண்டிக்கேட்டுக்கிட்டு அவரை வேறொரு இடத்துக்கு ஜாகை மாற்றிடறாங்க. அப்பெல்லாம் பரதகண்டத்தில் அம்பத்தியாறு தேசம் இருந்ததாம். சாளுக்கியர் தேசத்துலே ஒரு ஊரான தொண்டமனூர்லே இருக்கார் நம்ம ராமானுஜர்.
அப்ப அங்கே மன்னரா இருந்த பிட்டி தேவன் ( விட்டல தேவராயன்) மகளுக்கு உடம்பு சரி இல்லை. எத்தனையோ அரண்மனை வைத்தியர்கள் பார்த்தும் சுகக்கேடு குணமாகலை. நம்ம ராமானுஜர், பெருமாளின் கிருபையால் அரசகுமாரியை சுகப்படுத்தினார். சமண மதத்தை சேர்ந்த பிட்டி தேவ், வைணவனா மதம் மாறினான். விஷ்ணுவர்தன் என்ற பெயரும் ராமானுஜரால் சூட்டப்பட்டது.
திருநாராயணபுரத்துக்குப் பக்கத்து ஊர்தான் இது. இப்ப திருநாராயணபுரத்துக்கு என்ன பெயர் தெரியுமோ? மேல்கோட்டை !
ஒரு சமயம் நம்ம ராமானுஜருடைய திருமண் தீர்ந்து போயிருக்கு. அப்ப அவர் கனவுலே பெருமாள் வந்து இன்ன இடத்துலே தோண்டிப்பாருன்னு சேதி சொல்றார் . அந்த இடம் ஒரு புதர் நிறைஞ்ச பகுதி. அங்கே போனால் பெரிய புத்து. அதைக் கரைச்சுட்டுத் தோண்டினால்.... பெருமாள் சிலை! மூக்கும் முழியுமா சங்கு சக்கரம் Gகதைன்னு அமர்க்களமா இருக்கு!
இன்னும் கொஞ்சம் விவரம் விசாரிச்சதில், அன்னியர் படை எடுத்து உள்ளூர் கோவிலை இடிச்சுத் தள்ளியது, மூலவரை யாரோ இங்கே ஒளிச்சுவச்சதுன்னு ...கால ஓட்டத்தில் அந்தக் கோயிலில் இருந்த பல விக்ரஹங்கள் டெல்லி சுல்தானால் சூறையாடப்பட்டு டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் அழகு மிக்க செல்வப்பிள்ளை விக்ரஹமும் ஒன்று. அந்த பெருமாள் விக்ரஹத்தை சுல்தானிடமிருந்து மீட்டு வந்து கோயிலில் சேர்க்க வேண்டும் என்று பக்தர்கள் ஸ்ரீ ராமானுஜரிடம் கோரிக்கை வைத்தனர்! அந்தக் கோரிக்கையை ஏற்ற ஸ்ரீ ராமானுஜர், செல்வப்பிள்ளை சிலையை மீட்க சில பக்தர்களோடு டெல்லி சென் றார்! ஆனால் சுல்தானின் மகள், செல்வப்பிள்ளை திருச்சிலையின் அழகில் மயங்கி, அதைத் தனது படுக்கை அறையில் வைத்துக்கொண்டாள்!
செல்வப்பிள்ளை விக்ரஹத்தை ஸ்ரீ ராமானுஜர் தம்மிடம் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு சுல்தான் கிண்டலாக, ‘உங்க செல்வப்பிள்ளையை கூப்பிடுங் கள், வந்தால் அழைத்துச் செல்லுங்கள்’ எனக் கூறினானாம்.
ஸ்ரீ ராமானுஜர் அசரவில்லை. செல்வப்பிள்ளையே வா" எனப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டு செல்வப்பிள்ளை சின்னஞ்சிறிய பாலகனாக கால் களில் சலங்கை சப்தமிட, நடந்து வந்து ஸ்ரீ ராமானு ஜரின் மடியில் அமர்ந்து விட்டாராம்! அதைக்கண்டு திகைத்த சுல்தான், செல்வப்பிள்ளை விக்ரஹத்தை ஸ்ரீ ராமானுஜரிடம் கொடுக்க சம்மதித்தான்.
விக்ரஹத்துடன், ஸ்ரீ ராமானுஜர் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் கள்வர்களிடம் சிக்கிக் கொள்ள, அந்தப் பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உதவியோடு, ஸ்ரீ ராமானுஜரும், செல்வ நாராயணர் விக்ரஹமும் பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டர்களாம். அதற்கு நன்றி செலுத்தும்விதமாக இன்றும் திருக்குலத்தார் உத்ஸவம் என, தேர் திருவிழாவுக்கு அடுத்த நாள் தனி விழா ஒன்று எடுக்கப்படுகிறது.
கோயிலின் துவஜஸ்தம்பம், தீப ஸ்தம்பங்களைத் தாண்டி கருட மண்டபத்தைக் கடந்து கிழக்கு பிராகாரத்தில் வணங்கி, பிறகு செல்வநாராயணரை தரிசிக்க வேண்டும்.
கருவறையில் மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் செல்வநாராயணர்! கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, வலது கரம் அபய முத்திரையோடும் இடது கரம் கதையை ஏந்தியபடியும் உள்ளது. தலையில் நீண்டு உயர்ந்த பிரம்மாண்ட கிரீடத்தை தரிசிக்கலாம்! ஸ்வாமி இரண்டு திருவடிகளையும் ஒன்றாக
இணைத்து வைத்திருக்கிறார். பெருமாள் தரிசனத் தினூடே ஒரு பெண் முகத்தையும் காண முடிகிறது. அதுதான் டெல்லி சுல்தானின் மகளின் முகம் என்று கூறுகிறார்கள்!
செல்வப்பிள்ளையின் திருச்சிலை ஸ்ரீ ராமானுஜரி டம் டெல்லி சுல்தானால் கொடுக்கப்பட்டவுடன்,
செல்வப்பிள்ளையின் மீது அளப்பரிய அன்பு கொண்ட சுல்தானின் மகள் மனம் உடைந்து அரண் மனையில் வாழப்பிடிக்கமால் பெருமாளின்
திருச்சிலை உள்ள மேல்கோட்டைக்கே வந்து விட்டாள். அங்கேயே அவளது இறுதி காலத்தைக் கழித்து பெருமாளின் திருவடியிலேயே உயிர் விட்டாள் என்று கூறப்படுகிறது!
ரங்க மண்டபத்துக்கு அருகே தனிச் சன்னிதியில் செல்வப்பிள்ளை, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார்! இந்த விக்ரஹம்தான் டெல்லியிலிருந்து, ஸ்ரீ ராமானுஜரால் திரும்பப் பெறப்பட்டதாகும். இவருக்கு செல்வப்பிள்ளைராயர். ராமப்பிரியர் எனவும் பெயர்களுண்டு!
ஒரு சமயம் பாற்கடலில் பெருமாள் அணியும் மணிமுடியை, பிரகலாதனின் மகன் விரேதசுனன் யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று பாதாள உலகில் மறைத்து வைத்து விடுகிறான். இது தெரிய வந்ததும் கருடாழ்வார் பாதாள உலகம் சென்று, அந்த மணிமுடியை எடுத்து வரும் வழியில் கிருஷ்ணனை பார்த்து, ‘ஆஹா... இது இவர் தலையில் அல்லவா இருக்க வேண்டும்’ என நினைத்து, மணிமுடியை, கிருஷ்ணனின் தலையில் வைத்து அழகு பார்த்து தனது இருப்பிடம் திரும்புகிறார்!
கிருஷ்ணனோ, அந்த மணிமுடி தனக்குச் சரியாகப் பொருந்தவில்லை என நினைக்கிறார்! அதனால் இதை யார் தலையில் வைத்தால் சரியாக இருக்கும் என யோசிக்கும்போது, யுகம் யுகமாக இருக்கும் செல்வப்பிள்ளைதான் அவரது நினைவுக்கு வருகிறார். அதனால் அந்த மணிமுடியை செல்வப்பிள்ளையின் தலையில் வைத்து பொருத்திப் பார்க்கையில், அது அற்புதமாகப் பொருந்துகிறது. ஆக, அதனை செல்வப் பிள்ளைக்கே வழங்கிவிட்டு, துவாரகை திரும்புகிறார் ஸ்ரீ கிருஷ்ணன்.
பங்குனி மாதம் பூச நட்சத்திரத்தன்று மாலையில் ஸ்ரீ ராமானுஜர் சன்னிதியின் முன், செல்வப்பிள்ளையின் திருச்சிலை கொண்டு வரப்பட்டு இந்த வைரமுடி சாத்தப்படுகிறது. விடிய விடிய பெருமாள் தரிசனமும் நடைபெறுகிறது. இந்தச் சேவையை தரிசிக்க அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுகின்றனர். பெருமாளை அந்தக் கோலத்தில் தரிசித்தால் அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் பஸ்மம் ஆகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
இந்தக் கோயிலின் சிறப்பு விழாவே வைரமுடி திருச்சேவைதான். இந்த சிறப்புச் சேவையின்போது தங்கத்தால் ஆன கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும், உபய நாச்சியார்களுடன் செல்வப் பிள்ளை பவனி வருகிறார்! மேலும், மைசூர் மன்னர் ஒருவரின் கைங்கர்யமாக ஒரு ராஜ முடி, கோயிலின் பங்காக ஒரு முடி என செல்வப் பிள்ளைக்கு மூன்று ராஜ முடிகள் உள்ளன. அவை மூன்றுமே அரசு கஜானாவில் உள்ளன. தேவைப்படும்போது அவை எடுத்து வரப் பட்டு, உத்ஸவத்துக்குப் பிறகு திரும்பவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை தவிர, மன்னர் கிருஷ்ண ராஜ உடையாரின் மனைவி ராணி தங்க ஆபரணங் களைச் செய்து தனது பங்காக திருநாராயணனுக்கு அணிவித்துள்ளார்.
வடக்கு பிராகாரத்தில் தாயார் யதுகிரி சன்னிதி உள்ளது. அங்குள்ள மண்டபத் தூண்களில் அழகிய
சிற்பங்களைக் காணலாம். உத்ஸவருடன் எழுந்தரு ளும் நாச்சியாரை, ‘கல்யாணி நாச்சியார்’ என அழைக் கின்றனர். காரணம், இந்த நாச்சியாரை, கோயிலின் கல்யாணி தீர்த்தத்திலிருந்து எடுத்தவர் ஸ்ரீராமானுஜர் தான்! கல்யாண மண்டபத் தூண்களில் ராமாயணம், கிருஷ்ணாவதாரச் சிற்பங்கள் அழகாக காட்சியளிக் கின்றன. கோயிலை வலம் வருகையில் தாழ்வார மண்டபத்தைச் சுற்றியுள்ள தூண்களிலும் சிற்பவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிராகாரங்களில் ஸ்ரீ வைகுண்டநாதர், ஸ்ரீ சக்கரத் தாழ்வார், ஸ்ரீ ஆஞ்சனேயர் உட்பட பலரும் தரிசனம் தருகின்றனர். கல்யாணியிலிருந்து படியேறிச் சென்றால் ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசிக்கலாம்!
No comments:
Post a Comment