Monday, December 27, 2021

சிறுகதை நுணுக்கங்கள்" - சுஜாதா

 "சிறுகதை நுணுக்கங்கள்" - சுஜாதா: கட்டுரை.

("கடவுள்களின் பள்ளத்தாக்கு"  புத்தகத்தில் இருந்து) 

= Ilangovan Chanemouganandam 

ஒரே சிறுகதையால் உலகப் புகழ்பெற்றவர் என்றால் அமெரிக்காவைச் சேர்ந்த ஷர்லிஜாக்சன் (Shirley Jackson)  தான் (1915- 1965).  அவர் எழுதிய ' லாட்டரி ' என்னும் நிஜமாகவே சிறிய சிறுகதை பலமுறை தொகுக்கப்பட்டு பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு நாடகமாக , டெலிவிஷனாக , ஏன் பாலே நடனமாகாகக் கூட நடிக்கப்பட்டு பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட இந்தக் கதை முதலில் 1948 ல் வெளிவந்தபோது அமெரிக்க நாடே பலவிதங்களில் கண்டனம் தெரிவித்து அதைப் பிரசுரித்த நியூ யார்க்கர் பத்திரிக்கையைக் கண்டபடி திட்டினார்கள்.

கதை என்ன?

ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்றுதான் அந்தக் கிராமத்தின் புராதான வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும்.

அதிகாலையிலே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்பார்க்க இன்று யார் பெயருக்கு விழப்போகிறது என்று விவாதங்களிடையே ஓரிருவர் இந்தப் பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப பழைய மனிதர்கள் ' சும்மாரு காலம் காலமாக வரும் பழக்கம்" என்று அதட்ட இறுதியில் , மைதானத்தின் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப் பெட்டி வைக்கப் படுகிறது.நடுவர் நியமிக்கப் படுகிறார்.

அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப் பெட்டியிலிருந்து சீட்டு எடுத்துப் பிரிக்காமல் காத்திருக்கிறார்கள்.எல்லோரும் எடுத்தப் பின் அவரவர் சீட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள்.வெள்ளைச் சீட்டு கிடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

ஒரே ஒரு சீட்டில் மட்டும் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது . அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது." சீக்கிரம் முடித்து விடுங்கள் " என்கிறார் கிராமத்துப் பெரியவர்.நடுவே ஒரு கற்குவியல்.

ஆளுக்கொரு கல் பொறுக்கிக்கொள்கிறார்கள்.சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி ' இது அநியாயம் ' என்று கதறி மைதான நடுவே வந்து நிற்க , முதல் கல் அவள் மண்டையில் படுகிறது.

அதன் பின் அவர்கள் அவளை கல்லாலடித்துக் கொல்கிறார்கள். 

முற்றிலும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி முடிவைக் கொண்ட இந்த கதை ஆயிரக்கணக்கான வாசகர்ககளைச் சங்கடம் பண்ணியது.இந்தக் கதையின் ஆழக்கருத்து என்ன பலபேர் யோசித்திருக்கிறார்கள்.

ஆசிரியையே கேட்டபோது" என்ன என்று விளக்கம் கூறுவது?கதையில் என்ன சொல்ல நினைத்தேன் என்று விளக்குவது கஷ்டம்.ஒரு மூர்க்கத்தனமான புராதனப் பழக்கத்தை தற்காலத்தில் என் சொந்தக் கிராமத்தில் அமைத்து , வாசகர்களை அதிர்ச்சக்குள்ளாக்கி இன்றைய தினங்களின் மனிதாபமானமற்ற செயல்களையும் சுட்டிக்காட்ட முயற்சித்தேன்"என்றார்.

' பாலம் ' என்கிற சிறுகதை எழுதியபோது எனக்குச் சிறிய அளவில் இந்த மாதிரியான எதிர் விளைவு ஏற்பட்டது.குறிப்பாக கோவையிலிருந்து ஒருவர் ' அந்தக் கதையைப் படித்ததும் உன்னையே கொல்ல வேணும் போலிருக்கிறது வராவா' என்று எழுதியிருந்தார்.என்று சுஜாதா முடிக்கிறார்.

No comments:

Post a Comment