Saturday, December 25, 2021

பதில் தேடுகிறேன் தொடர் 2

 பதில் தேடுகிறேன் தொடர் 2....

சுந்தரேச சாஸ்திரிகள் வீட்டின் உள்ளே நுழைந்ததும்... மேல் துண்டை எடுத்து நாற்காலி மீது போட்டுவிட்டு "அம்மாடி சீதா எனக்கு ரொம்ப பசிக்கிறது சமையல் ஆயிடுத்தா?"

"இன்னும் ஆகல... கொஞ்ச நேரம் ஆகும்!!

அதற்குள் எதிரில் இருக்கும் ஹெட் மாஸ்டர் வீட்டுக்கு போய் தர்ப்பணம் பண்ணிவிட்டு வந்துவிடுங்கள்... அதற்குள் சமையல் ஆகிவிடும்" என்றாள்..

"சரி அப்படி என்ன எனக்கு ஒரு டம்பளர் பாயசம் கொடு... ரொம்ப பசிக்கிறது" என்றார்...

"என்ன இது புதுசா இருக்கு? ஆகாரம் ஏதாவது சாப்பிட்ட பின்பு தற்பணம் பண்ணி வைக்கக் கூடாதே... சீக்கிரம் முடித்துவிட்டு வந்துவிடுங்கள் அதற்குள் சமையல் முடிந்து விடும். சாப்பிட்டு விடலாம்"என்றாள்..

", சரி"என்று கூறிக்கொண்டே சுந்தரேச ஐயர் எதிர் வீட்டுக்கு கிளம்பி போனார்..

பாதி மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் வாய் மந்திரங்களை உளறலாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டது.

உடனே அவரை நிமிர்ந்து ஹெட் மாஸ்டர் பார்ப்பதற்குள் அய்யரின் கண்கள் சொருகிக்கொண்டு உடலில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது...

உடனேயே அந்த ஹெட் மாஸ்டர் மாமா மாமா என்று கூப்பிட்டுக் கொண்டு அவரை மடியில் சாய்த்துக் கொண்டார்...

அந்த நிமிடமே சுந்தரேச சாஸ்திரிகளின் உயிர் பிரிந்து விட்டது! கலக்கத்துடன் எதிர் வீட்டுக்கு செய்தி அனுப்பினார்...

சீதாலட்சுமி இடி விழுந்தது போல் கலங்கி விட்டார். அதன் பிறகு நடந்தது எதுவும்... சொல்லும்படியாக இல்லை..

மேற்படி கதை நம் குழு 80 வயது பிரேமா பாட்டி அனுபவத்தில் எழுதுவது.

No comments:

Post a Comment