கனியுமோகாதல்_72
கோர்ட் வளாகத்தில் மைதிலி தன் வேலைகளை முடித்துக் கொண்டு ஆவின் பூத் அருகே ஜெயஸ்ரீயின் வரவிற்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.
'அதோ... அவளே தான்!'
அவள் அருகில் வந்தவுடன், 'ஜெய், முதல்ல கருப்பு கோட்ட கழட்டு'. கழட்டுகிறாள்.
'இங்க வா பக்கத்துல'. வருகிறாள் ஜெயஸ்ரீ.
அவளை கட்டிக் கொள்கிறாள். நெற்றியில் ஈரமில்லாத ஒரு முத்தம். பிறகு அவள் கரத்தை பற்றிக் கொண்டே ஒரு கங்க்ராட்ஸ் உதிர்ப்பு. சற்றும் எதிர்பாராத அவளது முத்தத்தில் நெகிழ்ந்து விட்டாள். கண்கள் ஓரம் கண்ணீரை தேக்குகின்றன.
'ஏய், ஜெய். என்ன இது? எதுக்கு அழற இப்ப? வா, அந்த பெஞ்சுல போய் உக்காரலாம்.'
'ஏதோ உன்ன ஆசையா பார்க்கணும்னு ஃபோன்ல சொல்லிட்டேனே தவிர, உன்ன பார்க்கும் போது ஐ ஃபீல் gகில்ட்டி.'
'ஏய் லூஸு. gகில்ட்டிக்கு நீ ஒண்ணும் பண்ணலையே. வீணா எதையெதையோ மனசுல போட்டுண்டு உன்னோட சந்தோஷத்த கெடுத்துக்காத.'
'இல்ல மைதிலி, அப்பாவ அவாத்துக்கு அனுப்பறதுக்கு முன்னாடி நானே அவரோட விருப்பத்த கேட்டு தெரிஞ்சிண்டிருக்கணும். பெரிய தப்பு பண்ணிட்டேன்.'
'இப்ப என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? இல்லையே? ஏதாவது ஸ்ரீ கொழப்பினானா உன்ன? அப்படியிருந்தா சொல்லு. படவா மண்டைலேயே ரெண்டு குட்டு குட்டறேன்.'
'அதெல்லாம் இல்ல மை. நான்தான் அவசரப் பட்டுட்டேனோன்னு... எனக்கென்னவோ அவர் உன்னத்தான் விரும்பறார்னு தோணறது. நீ அவரப்பத்தி அன்னிக்கு பேசின உடனேயே நான் உன்னோட விருப்பத்த அவர் கிட்ட சொல்லியிருந்தா ... ச்சே, நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் மைதிலி.'
'திரும்ப திரும்ப சொல்றேன்... நீ, தேவையில்லாம கொழப்பிக்கற. அவனும் நானும் ஏழு வருஷமா நல்ல ஃப்ரெண்ட்ஸா பழகறோம். என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு அவனுக்கு எண்ணம் இருந்திருந்தா என் கிட்ட எப்பவோ சொல்லியிருப்பான் இல்லையா? எங்காத்துல எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சோண ஜஸ்ட் என் மனதில விழுந்தது தான் இது. நோன் டெவில் இஸ் பெட்டர் லாஜிக். நான் தான் தேவையில்லாம உன் கிட்ட அத ஷேர் பண்ணி உனக்கு ட்ரபிள் கொடுத்துட்டேன். நீ அவன பிடிச்சிருக்குன்னு முன்னாடி சொல்லியிருந்தா நான் உன் கிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன். இன் ஃபேக்ட், இந்த விஷயத்துல நான்தான் தப்பு பண்ணிட்டேன். நீ என்ன இந்த விஷயத்துல மனப்பூர்வமா நம்பினா, அதுவே போதும்.'
'உன்னால எப்படி இவ்வளவு லைட்டா இதெல்லாத்தையும் எடுத்துக்க முடியறது? யூ ஆர் க்ரேட் மைதிலி.'
'இப்ப என்னோட ஃபோகஸ் எல்லாம் நமக்கு ஒரு ஆஃபீஸ பார்க்கணும். அட்லீஸ்ட் ஃபார் தி ஸேக் ஆஃப் எவ்வரி ஒன் ஆஃப் அஸ், ப்ரொஃபஷன்ல கான்ஸன்ட்ரேட் பண்ணி சார் என் மேல வெச்சிருந்த நம்பிக்கைய காப்பாத்தணும். ஸ்ரீ கிட்ட காபிரைட் கேஸ்கள எப்படி ஹாண்டில் பண்றதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். இதுக்கு அவன் ஹெல்ப் பண்ணினா போதும்.'
'செய்வார் மைதிலி. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறார்? அவர் தனியாவே போனாலும் ஐ வில் என்ஷ்யூர் ஹீ dடஸ் ஃபார் யூ.'
'என்னடி சொல்ற. அவன் தனியா போகப்போறானா? அப்படி ஏதாவது சொன்னானா?'
மைதிலி இப்படி கேட்டவுடன் தான் தேவையில்லாமல் சொல்லி விட்டதை உணர்கிறாள். ஸ்ரீதர் தன்னிடம் ப்ராமிஸ் வாங்கிக் கொண்டு சொன்ன விஷயங்களை எப்படி சொல்வது என்று நினைத்து தன்னை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறாள்.
'அதெல்லாம் ஒண்ணுமில்லை மைதிலி. ஒருவேளை அப்படி அவர் தனியா போக நெனச்சாங்கற யூகத்துல சொன்னேன்.'
'இட் இஸ் ஆல்ஸோ பாஸிபிள். அவனுக்கும் என்ன டெய்லி பார்க்கும்போது gகில்ட்டியா ஃபீல் பண்ணலாமே ஒருவேளை நீ சொல்றபடி அவன் என்ன விரும்பியிருந்திருந்தான்னா. எப்பப்போ எது நடக்கணுமோ அது நடக்கத்தான செய்யும். இப்பெல்லாம் எதையும் ஏத்துக்கற பக்குவம் எனக்கு வந்திண்டிருக்குன்னு நெனைக்கிறேன். நீ ஒண்ணும் கவலப் படாத. நான் சமாளிச்சுப்பேங்கற நம்பிக்கை இருக்கு.'
பெஞ்சில் உட்கார்ந்திருந்தவள் சட்டென்று மைதிலியின் மடியில் தலையை சாய்த்து விசும்பலோடு அழுகிறாள்.
'ஏய் பைத்தியம். நிறைய பேர் வந்து போற இடம். கன்ட்ரோல் யுவர்ஸெல்ஃப். திரும்ப திரும்ப என்னையே நெனச்சு வேதன படாத. ஸ்ரீயோட நீ சந்தோஷமா நன்னா வாழணும். எழுந்திரு என் மடிய விட்டு. அசட்டுத்தனமா எதுவும் யோசிக்காத. அவன நீயும் நன்னா புரிஞ்சவ. உன்னால அவனும் ப்ரொஃபஷன்ல நன்னா வருவான். எனக்கு நம்பிக்கை இருக்கு.'
'இஃப் யூ ஹேவ் ஸெகண்ட் த்தாட், ப்ளீஸ் ஃபீல் ஃப்ரீ மைதிலி.'
விசும்பலோடு எழுந்தவளின் முதுகை தடவிக் கொடுக்கிறாள் மைதிலி.
'ஓகே. கண்ண தொடச்சுக்கோ. கிளம்பு. சாயந்திரம் ஆஃபீஸ்ல மீட் பண்ணலாம்.'
இருவருக்கும் ஆறுதல்களும் தேற்றுதல்களும் கிடைத்திருக்காதா என்ன?
இந்த சந்திப்பு மைதிலிக்கு மன உறுதியைக் கொடுத்தது. இனி ஸ்ரீதரை நட்புக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மனதில் விழுந்த விருப்பம், மனதே காலத்தோடு சேர்ந்து பஸ்பமாக்கட்டும். பாதைகள் இல்லாத பயணங்கள் இருக்குமா என்ன? அதுவும் பயணங்கள் மாறும்போது பாதைகளும் வேறாகத்தானே இருக்க முடியும்.
மாலை ஆஃபீஸில் ஸ்ரீதர் மைதிலியிடம் பிரத்யேகமாக நேரம் கேட்டு சந்திக்கிறான்.
'ஸ்ரீ ஐ ஆம் ஸோ ஹாப்பி. கங்க்ராட்ஸ் டா. ஜெய் மாதிரி ஒருத்தி கெடைக்க கொடுத்து வெச்சிருக்கணும். சரியான ஆளுடா நீ. அவ உன்னோட மனசுல இருக்கான்னு என் கிட்ட கூட சொல்லாம...'
ஸ்ரீதரின் மனதோரம் கசிந்த கண்ணீர் கண்களுக்குள் வராமல் மனதின் வெளிப்புறத்தை ஈரமாக்கி கொண்டிருந்தது. மேற்கொண்டு அவளிடம் பேசி அவள் மனதை காயப்படுத்த விரும்பவில்லை. அசட்டு நெளிதலை பதிலாக்கினான்.
'அட, அட, வெக்கத்தப் பாரு. பொம்மனாட்டிகள் கூட தோத்துடுவா போல இருக்கே. gகுட். அப்புறம் ஸ்ரீ. எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும். காப்பிரைட் கேஸ்கள்ல இருக்கற நெளிவு சுளிவுகள், ஃபார்மாலிடிஸ் அண்ட் ப்ரொஸீஜர்ஸ்கள சொல்லித் தரணும். ஏதோ அஞ்சாறு ஹாண்டில் பண்ணியிருக்கேனே தவிர ஐ திங்க் ஐ அம் எட் டு லேர்ண் எ லாட்.'
'நானே உன் கிட்ட பேசணும்னு நெனச்சேன். நீ ஏதோ என்ன திரும்ப இங்க வரணும்னு ப்ரெஸ் பண்ணினதாலத்தான் இங்க வந்தேன். எனக்கு தனியா போய் ப்ராக்டீஸ் பண்றதுலதான் ஆசை. அதனால, என்ன நீ எவ்வளவு சீக்கிரம் இங்கேந்து ரிலீவ் பண்றையோ நல்லது. இன் எனி கேஸ் பிஃபோர் மை மேரேஜ்.'
'ஏண்டா, இங்கேயே இருக்கலாமே?'
'ப்ளீஸ், திரும்பவும் என்ன கம்ப்பெல் பண்ணாத. நாம ரெண்டு பேரும் நல்ல நட்போட பழகிண்டிருப்போம் எப்போதும்போல. நீ நன்னா வரணும் இங்க. நீ சித்த நாழியில காப்பிரைட் கேஸ்கள பத்தி நன்னா தெரிஞ்சுடுவ. நான் இங்க இருந்தாலும் இல்லாட்டியும் எப்ப வேணா உனக்கு டவுட்ஸ் இருந்தா க்ளியர் பண்றேன் எனக்கு தெரிஞ்ச அளவுல.'
'சரிடா. உன் இஷ்டம். ஆனா, தனியா போயிட்டு பொறுமையில்லாம புலம்ப கூடாது. பாவம் ஜெயஸ்ரீ.'
'சரி மை. எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனைனா உன் கிட்டத்தான வரப்போறோம்.'
'இது வேறையா? என்ன கடைசியில மேரேஜ் கவுன்ஸலர் ரேஞ்சுல வெச்சிட்ட. எனக்கு எனக்கு ரொம்ப அனுபவம் பாரு.'
சிரித்தார்கள். மனங்கள் பிசைந்து கொள்வது மற்ற அங்கங்களுக்கு தெரியுமா என்ன?
'bபெட்ராத்தல் வரைக்கும் யார் கிட்டேயும் ஷேர் பண்ணிக்க வேண்டாம் மை. ஜெயஸ்ரீ கிட்டேயும் சொல்லியிருக்கேன்.'
'டோண்ட் ஒர்ரி ஸ்ரீ.'
அவன் சென்ற பின் கேஸ் கட்டுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.
தொடரும்....
No comments:
Post a Comment