Sunday, December 19, 2021

கனியுமோகாதல்_71

கனியுமோகாதல்_71

மைதிலியும் அவள் பெற்றோர்களும் காளிகாம்பாள் தரிசனத்திற்கு நான்கு மணி வாக்கில் கிளம்பி விட்டார்கள்.

அதே சமயம் ஜெயஸ்ரீ ஆத்து டெலிஃபோன் மணி அடித்தது.  அழைத்தது ஸ்ரீதர்.  எடுத்தது ராமானுஜன்.

'உங்க டாட்டர் இருக்காங்களா?  கொஞ்சம் அவங்க கூட பேசலாமா?'

'என்ன மாப்ள, அவள போய் இன்னும் வாங்க போங்கன்னு கூப்டுண்டு.  இதோ கூப்படறேன்.  ஜெயஸ்ரீ ..  எ ஸர்ப்ரைஸ் கால் ஃபார் யூ?

'எஸ் ஜெயஸ்ரீ ஹியர்.'

'நான்தான் ஸ்ரீதர் பேசறேன்.'

தினமும் யதார்த்தமாக இருவரும் பேசியிருக்கிறார்கள்.  இன்று என்னவோ அவளுக்கு வெட்கம்.  கண்கள் இரண்டும் குளிர்ச்சியில் பட படன்னு துடிக்கின்றன.  உடம்பு முழுவதுமே ஒரு புல்லரிப்பு.. இல்லை மெய் சிலிர்ப்பு ..  இல்லை இல்லை மின்சாரம்.  அட, ஏதோ ஒன்று.  உடல் கட்டுக்குள் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

'ஆர் யூ தேர் ஜெயஸ்ரீ?'

'ம்ம்ம்.. சொல்லுங்கோ.'

'உங்கள நான் இப்போ நேர பார்த்து பேச வரலாமா.  இஃப் யூ டோண்ட் மைண்ட்.'

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு.  என்றும் இல்லாத குரல் இன்று அவனிடமிருந்து என்பது போன்று உணர்கிறாள்.  காதல் உணர்வு வந்துவிட்டால் வித்யாசங்களுக்கு என்ன குறைச்சல்?

'ஆத்துக்கா வரேள்?'

'உனக்கு ஆட்சேபணை இல்லைனா, எனி காமன் ப்ளேஸ் கூட ஓகேதான்.  அட் யுவர் ச்சாய்ஸ்.'

அடையார் சிக்னல் அருகே உள்ள ஆவின் பார்லர் கம் பார்க் என்பது முடிவாகிறது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் இருவரும் அங்கு இருக்க வேண்டும்.

'என்ன ஜெயஸ்ரீ ஒண்ணும் பிரச்சனை இல்லையே?

பெற்றவராயிற்றே?  கவலைக் கேள்வி இல்லாமல் இருக்குமா ராமானுஜத்திடமிருந்து?

'அதெல்லாம் இருக்காதுப்பா.  ஏதோ பேசணுங்கறார்.  போய்தான் பார்த்துட்டு வரேனே.'

'நானும் வருவேன். நன்னா இருக்காது.  என் கார் ஃப்ரீதான்.  ஜாக்ரதையா ஓட்டிண்டு போ.'

'வேணாம்ப்பா.  டூ வீலர்லயே போறேன்.  அவர் கிட்ட கார் இல்ல.  நான் கார்ல போனா நன்னா இருக்காது.'

ஐந்து பத்து நிமிட இடைவெளியில் இருவரும் அங்கு வந்து விட்டனர்.

'சாரி, ஜெயஸ்ரீ.  உன்ன உடனே வர சொன்னதுக்கு.'

ச்சேர்களில் உட்காருகிறார்கள் இருவரும், ஃப்ரூட் ஸலாட் ஆர்டர் செய்து விட்டு.

'உங்க அப்பா எங்காத்துக்கு வந்து கார்த்தால பேசினார்.  நான் சரின்னு அவர் கிட்ட சொன்னாலும் உன் கிட்டேயும் சொல்லிட்டு உன்னோட சம்மதத்தையும் நேராவே கேட்டுண்டு போகலாம்னுதான் உன்ன வரவழைச்சேன்.'

'நான் உங்கள பிடிச்சிருக்குண்ணு சொன்னதுக்கப்பறம் தானே எங்க அப்பா உங்காத்துக்கு வந்தார்.'

'த்தேங்க்ஸ்.  நீ இவ்வளவு வெளிப்படையா பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு.  இன்னும் கொஞ்ச விஷயங்கள் உன் கிட்ட பேசணும்.'

'எதா இருந்தாலும் பேசுங்கோ.  நானும் என் மனசுல பட்டத சொல்றேன்.'

'உங்காத்து ஸ்டேட்டஸ விட...'

'நீங்க என்ன சொல்லப் போறேள்னு தெரியறது.  நம்ம ரெண்டு பேர் கல்யாணத்துகப்பறம் எங்காத்து ஸ்டேட்டஸ் உங்காத்து ஸ்டேட்டஸ்னு நீங்க பிரிச்சு பார்க்கப் போறேளா?  இல்லையே?  நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பொண்ணு.  அப்பாவுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்குன்னு சொல்லுவார்.  அத நான் எப்போதுமே தெரிஞ்சுக்கறதுல ஆர்வம் காட்டினது இல்ல.  நான் நானா வளரதுக்கு இது வரைக்கும் சப்போர்ட் பண்ணியிருக்கா என்ன பெத்தவா.  அவாளுக்கு தெரியும் எனக்கு எந்த சமயத்துல என்ன செய்யணும்னு.  நான் உங்காத்துக்கு வந்து கஷ்டப் படமாட்டேன்.  நம்பிக்கை இருக்கு.  அப்படியே கஷ்டப் பட்டாலும் எங்கப்பா பார்த்துண்டு இருக்கமாட்டா.  கஷ்டத்திலேந்து நாம ரெண்டு பேரையும் உங்க அப்பாவையும் மீட்டெடுத்துடுவா.  உங்கள நம்பி நான் இருக்கணும்னு நெனைக்காதீங்கோ.  நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக் கொருத்தர் துணையா இருந்துண்டு, தேவைப்படும் போதெல்லாம் பெத்தவாளோட சப்போர்ட்டையும் வாங்கிண்டு குடும்பம் நடத்தலாம்.'

'அதுக்கில்ல.  எனக்கு சரியான வருமானம் இல்லைனு உனக்கு தான் தெரியுமே?  அதான், உன் கிட்டேயும் நேராவே சொல்லிட்டா நல்லதுதானே.'

'உங்கள எல்லாருக்கும் பிடிக்கும்.  நன்னா படிச்சிருக்கேள்.  நல்ல அறிவு... எல்லா சம்பத்துகளும் இருக்கு.  நன்னா வரதுக்கு யோசிக்கிறேள்.  முயற்சி செய்யுங்கோ.  பலன் இல்லாம போகாது.  உங்கள எனக்கு பிடிச்சதுக்கு காரணம் நீங்க வக்கீல்ங்கறதுக்காக இல்ல.  நான் பார்த்த வரைக்கும் பழகின வரைக்கும் நீங்க நல்லவர்ங்கறதுக்காகத் தான். நானும் எங்களோட பேரண்ட்ஸும் உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் பக்க பலமா இருப்போம்.   நான் கல்யாணம் பண்ணிக்க ஒரு நல்ல மனுஷர் 

வேணும்.  அதுல உங்க கிட்ட எந்த குறையும் இல்ல.  நீங்க நல்ல இண்டெலிஜென்ட்.  நம்பிக்கையை இழக்காம தைரியமா ப்ரொஃபஷன்ல இறங்கினா நீங்க நன்னா வருவேள்.  எனக்கு நம்பிக்கை இருக்கு.'

'யூ நோ, செத்துப்போன எங்க அம்மாவுக்கு நான் ப்பேம்பர்ட் ச்சைல்ட்.  எங்க அப்பாவும் கல கலன்னு பேசக் கூடியவர்தான்.  ஒரு நல்ல ஃப்ரெண்ட் மாதிரிதான்.  எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்.  என்னால என் தொழில்ல நல்ல முன்னேற முடியலையேன்னு கவலை இருந்துண்டே இருக்கு.  இந்த கவலை என்ன அடிக்கடி அழுத்தறதால என்னால இப்பெல்லாம் ப்ரொஃபஷன்ல கூட கான்ஸன்ட்ரேட் பண்ண முடியல.'

'தெரியும்.  நானும் மைதிலியும் இதப் பத்தி நிறைய பேசியிருக்கோம்.  இப்ப தான் எல்லாம் சரியாயிண்டு வரதே.  மைதிலி தான் உங்கள திரும்ப அழச்சிண்டு வந்து நல்ல வழிய காட்டியிருக்காளே.  எல்லாம் சரியா போயிடும்.'

'உனக்கு தெரியுமோ தெரியாதோ.  மைதிலியும் நானும் ரொம்ப வருஷமா ஃப்ரெண்ட்ஸ்.  எங்க அம்மா போனதுக்கப்பறம் அவ எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கா.'

'தெரியும்.  எனக்கு நன்னாவே தெரியும்.  அவளுக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க கூட ஆசை இருந்தது.  என் கிட்டேயே சொல்லியிருக்கா.  ஆனஸ்ட்லி ஸ்பீக்கிங், நான் கூட நீங்க ரெண்டு பேரும்தான் மேட் ஃபார் ஈச் அதர்னு நெனச்சிண்டிருந்தேன்.  நான் ஓபனாவே அவ கிட்ட பேசியிருக்கேன்.'

'எனக்கும் அவ மேல விருப்பம் இருந்தது அவள கல்யாணம் பண்ணிக்கணும்னு.'

'அப்ப சொல்லியிருக்கலாமே தைரியமா அவ கிட்ட?'

'சொல்லியிருக்கலாம்.  சொல்லலாம்னு நெனைக்கற சமயத்துல அவாத்துல அவளுக்கு அலையன்ஸ் பார்க்கிற விஷயம் தெரிஞ்சது.  அவளுக்கு அவாத்துல பார்த்திருக்கற மாப்பிள்ளையே என் கிட்ட பேசினார்.'

'அப்படியா?  எனக்கு தெரியாதே இதெல்லாம்.'

'எஸ்.  பேர் முரளி.  அவனப் பத்தி என் கிட்ட சொல்லும்போதே அவன்தான் அவளுக்கு சரியான மேட்ச்சுனு தெரிஞ்சிண்டேன்.  ஒண்டர்ஃபுல் ஜெண்டில்மேன்.  வெரி ஆப்டிமிஸ்டிக் ட்டூ. அவன மைதிலி கல்யாணம் பண்ணிண்டா அவ லைஃப் நன்னா இருக்கும்னு மனசுல தோணித்து.  நல்ல வேளை நான் அவ கிட்ட என் விருப்பத்தை சொல்ல போகறதுக்கு முன்னாடி எனக்கு முரளிய பத்தின விஷயம் தெரிஞ்சுது.'

பிறகு தனக்கும் முரளிக்கும் நடந்த சந்திப்புகளைப் பற்றி ஸ்ரீதர் விவரிக்கிறான் ஜெயஸ்ரீயிடம்.

'தப்பு பண்ணிட்டேள் நீங்க.  இப்ப கூட குடி முழுகிப் போகல.  உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.  ஆனா, உண்மையா சொல்லணும்னா, உங்கள விட எனக்கு மைதிலிய ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  ஸச் எ ஒண்டர்ஃபுல் லேடி ஷி இஸ்.  லெட் அஸ் ட்ராப் அவர் மேரேஜ்.  நானே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கறேன்.'

'நோ நோ.  அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போறதுல நான் குறுக்க நிக்கப்போறதில்ல இனிமேல.  அது நன்னாவும் இருக்காது.  நான் ஏன் இதெல்லாம் உன் கிட்ட சொன்றேன்னா, உனக்கும் தெரிஞ்சுட்டா நல்லதுன்னு நெனச்சேன்.'

'எனக்கு மனசே ஆறல.  நீங்க இந்த முடிவை எடுத்திருக்க கூடாது.'

'இல்ல ஜெயஸ்ரீ.  அவ அவளோட பேரண்ட்ஸ் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கான்னு எனக்கு தெரியும்.  ஐயர் ஐயங்கார் பிரச்சனை வேற இருக்கு.  நான் என் விருப்பத்தை சொல்லி அவளுக்கு அவ பேரண்ட்ஸோட ஃப்ரிக்‌ஷன் வரத நான் விரும்பல.  ஏற்கனவே சொன்னது மாதிரி, முரளி மாதிரி ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிண்டு அவ நன்னா வாழணும்.  அவரும் அவளோட ப்ரொஃபஷன்ல அவ முன்னேற எல்லா சௌகர்யமும் பண்ணப்போறதா என் கிட்டேயே பேசினார்.  இது அவளுக்கு ஒரு க்ரேட் ஆப்பர்ச்சூனிடி இல்லையா?'

'என்னதான் நீங்க சொன்னாலும் இத என்னால ஏத்துக்கவே முடியாது.'

'எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும் நீ.  எந்த சந்தர்பத்திலேயும் நான் அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்னு அவளுக்கு தெரிஞ்சுடாம நீ பார்த்துக்கணும்.  நாம ரெண்டு பேரும் சேர்ந்து முரளிய அவ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க உதவணும்.  என் மேல அவளுக்கு கோபமோ வருத்தமோ இருந்தா கூட நல்லதுதான்.  நான் உங்க அப்பாகிட்ட உன்ன பண்ணிக்கறதுல எஸ் சொன்னதற்கு காரணமே, அவ என்னை விட்டு சீக்கிரம் விலக முயற்சிக்கணும், நாட் அஸ் எ ஃப்ரெண்ட், பட் ஃப்ரம் அட்ரேக்‌ஷன்.'

'அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது இதுக்காகத்தானா?'

'அப்படி லிட்ரலலா மீன் பண்ணிக்காத.  நீயே அவ என்ன விரும்பினான்னு தெரிஞ்சதுக்கப்புறமும் என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பப் படலியா?  நம்ம கல்யாணம் முடிஞ்சுதுன்னா அதுவே மைதிலி தன்னை பேலன்ஸ் பண்ணிக்க உதவும்.  அந்த மீனிங்ல சொன்னேன்.'

'நீங்க என்ன சொல்லி ஜஸ்டிஃபை பண்ணினாலும் இதுல எனக்கு துளி கூட இஷ்டம் இல்ல.'

'நீ என்ன நெனச்சாலும் எனக்கு கவலை இல்ல.  நான் முரளிய பார்த்த அன்னிக்கே எடுத்த முடிவு இது.  இப்ப அவ ப்ரொஃபஷன்ல நன்னா வரவேண்டிய டைம் இது.  இந்த சமயத்துல வீணா எதையெதையோ நெனச்சிண்டு மைதிலி தன்னத்தானே கொழப்பிண்டிருக்கா.  நம்ம ரெண்டு பேர் கல்யாணம் அவ கொழப்பத்துலேந்து வெளிய வர அவளுக்கு ஹெல்ப் பண்ணும்.  புரிஞ்சுக்கோ ஜெயஸ்ரீ.'

'உங்க மனச என்னால புரிஞ்சிக்க முடியறது.  உங்கள என்னை விட பெட்டரா புரிஞ்சிண்டவ அவ.'

'அப்புறம் இன்னொரு விஷயம்.  நான் இனிமே பிக்‌ஷேஸ்வரன் ஆஃபீஸ்ல கன்டின்யூ பண்ற உத்தேசம் இல்ல, இஃப் நாட் இம்மீடியட்லி, அட்லீஸ்ட் இன் எ ஃப்யூ மன்த்ஸ்.   டெய்லி மைதிலிய பார்க்கும்போது ஒரு கில்ட்டி என் மனசுல ஓடிண்டுதானே இருக்கும்.  அந்த இடத்துல நான் இருந்து வேலை பார்க்கறது சரியா படல.  என்னோட வீக்னஸ் காம்ப்ளெக்ஸ் மட்டும்தான்.  படிப்படியா இத உணர ஆரம்பிச்சுட்டேன்.  கொஞ்சம் கொஞ்சமா அதுலேந்து வெளிய வந்துடுவேன்.  நம்பிக்கை இருக்கு.  நான் காலி பண்ணாத ஆஃபீஸ்லயே தொடர்ந்து ப்ராக்டீஸ் பண்ணலாம்னு நெனச்சிண்டிருக்கேன்.  கிரிமினல் கேஸ்கள எடுக்க கூடாதுன்னு ஒரு பாலிஸி வெச்சிருந்தேன் இது வரைக்கும். இனிமே எந்த கேஸ்களையும் எடுத்துக்கப் போறேன்.  என்னன்னமோ நெனைக்கறோம்.  எல்லாம் நடந்துடறதா என்ன?'

அவன் கண்கள் கலங்குவதை ஜெயஸ்ரீ பார்க்கிறாள்.

'உங்களப் பத்தி மைதிலி நிறைய பேசியிருக்கா என் கிட்ட.  ஒருவேளை அதெல்லாம்தானோ உங்க மேல எனக்கு விருப்பத்த கொடுத்திருக்குன்னு நெனைக்கிறேன்.  நானும் யோசிக்கிறேன் நீங்க சொன்னது எல்லாத்தையும்.  அவசரப் படவேண்டாம் எது செஞ்சாலும்.'

'சாரி, ஜெயஸ்ரீ.  உங்க அப்பா வந்து உன் விருப்பத்த சொன்னபோது யோசிக்க நேரம் கேட்கணும்னு தான் நெனச்சேன் முதல்ல.  உன் கிட்டேயும் இதெல்லாத்தையும் பேசிட்டு அவர் கிட்ட சொல்லலாம்னுதான் நெனச்சேன்.  ஆனா, தீர்மானம் எடுத்துட்டு பிரச்சனைய பார்க்கறதுலேயும் ஒரு நன்மை இருக்கு.  தீர்மானிச்ச பிறகு கொழப்பங்கள பாஸிங் க்ளௌட்ஸா கடந்துடலாம் இல்லையா?'

'உங்க ஸேக்ரிஃபைஸை புரிஞ்சிக்க முடியுது.  ஆனா ஏத்துக்க முடியல.'

'நீ சொல்றது பெரிய வார்த்தை தியாகம்.  அது மாதிரியெல்லாம் இதுல நினைக்கவே முடியாது.  எவ்வளவோ வருஷம் ரெண்டு பேரும் பேசியிருக்கோம் பழகியிருக்கோம், எந்த வித லவ் ஃபீலிங் இல்லாம.  ரெண்டு பேருக்குமே தற்செயலா சில மாசம் முன்னாடி வந்ததுதானே இந்த காதல்.  அந்த வார்த்தை கூட தப்புதான்.  தற்செயலா வந்தது விருப்பம்.  காலப் போக்கில தானாவே வந்தது மாதிரியே போயிடும், ஃப்ரெண்ட்ஷிப் கூட அத மறக்கடிச்சுடும்.' 

கனவோடு வந்த ஜெயஸ்ரீ கனத்தோடு திரும்புகிறாள் என்பது ஒருபுறம் இருந்தாலும் இவ்வளவு நல்லவனான ஸ்ரீதரை மணக்கப் போவதில் ஒரு சந்தோஷம் இல்லாமல் இல்லை.

'ப்ராமிஸ் வேற வாங்கிண்டுட்டாரே மைதிலி கிட்ட எதையும் சொல்லக் கூடாதுன்னு'. 

'நான் இதுல ஏதாவது தப்பு செஞ்சேனா?'

திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டே திரும்புகிறாள்.

தொடரும்....

No comments:

Post a Comment