கனியுமோகாதல்_65
முரளி குடும்பத்தினர் விடைபெற்றுக் கொண்டு சென்ற பிறகு அம்மாவும் அப்பாவும் அவர்கள் வந்து சென்றதைப் பற்றி ஒரு வார்த்தை கூட மைதிலியோடு பேசாமல் இருந்தது அவளை ஆச்சர்யப் படுத்தியது. குறிப்பாக 'நீ அந்த பையனோடு என்ன பேசினாய்?' என்ற கேள்வியையாவது அவர்களிடமிருந்து எதிர்பார்த்தாள்.
ஸ்ரீதரோடு திருமணத்திற்கு பெற்றோர்களின் ஒப்புதல், முரளி குடும்பத்தினரின் திருமணப் பேச்சுகள், சந்தர் சொன்னவை, ஸ்ரீதர் மீட்டிங்கில் சற்றும் எதிர்பார்க்காத அளவில் பேசியது... இவைகளெல்லாம் மாறி மாறி சிந்தனைகளாய் அடிக்கடி வரும்போது அமைதி வருமா என்ன?
சிந்தனைகள் இஃப்ஸ் அண்ட் bபட்ஸ் வினாக்களையும் மனதில் விழுந்த விடைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தன மைதிலிக்கு அன்று இரவு முழுவதும்.
மறுநாள் எழுந்தவுடன் என்ன தோன்றியதோ என்னவோ, வழுதியைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. இது யதேச்சையாக உதித்த எண்ணம்தான். ஏதாவது உபயோகமான முடிவுக்கு தெளிவு பிறக்கலாம் அல்லது மனச் சிறையில் குழப்பிக் கொண்டிருக்கும் சிந்தனைகளை யாரிடமாவது கொட்டித் தீர்த்தால் அட்லீஸ்ட் ஒரு அமைதி கிடைக்கலாமே?
'வாங்க வாங்க... மேடம் வாங்க. என்ன அதிசயமா வந்திருக்கீங்க? நாளைக்கு ஆஃபீஸ், அப்படி இருந்தும் பார்க்க வந்திருக்கீங்கன்னா ஏதாவது விஷயம் இருக்கும்.'
வாசலில் தன் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த வழுதி வரவேற்றான் மைதிலியை.
'ஒரு பத்து நிமிஷம் உள்ளே உங்கள கூப்பட முடியாது. உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? ரொம்ப நாளாச்சேன்னு மணி மீனும் கறியும் வாங்க சொன்னுது. மணி எடுத்து க்ளீன் பண்ணுகிட்டு இருக்கு. பார்க்க உங்களுக்கு சிரமமா இருக்கும். அதான். ஒரு பத்து நிமிஷம்தான். சாரி.'
'மணி புள்ள.. முடிச்சுட்டியா? மேடம் வந்திருக்காங்க பார். அப்புறம் வேணாலும் சமச்சிக்கலாம் புள்ள. ஐயர்மாருங்க. கஷ்டப் படும் மனசு.'
குழந்தையை மைதிலி கொஞ்சுவதற்கு வாங்கிக் கொண்ட பின் உள்ளே சென்று மணிமேகலையிடம் சொல்லி விட்டு வருகிறான்.
'பொண்ணுக்கு என்ன பேரு வெச்சிருக்கீங்க வழுதி?'
'எங்கம்மா தொட்டில் பேரு பேச்சியம்மான்னு வெச்சுது. நாங்க சுமதின்னு கூப்படறோம்.'
'சுமதி... நல்ல பேர்'
உள்ளே வரச்சொல்லி மணிமேகலையின் குரல். உள்ளே செல்கிறார்கள். ஒரு பாயை விரித்து பச்சையும் சிவப்புமாய் இரண்டு கிலுகிலுப்பைகளை அதில் போட்டு சுமதி பாப்பாவை அதில் படுக்க வைக்கிறான்.
'மணிமேகலை மேடம், எப்படி இருக்கீங்க?'
'அது என்னங்க மேடம். நீங்களும் மணின்னே கூப்பிடலாம்.'
'என்ன மாத்திரம் நீங்க எப்போதும் மேடம்னு கூப்பிடலாமோ?'
'அத கேட்க கூடாது. அது அப்படித்தான். உங்க வக்கீல் எடக்கு மடக்கெல்லாம் இதுக்கு சரி வராது. மணி, நீ போய் நம்ம மேடத்துக்கு மோர் எடுத்துட்டு வா'.
வாங்கிக் கொண்டு வந்த ஆப்பிள் பழங்களை மணிமேகலையிடம் கொடுக்கிறாள்.
'சொல்லுங்க மேடம். என்ன விஷயம்?'
சந்தர் தன்னிடம் சொன்னவைகளை ஒன்று விடாமல் வழுதியிடம் கூறுகிறாள் மைதிலி. கூர்ந்து கவனிக்கிறான் வழுதி.
'அப்ப, உங்க சந்தேகம் சரிதான். அருமையா பேசியிருக்கீங்க சந்தர் தம்பி கிட்ட. தம்பிய நல்ல ப்ரெயின் வாஷ் பண்ணியிருக்காரு அந்த ஸ்ரீனிவாசன்னு நெனைக்கிறேன். நீங்க எப்படி எடுத்துட்டு போகலாம்னு நெனைக்கிறீங்க?'
'என் கருத்து இருக்கட்டும் வழுதி. உங்க அபிப்ராயம் என்ன?'
'மேடம், நீங்க நல்ல திறமைசாலி தான். வாழ்க்கையில சந்தர்பம் கெடச்சாலும் ஏத்துக்கணும். சந்தர்பம் கைய விட்டு போனாலும் அதுக்காக சோர்ந்து போயிடக் கூடாது. தைரியமா இருங்க. கண்ணதாசன் பாட்டுல சொன்ன மாதிரி, நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி நாடு.'
'எப்படி இவ்வளவு கஷ்டங்கள் வீட்டுல இருந்தும் கவலைப் படாம இருக்க முடியுது உங்களால?'
'யார் சொன்னா கவலை இருக்காதுன்னு. ஆனா கவலைப் பட்டுகிட்டே இருக்க கூடாதுன்னுதான் சொல்ல வரேன். ஃப்யூச்சரப் பத்தி ஒரளவு தான் ப்ளான் பண்ண முடியுது. நம்ம கை வசம் இருக்கிற ஆப்ஷன்கள்ல எது பெட்டர்னு ஓரளவு தீர்மானிச்சுட்டு இறங்கிடணும். இன்னிக்கு
நாம எடுக்கிற பெட்டர் ஆப்ஷன் நாளைக்கு வித்யாசப் படலாம். யார் கண்டா? ஆனா, இன்னிக்கு நல்லத ச்சூஸ் பண்ணனும். அதுல மட்டும் கவனமா இருக்கணும்.'
'நாளைக்கு ஸ்ரீனிவாசனோட எப்படி பேசலாம் வழுதி?'
'முதல்ல அவரும் சந்தர் தம்பியும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். நிறைய கேஸ்கள் காப்பி ரைட் கேஸ்கள். அதுவும் ஸ்ரீதர் சார் நடத்திக்கிட்டு வரார். ஸ்ரீதர் சாரைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவா ஹாண்டில் பண்ண தெரியாது. அதனால ஸ்ரீனிவாசன் கண்டிப்பா ஸ்ரீதரை தன்னோட அஸிஸ்டண்டா வெச்சிப்பார். ஸ்ரீதர் சாரும் இதுக்கு ஒத்துப்பார். மத்த கேஸுகள் என் கணக்குப்படி ஒரு எண்பது தேறும். பேசாம ஒண்ணு செஞ்சா என்ன? அந்த எண்பது கேஸ்களை நாம வாங்கிகிட்டு வெளியே வந்து தனியா ப்ராக்டீஸ் பண்ணுவோம். காபிரைட் கேஸ்கள ஸ்ரீதர் ஆச்சு ஸ்ரீனிவாசன் ஆச்சுன்னு விட்டுடுவோம். எண்பது கேஸ்கள்ல கிடைக்கற ஃபீஸுல சந்தருக்கு உங்க விருப்பப் படி ஷேர் கொடுத்துடுங்க.'
'நம்ம ஆரம்பத்துல ஆக்டிவா இருக்க இந்த எண்பது கேஸ்கள் போதும். பார்த்துக்கலாம். நீங்க லீடரா எங்களுக்கு இருங்க. நிறைய சாதிக்கலாம்.'
'ஆஃபீஸ காலி பண்ணனும்னு சொல்றானே சந்தர்? ஸ்ரீதரோட ஆஃபீஸ கேட்கலாமா?'
'ஒண்ணும் வேணாங்க. ஆஃபீஸ் என்னங்க ஆஃபீஸ். வீட்டுலேயே ஒரு டேபிளையும் நாலு நாற்காலியையும் போட்டா உடனே ஒரு ஆஃபீஸ் கெடச்சிடும். பணம் காசு கொடுத்து கழட்டிவிட ட்ரை பண்ணுவார் அந்த ஸ்ரீனிவாசன். அதுக்கு மாத்திரம் ஒத்துக்காதீங்க. சாரோட ப்ளெஸ்ஸிங்கோட அந்த எண்பது கேஸ்கள கையில எடுங்க. தூள் கிளப்பிடலாம்.'
'என்ன வழுதி. இவ்வளவு ஈஸியா சொல்றீங்க?'
'எனக்கென்னவோ ஸ்ரீதர் சார் மேல நம்பிக்கை இல்லை. அவர் ஸ்ரீனிவாசனோடு நைச்சியமா பேசி ஒட்டிக்கத்தான் பார்ப்பாரு. நீங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கலாம். ஆனா அவருக்கு இப்ப இருக்கற வாய்ப்ப பயன்படுத்தறதுல தான் முயற்சிய காட்டுவார். நல்லவர்தான். ஆனா இந்த விஷயத்துல சாமர்த்தியத்த காட்டாம இருக்க மாட்டார். நீங்க அனாவசியமா ஸ்ரீதர நெனச்சு கவலப் படாதீங்க. நீங்க, நான், பிரபாகர் .. மூணு பேரும் தனியா பிரிஞ்சு ஒண்ணா ப்ராக்டீஸ் பண்றோம். ஜெயிக்கறோம். கேஸ்கள விலாவாரியா நீங்க படிக்கறீங்க. சட்ட புத்தகங்கள அப்பைக்கப்ப புரட்டி டிப்ஸ் கொடுக்கறீங்க. அதுபடி நாங்க கேஸ்கள நடத்தி கொண்டு போறோம். எங்களுக்கும் மெள்ள மெள்ள ட்ரெயினிங் கொடுங்க. நாங்களும் டெய்லி நாலு சட்டம் கத்துகிட்டு வரோம் உங்க மூலமா.'
'கேட்க நல்லாத்தான் இருக்கு.'
'மேடம், நான் ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்களே. நீங்க நல்ல டேலண்ட்டான லேடிதான். ஆனா எல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்கணும்னு நெனைக்கிறீங்க. அது எப்போதும் முடியாது, அத ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கோங்க. உங்க வளர்ச்சிய ஒண்ணு தடுக்கறதுன்னு சொன்னா, அது உங்க கிட்ட இருக்கிற இரக்க குணம்தான். நல்ல குணம்தான், ஆனா எல்லா எடத்துலேயும் இரக்கத்த காட்ட நெனச்சு நீங்க தோத்து போறீங்க. ஸ்ட்ரெயிட்டா சொல்லப் போனா, நீங்க மாத்திரம் ஸ்ரீதர் சார இங்குட்டு திரும்பவும் அழச்சிகிட்டு வரலைனா, இன்னிக்கு இந்த பிரச்சனையை ஈஸியா சமாளிச்சிருப்பீங்க. போல்டா நின்னு சாதிச்சிருப்பீங்க. இப்பவும் கொறஞ்சு போயிடல நீங்க. ஸ்ரீதரை தற்சமயம் ஒரு gக்ரீடி காம்பெட்டிடாராக மட்டும் பாருங்க'.
'நீங்க பிராபகர சேர்த்தீங்க. வாட் அபௌட் ஜெயஸ்ரீ?'
'அநேகமா இந்த கேம்ல அவங்க இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தோணறது. கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்துட்டு ஸ்ரீதரோட சேர்ந்துடுவாங்க. ப்யூரா இது என்னோட கெஸ்தான். ஒருக்கால் நம்ம கூட வந்தா சேர்த்துப்போம். தப்பில்லை.'
வழுதியின் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு புரிதலையும் உந்துதலையும் கொடுத்தது. சிலமுறை நாம் குழம்பிக் கொண்டிருக்கும்போது சிலரோடு பேசும்போது ஒரு தெம்பு கிடைக்குமே அப்படி உணர்ந்தாள் மைதிலி.
தன்னுடைய கல்யாண நிர்பந்தங்களையும் வழுதியுடன் பேசி ஒரு தெளிவு பெறலாமே என்று சற்று யோசித்தாள்.
'வழுதி, உங்க கிட்ட இன்னொரு விஷயம் சொல்லனும்னு நெனைக்கிறேன். இது பர்ஸனல். ரொம்ப பர்ஸனல். இருக்கற ஆஃபீஸ் பிரச்சனை போதாதுன்னு இந்த பர்ஸனல் விஷயம் வேற உறுத்திகிட்டே இருக்கு.'
'வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெத்தவங்க கம்பெல் பண்றாங்களா?'
'அப்பா... நீங்க நெஜமாலுமே ஒரு ஜீனியஸ். சட்டுனு கண்டுபிடிச்சிட்டீங்களே? நேத்திக்கு பெண் பார்க்க மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்தாச்சு.'
'அடே அடே.. கேட்கவே சந்தோஷமா இருக்கு மேடம். அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளையோட ஆஃபீஸ் பிரச்சனையை ஓரளவு முடிச்சிட்டு கல்யாணசாப்பாட்டுல கவனம் செலுத்துங்க. எல்லாம் நல்ல படியா போகும்.'
'இருங்க வழுதி. மாப்பிள்ள யாருன்னு கேட்கலையே?'
'அதான ... யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி.'
'முரளி'
சற்று யோசித்து விட்டு, 'யாரு? முரளியா? அன்னிக்கு ஸ்ரீதர தேடிகிட்டு ஒருத்தர் கோர்ட்டுக்கு வந்தாரே, அவரா மேடம்?'
'எக்ஸாக்ட்லி. அவரே தான்.'
'அவர் ... எப்படி ... உங்க வீடு தேடி வந்து.... ஒண்ணுமே புரியலையே மேடம்.'
முரளி வந்து விட்டுப் போனதை வழுதியிடம் விவரிக்கிறாள். தான் பெற்றோரிடம் சில மாதங்கள் முன்பு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது முதல் நேற்று வரை.
'ஏங்க ஒரு வாரம்... உடனே எஸ் சொல்லியிருக்க வேண்டியது தானே. மாப்ள பையன தான் நான் பார்த்திருக்கேனே. சூப்பர் கலர், ஸ்ட்ரக்சர், படிச்ச களை அப்படியே முகத்துல தெரியும்..
போங்க, நீங்க தப்பு பண்ணிட்டீங்க. எஸ் சொல்லியிருக்கணும்.'
'இல்ல வழுதி... ஒரு வாரத்துக்கு அப்புறம் கூட எஸ் சொல்லுவேனான்னு சந்தேகமா இருக்கு. டோட்டல் டைலம்மா என் மனசுல.'
'ஏன் மேடம் வீணா மனச போட்டு குழப்பிக்கறீங்க. பர்ஸனல் லைஃப் வேற. ப்ரொஃபஷன் வேற. ஒண்ணுக்காக ஒண்ணு தியாகம்ங்கறதெல்லாம் வீணான பேச்சு. அந்த மாப்பிள்ள புள்ளையோ அவ்வளவு நம்பிக்கை கொடுக்குது உங்களுக்கு. தைரியமா எஸ் சொல்லுங்க. அவரைப் பத்தி நல்லா விசாரிக்கணும்னா சொல்லுங்க. நானே இறங்கி உங்களுக்கு ரெண்டு நாளுல ரிப்போர்ட் கொடுக்கறேன். அவரோட விஸிடிங் கார்டு கூட என் கிட்ட இருக்கே. யாருக்கும் தெரியாம விசாரிச்சு சொல்லிடறேன்.'
'அதெல்லாம் வேண்டாம். அந்த ஸ்ரீனிவாசனோட மீட்டிங் முடிஞ்சுடுத்துன்னாதான் நிம்மதியா யோசிக்க முடியும்...'
'போங்க மேடம்... ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு அக்கறை கூடாது எங்க மேல. நாங்கெல்லாம் நல்லா வருவோம் மேடம். இப்படி மத்தவங்களுக்காக யோசிக்கிற குணம் யாருக்கும் அமையாது. உங்களுக்கு நிறையவே இருக்கு. உங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமஞ்சு நல்லா வருவீங்க, நீங்க வேணா பாருங்க.'
'நம்ம சாரோட டெத் நம்மள எப்படி ஆக்கிடுத்துப் பாருங்க.'
'ஒண்ணும் ஆகல மேடம். நமக்கு இன்னும் தெம்ப கொடுக்குதுன்னுதான் நான் எடுத்துக்கறேன். நடக்கப் போற மீட்டிங்குல நமக்கு யார் யார் எப்படி எப்படின்னு தெரிஞ்சுடும். ஏதோ ஒரு ச்சாய்ஸ் அவங்க கொடுக்கத்தான் போறாங்க. சரியா இருந்தா அப்படியே ஏத்துப்போம். இல்லாட்டி சாமர்த்தியமா நெகோஷியேட் பண்ணுவோம். நீங்க ரொம்பவே கவலப் படுறீங்க தேவையில்லாம. இருக்கும் உங்க கல்யாணத்துக்கும் முடிச்சு போட்டு கொழப்பிக்காதீங்க.'
'அன்னிக்கு எங்க வீட்டுக்கு நீங்க வந்தபோது உங்களுக்கு தமையன் கெடச்சதாக என்ன பார்த்து சொன்னீங்க. நான் ஏதோ ஸிம்ப்பதியில எனக்கு ஆறுதல் சொன்னதாத்தான் நெனச்சேன். ஆனா, இன்னிக்கு இவ்வளவு தூரம் பேசினதுல நெசமாவே எனக்கு ஒரு தங்கச்சி கிடச்சதாவே நான் நெனைக்கிறேன். இந்த அண்ணன் சொல்றேன். அந்த ஸ்ரீனிவாசனோட மீட்டிங் முடிஞ்சு உடனே தைரியமா அந்த முரளிகிட்ட எஸ் சொல்லுங்க. கடவுள் ஏதோ உங்களுக்கு நல்ல வாழ்க்கைய காட்டுறாருன்னுதான் எனக்கு தோணுது.'
'சரி வழுதி. என்னால உங்க வீட்டு சமையல் தாமதப் படுது. நான் கிளம்பறேன். நாளைக்கு ஆஃபீஸ்ல பார்க்கலாம். நாம பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம்.'
'சரி மேடம்... ஆண்டவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்.'
மணிமேகலையிடமும் வழுதி அப்பாவிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறாள்.
தொடரும்....
No comments:
Post a Comment