Sunday, December 12, 2021

கனியுமோகாதல்_66

கனியுமோகாதல்_66

வழுதியின் வார்த்தைகள் அவளுக்கு பலத்தைக் கொடுத்தன.

'அப்பா கிட்ட அன்னிக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க சொல்ற வரைக்கும் ஸ்ரீ மேல எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலியே?  ஏன் திடும்னு அப்படி தோணித்துன்னே தெரியலையே'

'இத்தனை வருஷம் பழகறோம். ஒரு தடவை கூட அவன் என்ன பிடிச்சிருக்கறதா சொல்லவே இல்லையே?  வீணா நான் மாத்திரம் ஏன் இதையே நெனச்சு கவலப் படணும்?  ஒருவேள அவன் தனக்கு இந்த மாதிரி அபிப்ராயம் இல்லைனுட்டா, இத்தனை நாள் ஃப்ரெண்ட்ஷிப் கெட்டுப் போயிடும், இல்லையா?

'அப்பா ஒத்துண்டா ப்ரொஃபஷன் பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்தப்பறம் அவன் கிட்ட சொல்லலாம்னு நெனைக்கிற சமயத்துல இப்படி அவன் டிஃபரெண்டா, ஸெல்ஃபிஷா பிஹேவ் பண்றானே.  இவனோட கை கோர்த்துண்டா என்னையும் ஸெல்ஃபிஷ்னு மத்தவா நெனைக்க மாட்டாளா?  ஏதோ நாங்க ரெண்டு பேரும் ட்ராமா போட்டு கேஸ்களை எல்லாம் எங்களுக்கு திருப்பிண்டதா நெனைக்க மாட்டா?'

'வழுதி் சொன்ன மாதிரி ஸ்ரீயை இங்க திரும்ப கம்பெல் பண்ணி கூட்டிண்டு வந்தது எவ்வளவு பெரிய குழப்பத்துல விட்டிருக்கு?'

'கல்யாணத்த கொஞ்சம் போஸ்ட்போன் பண்ணலாம்னு நெனச்சா இந்த முரளி அலையன்ஸ் வேற வந்து வந்து டிஸ்டர்ப் பண்றதே.'

'இன்னிக்கு என்னவோ ஹோப் கொடுக்குறான் இந்த முரளி.  நாளைக்கு அவாத்துல மாத்திப் பேசினா?  அவா கிட்ட அதுக்காக சண்ட போட்டுண்டா இருக்க முடியும்?'

'அப்படிப் பாத்தா ஸ்ரீ கூடதான் மாத்தி மாத்தி பிஹேவ் பண்றான்.  நேத்திக்கு காம்ளெக்ஸ் ...  இன்னிக்கு ஸெல்ஃபிஷ்... நாளைக்கு பொறாமை அது இதுன்னு எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாமே ஸ்ரீ என் கிட்ட.'

எண்ணங்கள் குவிந்து விட்டால், கேள்விகளுக்கா பஞ்சம்?  மனசு என்ன சொல்றதுன்னு தெரிஞ்சிக்க கேள்விகள் முக்கியம் இல்லையா? குழப்பம் தீர மனசு கிட்ட போனா மனசு குழப்பிவிடுகிறது எதையெதையோ சொல்லி.

பிக்‌ஷேஸ்வரன் மறைவிற்கு பதினைந்து நாட்கள் கழித்து ஆஃபீஸ் திறக்கப் படுகிறது.  கால் மணி நேரம் முன்னாலேயே வந்து விட்டாள் மைதிலி.

அவளுக்கு ஆச்சர்யம் அவளுக்கு முன்னரே ஜெயஸ்ரீ ஆஃபீஸில் இருந்ததுதான்.

'ஹாய் ஜெயஸ்ரீ, குட் மார்ணிங்.  என்ன அதிசயம்?  இவ்வளவு சீக்கிரம்.'

'உன்னப் பார்த்து ரெண்டு வாரம் ஆகறதா?  அதான் இருப்பு கொள்ளல.'

'ஏய், எனக்கு காதெல்லாம் குத்தியாச்சு.  ரெண்டு வாரமா?  அப்ப கோர்ட்டுல பார்க்கறதெல்லாம் என்ன கணக்கு?  சரி, உள்ள வா.  மத்தவா வர வரைக்கும் சித்த பேசிண்டிருக்கலாம்.'

பிக்‌ஷேஸ்வரன் அறையில் இருவரும் உட்காருகிறார்கள்.

'சந்தர் ஏதாவது சொன்னாரா?'

'சொன்னான்.  ஆனா அத பத்தி எல்லாரும் வந்தோண்ண பேசலாம், சரியா?'

'டெய்லி உன்ன பத்திதான் யோசிச்சிண்டிருப்பேன்.  சாரோட சோகத்துலேந்து சீக்கிரம் நீ வெளிய வரணும்னு.'

'முடியலதான் ஜெய்.  இன்னிக்கு கூட ஆத்துலேந்து இங்க வரதுக்குள்ள அவரோட நெனைப்பு தான்.  எதுக்கு இந்த ப்ரொஃபஷன்லாம்.  கல்யாணம் கார்த்தின்னு பண்ணிண்டு நாம, நம்ம குடும்பம்னு இருந்துடலாமோன்னு கூட தோணித்து.  அப்புறம்தான் கொஞ்சம் மனச திடப் படுத்திண்டேன்.'

'உன்ன மாதிரி நான் இல்லப்பா.  நான் முடிவே பண்ணிட்டேன் மைதிலி.  அப்பா கிட்ட கூட சொல்லிட்டேன், பார்க்க சொல்லி.  ஏதோ ஜாலிக்காகத்தான படிச்சேன் நான்.  பெரிய ஆஸ்பைரேஷனோ ப்பேஷனோ இந்த ப்ரொஃபஷன்ல எனக்கு இல்ல.  நம்மளத் தேடிண்டு நாலு கேஸ் வருதா.  அத மாத்திரம் பார்த்துண்டு வந்தா போதும்னு நெனைக்கிறேன்'

'அட்றா சக்க.  நிஜமாவே அப்பா கிட்ட சொல்லிட்டியா மாப்பிள்ள பார்க்க சொல்லி.'

'பார்க்க சொல்றதா?  பார்த்து வெச்சுருக்கேன்.  பார்த்துட்டு வாங்கோ அவாளன்னு சொல்லியிருக்கேன்.'

'அடிப் பாவி.  என் கிட்ட இது வரைக்கும் மூச்சே விடாம ...  உன் கிட்ட மாட்டினவன் யாரு?'

'நீ வேற.  அவன் எங்க மாட்டினான்.  நான் தான் ரெண்டு வருஷமா அவன் முன்னாடி ஸ்டைலையெல்லாம் காமிச்சிண்டிருக்கேன்.  பய திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கறான்.  சரி, இந்த பய லவ்வுக்கெல்லாம் செட்டாக மாட்டான்.  ஸ்ட்ரெயிட்டா கல்யாணத்துல இறங்கிட வேண்டியதுதான்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.'

'அப்பா ஒண்ணும் உன்ன சொல்லலையா?'

'நான் ஏதோ தையா தக்கான்னு குதிப்பார்னு பார்த்தா, குட் ச்சாய்ஸுனு கைய கொடுக்கறார்.'

'யாருடி அவன்?  என் சிநேகிதியின் சிந்தை கவர் கள்வன்..'

'யூ gகெஸ் ஃபர்ஸ்ட்.  யூ ஆல்ஸோ நோ ஹிம்.'

'ஒரு வேளை...'. மனதில் உடனே பட்ட gகெஸ் ஸ்ரீதர்.  சொன்னால் ஆமாம் என்று சொல்லி விட்டால்?'. கொஞ்சம் நெஞ்சு பட பட.  இல்லையென்றால்தான் நம்புவதற்கில்லை.

பதில் யூகிக்க முடிகிறது.  ஜெயஸ்ரீயிடம் சொல்லத் தயக்கம்.  இருந்தாலும் கேட்டுவிட்டாளே தன்னிடமே?  ஏதாவது சொல்லித்தானே ஆகணும்?

'யூ மீன்... ஸ்ரீ...  ஸ்ரீதர்?'

'எஸ்.  யூ ஆர் ரைட்.'

அந்த க்ஷணப் பொழுது .. பெருகி வந்த கண்ணீரை அடக்கிய க்ஷணம்.  அவள் மனதை யாரோ பெரிய பாராங்கல்லால் அழுத்திய க்ஷணம்.  உதடுகள் உலர்ந்த க்ஷணம்.

நாடகத்தனமான சிரிப்பை உதடோரத்தில் வைத்துக் கொள்வதற்குள் பட்ட பாடு?  அவளின் வருத்தத்தில் எப்படி அவளிடம் தொடர்வது?  ஏதாவது நாடகத்தனத்தை நுழைக்கத்தானே ஆகவேண்டும்.

'ஏண்டி, சரியான திருட்டுக் கோட்டான் நீ.  இவ்வளவு தூரம் க்ளோஸா இருந்திருக்கோம்.  அன்னிக்கு நாம பேசிண்டிருக்கும்போதே சொல்லியிருக்கலாமோன்னோ?'

ஜெயஸ்ரீயுடன் இனி வரும் சம்பாஷணைகளில் ஒரிஜினல் உணர்வுகளை அடக்கிக் கொண்டு பேசவேண்டும்.  அடிக்கடி தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு தொடர்கிறாள்.

'இந்த ஆஃபீஸ் வந்ததுலேந்தே ஹீ ஹாஸ் பீன் அட்ராக்டிங் மீ.  நானும் ஸ்ரீதர் சார என் பக்கம் திருப்ப முயற்சி பண்ணினேன்.  கண்டுக்கவே இல்லாம அவர் இருந்தது என்னால ஏத்துக்கவே முடியல.  ஒரு டவுட் இருந்தது ஒருவேளை உன்ன விரும்பராரோன்னு.  அப்படி இருக்கரதாவும் தெரியல.  உன் கிட்டேயும் அதான் அன்னிக்கு இன்டைரக்டா கேட்டுண்டேன். நீயும் பிடிச்சிருக்குன்னு சொன்னியே தவிர ஒத்து வராதுங்கறதுல உறுதியா இருந்த.  ஸ்ரீதர் சார் அப்பாகிட்டேயும் அதையே சொன்னதா சொன்ன என் கிட்ட.'

'சாரி, ஜெயஸ்ரீ.  உன் மனசுல அவன் இருக்கறது தெரியாம எனக்கு அவன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.'

'இதுல ஒண்ணும் தப்பில்லையே மைதிலி.  நீயாவது சொன்ன.  ஆனா நான்?'

'உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு.  தயங்காத ஜெயஸ்ரீ.'

'மைதிலி, லெட் மீ பீ ஃப்ரேங்க் வித் யூ.  அப்பாவ போய் ஸ்ரீதர் சார் அப்பாவோட பேச சொல்லியிருக்கேன்.  ஸ்ரீதர் சார் என்ன நெனைக்கறார்னெல்லாம் எனக்கு தெரியாது.  மே பி திஸ் இஸ் மை லாஸ்ட் அட்டெம்ட்.  ஒருவேளை உன் மேல அவருக்கு விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சா கூட எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை.  லைஃப்ல நாம எஃபோர்ட்ஸ் தான் எடுக்க முடியும்.  நாம ஒண்ண நெனச்சு பண்றோம்.  பெருமாள் என்ன முடிவு பண்ணியிருக்கார்னு நாம என்ன ஜோஸ்யமா பார்க்க முடியும்?'

'ஏய் .. ஏய்..  என்ன நீயே என்னவெல்லாமோ கற்பனை செஞ்சிண்டு?  எனக்கு அவன் மேல இருந்தது ஒரு விருப்பம் தான்.  நான் ப்ராக்டிகாலிடியையும் யோசித்து முடிவெடுக்கறவ.  எனக்கு தோது பட்டு வராதுன்னு அன்னிக்கே முடிவு பண்ணினதுதான்.  நானும் அவன் கிட்டேயும் அவனோட அப்பா கிட்டேயும் பேசி உனக்கு அவன முடிக்கிறேன்.  நீ ஒண்ணும் கவலப் படாத.  வீணா போட்டு மனச குழப்பிக்காத.  என்ன விட அவன உனக்குதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு தோணறது.  ஐயர் ஐயங்கார் பிரச்சனை இல்லை.  உங்காத்துலேயும் ஸ்ரீயை பிடிச்சிருக்கு.  ஏதோ அவன் தொழில்ல சரியா கால் ஊண முடியலையேங்கற வருத்தத்தில தான் அப்படியும் இப்படியும் பேசறான்.  அதெல்லாம் நீயே சரி செஞ்சுடுவ.  எனக்கு நம்பிக்கை இருக்கு.  விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.  நானும் உனக்கு துணையா இருப்பேன்.'

பேசிக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக பாதி கதவை திறந்து குட் மார்ணிங் சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.

'லெட் அஸ் ஃபோகஸ் ஆன் ஜாப் ஜெயஸ்ரீ.  பீ கூல்.  ஐ ஆம் வித் யூ.'

ஜெயஸ்ரீ விடைபெற்ற சில நிமிடங்களில் சந்தர் மைதிலியைப் பார்க்க உள்ளே நுழைகிறான்.

தொடரும்....

No comments:

Post a Comment