Sunday, December 12, 2021

திருக்குறுக்கை வீரட்டேஸ்வரர்

 இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

பூர்வ புண்ணியமும்,ஸ்ரீகாலபைரவரின் அருளாசியும் இருக்கிறதோ அவர் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல முடியும்.தொடர்ந்து  ஒன்பதுதேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்த ஆலயத்துக்கு வருகை தந்து இவரை வழிபட நமது முன்னோர்களின் 71 தலைமுறைகளாக சுமார் 20,000 தம்பதியரின்பெண்சாபமானது விலகும் என்பது உறுதி. 

சோழ நாடு காவிரி வடகரை தலங்கள்

274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

26. திருக்குறுக்கை (கொருக்கை)

சிவஸ்தலம் பெயர்

திருகுறுக்கை

இறைவன் பெயர்
வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்
ஞானாம்பிகை
தேவாரப் பாடல்கள்
அப்பர்
1. ஆதியிற் பிரம னார்
2. நெடியமால் பிரம னோடு


எப்படிப் போவது


மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருஅன்னீயூர் (பொன்னூர்) தலத்தில் இருந்து வடக்கே உள்ள இத்தலத்தை பாண்டூர் வழியாகச் சென்றும் அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருகுறுக்கை   
  போன் நெம்பர்94435227044
நீடூர் அஞ்சல்
வழி நீடூர்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN – 609203

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

மக்கள் வழக்கில் 'கொருக்கை' என்று வழங்குகிறது.

இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, 'தீர்க்கபாகு' என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் 'குறுங்கை முனிவர் ' என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் 'குறுக்கை' என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.

திருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.

கோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார். காமதகன மூர்த்தியை வழிபட்டால் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும்.

சிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கருவறை விமானத்தில் இறைவன் யோகத்தில் வீற்றிருத்தல், மன்மதன் மலர்க்கணை தொடுத்தல், காமனை இறைவன் விழித்து எரித்தல் முதலிய இத்தல வரலாற்று நிகழ்ச்சிகள் சுதைச் சிறபங்களாக அமைக்கப் பெற்றுள்ளன.

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.

தலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன் இருக்கும் சூல தீர்த்தம் கங்கையைவிட புனிதமானது. இதன் பெருமை அறியாது தீர்த்தவாகு முனிவர் இத்தலத்தை அடைந்து கங்கையைக் கொண்டுவர விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று. இவ்வாலயத்தில் குறுங்கை விநாயகர் சந்நிதியில் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் உள்ளது. குறுங்கை விநாயகர் ஆவுடையார் மீது இருப்பது விசேஷமானது.

சிறப்புகள்

மன்மதனை எரித்தத் தலம்.

யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.

ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.

கொடிமரமில்லை.

காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

குறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

நடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை, 'சம்பு விநோத சபை', 'காமனங்கநாசனி சபை' எனப் பெயர் பெறும்.

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

தொடரும் 

திருச்சிற்றம்பலம்

#திருக்குறுக்கை_பாலாலயம் 

#திருகுறுக்கை 08/11/2021

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான  ஸ்ரீஞானாம்பிகை சமேத யோகீஸ்வரர் (காமதகனர்) திருக்கோவில் திருப்பணி பாலாலயம்

#தருமைநட்சத்திரகுருமணிகள் 

திருமுன்னர் சிறப்பாக நடைபெற்றது.

#வீரட்டேஸ்வரர்கோவில்தலவரலாறு.

#DharumaiAdheenam

#DharumaiNatchathiraGurumanigal

#ஸ்ரீமத்சொக்கலிங்கதம்பிரான்

#தருமைசுப்பிரமணியதம்பிரான்சுவாமிகள்

#சட்டநாதசம்பிரான்

#தருமைநட்சத்திரகுருமணிகள்

thiruvaiyaru.in

#திருவையாறுசிவகணங்கள்

#Dharumapur

செய்வது அன்பு செய்திட நன்கு
மெய்வழி யாகும் மேன்மையுங் கூடும்
எய்திய பாவம் எளிதிலே மாயும் 
செய்துநீ பாரு சொன்னது சிவமே!

ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

வாழ்க வளமுடன் 🙏🙏🙏-திருகுறுக்கைவீரட்டானத்தின்மறக்கப்பட்ட_பெருமைகள்*!!!

தமிழ்நாட்டில் எட்டு இடங்களில்  ஸ்ரீகாலபைரவர் திருவிளையாடல்கள் புரிந்திருக்கிறார்.அந்த எட்டு இடங்களில் ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவத்தில் அருட்பேரரசு புரிந்து வருகிறார்

இந்த எட்டு இடங்களுமே அட்டவீரட்டானம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இந்த அட்டவீரட்டானங்களின் இருப்பிடம் பற்றி ஏற்கனவே நாம்  எழுதியிருந்தோம்;

தற்போது,இந்த இடங்களுக்குச் சென்று,இந்த ஸ்தலங்களின் மகிமைகளை விசாரித்துப் பார்த்தால்

மறக்கப்பட்ட ஸ்ரீகாலபைரவரின் பெருமைகள் இமயமலையளவுக்கு கிடைத்திருக்கின்றன.நமது ஆன்மீக வரலாற்றிலும் பல ரகசியங்கள் வேண்டுமென்றே  மறைக்கப்பட்டிருக்கின்றன;திரிக்கப்பட்டிருக்கின்றன;குழப்பத்தை உருவாக்கி,உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் வைவஸ்தவ மன்வந்திரத்தில்,இருபத்து நான்காவது மகாயுகத்தில் இருக்கும் நான்காவது யுகமான கலியுகத்தில்       5117 ஆம் ஆண்டில் வசித்து வருகிறோம்..(இந்துக் காலக் கணக்கினை எந்த ஒரு மேல்நாட்டினராலும் புரிந்து கொள்ளவே முடியாது;இந்துக் காலக் கணக்கு எந்த ஒரு தனி மனிதனின் பிறப்பையும் மையப்படுத்தாமல்,ஸ்ரீகால பைரவரின் மூச்சை கணக்கிட்டு மதிப்பிடப்படுகிறது.வெறும் 2000 ஆண்டு வரலாறு கொண்ட மேல்நாட்டினரால் இந்துக்  காலக்கணக்கின் பரிணாமத்தை  புரிந்துகொள்ளவே முடியாது)

ஏறுடன் ஏழு அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறுடைச் சடையினானை அருச்சித்தான் அடியிணைக்கீழ்
வேறுமோர் பூக்குறைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே(அப்பர்)
காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம்)

முக்கண் முழுமுதலின் நெற்றிக்கண் தீப்பொறியால் மகாவிஷ்ணுவின் மகன் மன்மதன் அழகிய உடல் எரிந்து சாம்பலாய்க் குறுகியதால் குறுக்கை என்று பெயர் பெற்றது என்பதை திருமந்திரமாக திருமூலர் தெரிவிக்கிறார்.

இராமன் வனவாசம் இருந்த காலங்களில் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்து பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட பல தலங்களில் கொறுக்கையும் ஒன்று.

மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் கொறுக்கைக்கு அருகில் விபூதிக்குட்டை என்று வழங்கப்படுகிறது.

கணவன் இறந்துபட்டு உடலும் எஞ்சாமல் முழுவதும் எரிந்து சாம்பலானதைக் கண்ட ரதிதேவி சிவபூஜையால் சாதிக்கமுடியாதது

எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பல தலங்களையும் வழிபட்டு இறுதியாக திருக்கொறுக்கையை அடைந்தாள்.குளம் ஒன்றை உண்டாக்கி கடுக்காய் மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து,பூஜித்தாள்.புத்திரசோகத்தால் வருந்திய மகாவிஷ்ணுவும், மஹாலட்சுமியும் திருக்குறுக்கையை அடைந்து ரதிதேவியுடன் சேர்ந்து பரம்பொருளை பூஜித்தனர்.எல்லையில்லா கருணை காட்டும் கருணாகரனாகிய சதாசிவம் மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ்வளித்தார்.மீண்டும்  உயிர் பெற்ற மன்மதன் தனது மனனவியாகிய ரதிக்கு மட்டுமே தெரியும் விதமாகவும் வரமளிருனார்.உடம்பு இழந்து அநங்கனாய மன்மதன்(சம்பந்தர்)

மஹாவிஷ்ணு,மஹாலட்சுமி,ரதி ஆகிய மூவரின் சோகங்களையும் நீக்கியதால் கொறுக்கை ஈசனுக்கு சோக ஹரேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.கொறுக்கையின் ஸ்தலவிருட்சம் கடுக்காய் மரம் ஆகும்.

அடிமுடி காண்பர் அயன் மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார் மிசைக்கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே

என்று திருமந்திர ஆகமம் காட்டுகிறது.பொய் பேசிய பாவத்தினால் பிரம்மர்களுக்கு பூவுலகில் திருவுருவமும் பூஜையும் இல்லாமல் போயிற்று.பல ஊழிகளுக்குப்பிறகு, பிரம்ம பதவியில் இருந்த ஒரு பிரம்மன்திருக்குறுக்கை வீரட்டேஸ்வரரைப் பூஜித்து வழிபட்டார்.வழிபடுவோர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் உலகநாதன் பிரம்மன் உருவம் சிவாலயங்களில் இருக்குமாறு வரம் அருளினார். 

கொறுக்கையானது மயிலாடுதுறைக்கு அருகில் சாலைப் போக்குவரத்திலிருந்து விலகி அமைந்திருக்கிறது.

திருக்குறுக்கைகோயி லின்இன்றைய_நிலை*

அழிந்து வரும் திருநாவுக்கரசர் சுவாமிகள் திருஞானசம்பந்தர்/திருமூலர்/நக்கீரர்/பரணர் / தேவாரம்/ திருமுறைகள் பாடல் பெற்ற சிவாலயம் திருக்குறுக்கை வீரட்டானம் நாகை பட்டினம் மாவட்டம் /மயிலாடுதுறை வட்டம்/ மயிலாடுதுறையில் இருந்து வில்லியனூர் செல்லும்

வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

திருக்குறுக்கை (கொருக்கை) கொற்கை அழிவின் விளிம்பில் உள்ளது கும்பாபிஷேகம் நடைபெறாமல் 58 ஆண்டுகள் ஆகி விட்டது

திருக்குறுக்கை சுவாமிக்கு தினமும் முறையான அபிஷேகம் சிவபூசை கிடையாது கண்டு கொள்ள நாதி இல்லை

இங்கு உள்ள புகழ்பெற்ற சம்பு விநோத சபை நடராஜர்/சிவகாமி/மாணிக்கவாசகர் திருமேனிகள் திருட்டு போய் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியும் முறையாக கண்டு பிடிக்கவில்லை

சிவாச்சாரியார் மாதம் சம்பளம் 500 ருபாய் வருடத்திற்கு 190 கிலோ நெல் இதை வைத்து சிவாச்சாரியார் என்ன செய்வார்கள் அதனால் அவர்கள் சிவாலயங்த்தை பராமரிப்பு செய்வது இல்லை முறையாக கால பூசை நடைபெறுவது இல்லை

திருக்குறுக்கை தலவிருட்சம் மரம் கடுக்காய் மரம் முழுவதும் பூச்சி அரித்து அழிந்து கொண்டு வருகிறது 

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கடுக்காய் மரம் குறுக்கை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் மடப்பள்ளி அந்த காலத்தில் பிரமாண்டமாக கட்டி உள்ளார் 25 வது தருமபுரம் சன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர் (இன்று கட்ட வேண்டும் என்றால் 1 கோடி செலவு ஆகும்)அதை பராமரிப்பு செய்யாமல் மடப்பள்ளி அழிந்து விட்டது

மிகவும் சிரமப்பட்டு பல லட்சக்கணக்கான மதிப்புள்ள உபயதாரர்கள் வாங்கி தந்த சுவாமி வாகனங்கள் அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் அழிந்து விட்டது சுவாமி வாகனங்கள் மேல் கண்ட பொருட்களை வைத்து வாகனங்கள் உடைந்து விட்டது

சிவபெருமான் மன்மதனை தன்னுடைய நெற்றிக்கண்ணில் எரித்த தலம் காமதகன சிவாலயம் குறுக்கை வீரட்டானம் இப்போது எங்கே பார்த்தாலும் கருப்பாக பேய் வீடு போல் உள்ளது

பிரகாரத்தில் புதர்கள் முளைத்து காடு போல் காட்சி தருகிறது அதனால் பக்தர்கள் யாரும் பிரகாரம் வலம் வருவது இல்லை இரண்டு வாரங்களுக்கு முன்தினம் கோவிலுக்கு வழிபாடு வந்து பக்தர்களை பாம்பு தீண்டி உள்ளது

இவ்வளவு சிறப்பு வாய்ந்த 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் 60 ஆண்டுகள் மேல் கும்பாபிஷேகம் செய்யாமல் முறையாக பூசை செய்யாமல் உள்ளது !இந்த பதிவை படித்தபவர்கள் தயவு செய்து தாங்களால் இயன்ற உதவிகளை கோவிலை நேராக தொடர்பு கொண்டு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-

செய்வது அன்பு செய்திட நன்கு
மெய்வழி யாகும் மேன்மையுங் கூடும்
எய்திய பாவம் எளிதிலே மாயும் 
செய்துநீ பாரு சொன்னது சிவமே!

ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

வாழ்க வளமுடன் 🙏🙏🙏



No comments:

Post a Comment