Sunday, December 19, 2021

சென்னை To பெங்களூரு பகுதி 12

 🥀🌺🌹🥀🌺🌹🥀🌺🌹

சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 12

தலக்காடு

வீரர்களிடம் தப்பிக்க அலமேலம்மா காவரியில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார். அலமேலம்மா ஆற்றில் விழுகும் முன் இந்த தலக்காடு மணல் மேடாகட்டும். ராஜ உடையார் வம்சம் வாரிசே இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார். அவர் கூறியது போலவே பல கோவில்களுடன் அழகிய நகரமாக விளங்கிய தலக்காடு மணல் மேடானது. ஆண்டாண்டு ஆற்றங்கரையின் மண் சில அடி உயர்ந்து தலக்காடு பாலைவனம் போல் ஆனது. கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அதுமட்டுமல்லாமல் உடையார் குடும்பத்தையும் அலமேலம்மா சாபம் தொடர்ந்து வந்தது. இதுவரை பட்டத்து இளவரசர்களுக்கு ஆண் வாரிசுகள் பிறக்கவே இல்லை. தங்கள் உறவுகளுக்குள் தத்தெடுத்து பட்டத்து இளவரசர்களாக முடிசூட்டிக்கொண்டு பின்னர் மன்னர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

தலக்காட்டின் தென்கரையில் பாலைவனம் போன்ற -சுமார் 60 அடி உயரத்துக்கு, 800 ஏக்கர் பரப்பளவில், மணல் மேடுகள் உள்ளன. அந்த மேட்டுப்பகுதியில் ஆங்காங்கே முந்திரி மரங்கள். மேடுகளின் சரிவில் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். தூரத்தில் தமிழகத்தின் எல்லையைக் காட்டும் நீல நிற மலைகள்.

மூலவர்..கீர்த்தி நாராயணப்பெருமாள்...

தரிசனம் முடிந்து T நரசிப்பூர் பஸ் ஏறறோம் ….

T நரசிப்பூர். 

இவர் ராத்திரயோட ராத்திரி மைசூர் போயிடலாம்கறார். 

இன்னிக்கு வெயில்ல காட்டு வழில இழுத்துண்டு வந்திருக்கேள்..ஒடம்பு பார்ட் பார்ட்டா வலிக்கறது. மொதல்ல நல்லதா ரூம் போடறத பாருங்கோ..காத்தால முக்கூடல் சங்கமம் கறேளே.  அதுல தீர்த்தமாடிட்டு  நரசிம்மர தரிசனம் பண்ணட்டுதான் நான் வருவேன்கறேன். 

லாட்ஜ் பாக்கப்போய்ட்டு இது சின்ன ஊர் சுமாரான லாட்ஜ்தான் கெடச்சதுன்னுட்டு வரார். ஆமாம் இல்லனா மட்டும் ஸ்டார் ஓட்டல்லரூம் கீம் போட்டுடேவேளேங்கறேன்.  

சூடா இட்லி கெடச்சதை சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கறோம். 

கார்த்தால ஆறுக்கு போறோம். தண்ணி அழுக்காதான்  ஓடிண்டு இருக்கு. எக்கச்சக்கமா குரங்கு வேறே…

கபினியும் காவிரியும் சங்கமிக்கும் இப்பகுதியை ‘முக்கூடல்’ என்கிறார்கள். ‘இரண்டு ஆறுகள்தானே கூடுகின்றன எப்படி முக்கூடல் ஆகும்?’ என்று கேட்டால், ‘வெளியில் கண்ணுக்குத் தெரிவது இரண்டு. பூமிக்கடியில் ஸ்படிகா நதி என்று இன்னொரு ஆறும் ஓடுவதாக ஐதீகம். அதனால்தான் இது முக்கூடல்’ என்று விளக்கம் தருகிறார்கள்.

இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விமரிசையாக கொண்டாடப்படுகிறதாம். 

.கோயிலின் இரண்டு புறமும் ஆறுகள். 1920-ல் ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது பாதி கோபுரம் வரை நீர் உயர்ந்து சென்றதாம். அதன் அடையாளமாக கோயிலில் ஒரு கல் ஒன்றை பதித்து வைத்திருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளின் ஓசை.

கிளி, குயில்,தோக்குருவி, வண்ணாத்திக்குருவி, மயில், காகம் என்று எல்லாம் குரல் கொடுத்து எழுப்பி விடும். கோடு கிழித்தாற்போல வானத்தில் நாரைக்கூட்டம் பறக்கும் அழகு,இதல்லாம் பாத்துண்டே

தீர்தமாடிட்டு பெருமாள சேவிக்க போறோம் 

இங்குள்ள குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி.

காஞ்சிபுரம் போல ஒரு பல்லி விக்ரகம் இருக்கு….

டிக்கட் வாங்கி படி ஏறி சேவித்து வந்தோம்.



No comments:

Post a Comment