Sunday, December 19, 2021

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு/தண்டுக்கீரை பொரியல்

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு:

 *தேவையான பொருட்கள் :"

  பொருள்அளவு சிவப்பு தண்டுக்கீரை 1 கட்டு கடலை பருப்புகால் கப்  பாசிப்பருப்பு கால் கப் சின்ன வெங்காயம் 10 தக்காளி 1  பூண்டு பல்2  மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன் எண்ணெய் தேவைக்கேற்ப  கடுகு  அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு  அரை டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப  தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் 3 சீரகம் அரை டீஸ்பூன்

 செய்முறை :

    கீரையை நன்கு தண்ணீர் வைத்து மண் போக அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

   பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கீரையை தண்டோடு நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டு பல், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

   ஊறிய பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து வைக்கவும்.


தண்டுக்கீரை பொரியல்:

 தேவையான பொருட்கள் :

  பொருள்அளவு தண்டுக்கீரை 1 கட்டு  தேங்காய் துருவல்முக்கால் கப்  எண்ணெய் தேவைக்கேற்ப  கடுகுஅரை டீஸ்பூன்  உளுந்தம் பருப்பு  அரை டீஸ்பூன்  பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய்  2 கறிவேப்பிலை ஒரு கொத்து உப்பு தேவைக்கேற்ப 

 செய்முறை :

    கீரையை நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடித்து விட்டு பொடிதாக நறுக்கி வைக்கவும்.

   வெங்காயத்தை பொடிதாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

   அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும், பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

   வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கீரை வேகும் வரை நன்றாக கிளறவும். 

   கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.


 🌹🌹  ஆர் வி ஜெ   🌹🌹

***********

No comments:

Post a Comment