Saturday, January 27, 2024

அடை

 அடை

தோசை க்கு cousin. அசின் மாதிரி மெல்லிசா இல்லாம பிந்துகோஷ் மாதிரி குண்டா இல்லாம ஒரு நடுத்தர தடிமனான ஒரு inch radius la இருக்கும் ஒரு பொன் நிற வஸ்து. 

இது ஒரு protein நிறைந்த புதையல் ன்னு கூட சொல்லலாம்.   தோசை மாதிரி சப்புன்னு இல்லாம, நன்னா காரசாரமா கண்ணுல ஜலம் வர வெக்கும். 

கல்யாணம் பண்ணி வெக்கற அப்பா என் பொண்ணு கண்ல தண்ணி வந்தா அது ஆனந்த கண்ணீர் ஆ இல்லை அடை சாப்பிட்டு வந்த கண்ணீரா இருக்கணும்ன்னு கூட சொல்லலாம்.   

அடைக்கு கசின் தோசை யா இருந்தாலும் பெசரட்டு, பயத்தம்பருப்பு தோசைன்னு கூட பிறந்தவர்கள் உண்டு. 

அடைக்கு சேர்க்கற பொருட்கள், ஊற வெக்கற நேரம், அரைக்கற பக்குவம், புளிக்க வெக்கற நேரம் இதெல்லாம் ரொம்ப முக்கியம்.  

ரொம்ப ஊறினா அடை மொறு மொறுப்பா இல்லாம துணி மாதிரி இருக்கும்.   ஊறவே இல்லை னா வெடுக்குன்னு பேசற மாமியார் மாதிரி இருக்கும். 

அதே தான் சேர்க்கற பொருட்களுக்கும்.  அரிசி பருப்பு எல்லாம் சரியான அளவுல இல்லைனா அடை, மடிச்சு வெக்கற துணி மாதிரி இருக்கும்,  

இல்லைனா தட்டுக்கும் அடைக்கும் வித்தியாசம் தெரியாம முரடா இருக்கும். 

பச்சரிசி, புழுங்கலரிசி, கடலைப்பருப்பு,  துவரம்பருப்பு,  உளுத்தம்பருப்பு எல்லாம் சரியான அளவுல கலந்து ஒரு மூணு மணி நேரம் ஊற வெச்சி அதோட நல்ல குண்டூர் உருண்டை மிளகாய்,  உப்பு,  கருவேப்பிலை சேர்த்து கொர கரப்பா அரைச்சு வெச்சிக்கணும்.  

இதுல ஒரு சிலர் ஆத்துல இஞ்சி சேக்கற பழக்கம் உண்டு.   சில பேர் மிளகு ஜீரகம் கூட சேர்த்து அரைப்பா.  இதுதான் சரி, இது நன்னா இருக்காது,  

இது எப்படி இருக்கும்ன்னு எல்லாம் கேக்க கூடாது.   எல்லாமே நன்னா தான் இருக்கும்.   அவரவர்கள் ருசி சம்பந்தப்பட்டது.  

இப்படி அரைச்ச மாவ ஒரு மூணு மணிநேரம் புளிக்க வெக்கணும்.  

அடைக்கு மாவு எவ்வளவு நன்னா இருக்கணுமோ அதே மாதிர வாக்கற விதமும் ரொம்ப முக்கியம்.   முதல்ல தோசை கல்லு.   

நல்ல இரும்பு தோசை கல்லா இருக்கணும்.   Non stick, indalium இதெல்லாம் சரி பட்டு வராது.   

எங்க பாட்டி கிட்ட தண்டவாள கல்லுன்னு ஒண்ணு இருக்கும்.   ரயில் தண்டவாள இரும்பு மாதிரி strong ஆ இருக்கும்.  சூடு ஏற நேரம் ஆகும்.   

ஆனா சூடு ஆயிட்டா perfect ஆ இருக்கும். அ‌ந்த மாதிரி ஒரு கல்லுல,  நன்னா சூடு ஆனதுக்கு அப்புறம்,  ஒரு சின்ன ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு துடை துடைச்சுட்டு, ஒரு பெரிய கரண்டி மாவ விட்டு ரொம்ப மெல்லிசா இல்லாம,  ரொம்ப தடியா இல்லாம வார்க்கணும்.  

சுத்தி எண்ணெய் விட்டு  நடுவுல ஒரு ஓட்டை போட்டு அதுலயும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நிதானமா அடுப்ப வெச்சா, மெதுவாக மொறுமொறுன்னு, நன்னா வரு‌ம். 

நல்லெண்ணெய் தான் ரொம்ப நல்லது.   அடுத்ததா கடலெண்ணை.  Sunflower ஆயில் கூடவே கூடாது.  

ஒரு பக்கம் ஆனதுக்கு அப்புறம் திருப்பி போட்டு அதே மாதிரி வேக விடணும். தகதகன்னு எண்ணெய் மினுமினுப்போட, பொன்னிறமா, மொறுமொறுன்னு அடைய பார்த்தா எப்போடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்.   

இதுலயும் ஒரு சில variations இருக்கு.   அடைய வார்த்து அது மேல வெங்காயத்த பொடி பொடியா திருத்தி போடலாம்.  பிஞ்சு கத்திரிக்காய, சின்ன சின்னதா திருத்தி போடலாம்.   பீர்க்கங்காய கூட திருத்தி போடற வழக்கம் உண்டு.   இதெல்லாம் அவா அவா ருசிய பொறுத்தது. 

அடைக்குன்னு சில combinations உண்டு.   வெல்லம்,  வெண்ணெய்,  எள் போட்ட நல்ல காரமான நல்லெண்ணை கலந்த மொளகா பொடி இதெல்லாம் ஒண்ணு ஒண்ணா தொட்டு சாப்பிட்டா, தெய்வம் இருப்பது எங்கே,  வேறெங்கே, அது இந்த அடையில் தானேன்னு ஒரு சின்ன பாட்டு பாடலாம்.   

எல்லாத்தையும் விட சூப்பர் combination நம்ம அவியல்.   எல்லா காயும் போட்டு, தேங்காய் பச்சை மிளகாய் அரைச்சு விட்டு,  கெட்டி தயிர் சேர்த்து,  தேங்கா யெண்ணைல செஞ்ச அவியல் இருந்தா, எப்படி MS மாமி கூட வயலின் கன்யாகுமரி, வீணை பாலசந்தர்,  விநாயகராம் கடம், உமையாள்புரம் மிருதங்கம் எல்லாம் சேர்ந்து  மாமி ரங்க பூர விஹாரா பாடினா இருக்குமோ அந்த மாதிரி தேவலோகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.   

கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,  அடையின் சுவை தான் வேறு எதற்கும் வருமோன்னு ஒரு ஆலாபனை பண்ணலாமோ, அந்த மாதிரி. 

அடை மாவு மீந்து போனா…  போகாது, அப்படி போனா,  வெங்காயத்த நறுக்கி போட்டு,  கெட்டியா எண்ணெய்ல பொறிச்சி எடுத்தா குணுக்கு.  

நன்னா மழை பெய்யும் போது இதுவும் ஒரு strong காப்பி இல்லை ஒரு strong மசாலா டீ சாப்பிட்டா, சொர்க்கமே என்றாலும் ன்னு இளையராஜா மாதிரி பாடலாம்.

அதுக்கும் மேல வெண்ணெய் வைத்து சாப்பிடறது Top Class !!!

எனக்கும் ஒரு தடவை வேறு ஒரு குரூப்பில் இருந்து அடைக்கான ரெசிபி ஒருவர் எழுதி இருந்தார் இப்பொழுதெல்லாம் நான் அந்தப் பிரபோஷனில் தான் செய்கிறேன் டேஸ்ட் நன்றாக இருக்கிறது பிடித்தவர்கள் அதையும் முயற்சி பண்ணி பாருங்கள் ரெசிபி தருகிறேன் புழுங்கல் அரிசி ஒரு கப், துவரம் பருப்பு முக்கால் கப், உளுந்தம் பருப்பு அரை கப், பாசிப்பருப்பு கால் கப். எல்லாவற்றையும் தனித்தனியாக ஊறப் போடுங்கள் ஒரு குட்டி கப்பில் பெருங்காயம் சிகப்பு மிளகாய் சோம்பு மூன்றையும் தனியாக ஊற வையுங்கள் அரைக்கும் போது எல்லா பருப்புகளையுமே தனித்தனியாக லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுங்கள் இந்த வர மிளகாய் சோம்பு பெருங்காயத்தையும்வேண்டுமென்றால் பாசிப்பருப்பு அரைப்பதற்கு முன்பாக அதை போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு அத்துடன் பாசிப்பருப்பை போட்டு ஒரு சுற்று விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுங்கள் அரைத்து விட்டு போடும்போது எல்லா வகையான பருப்புகளின் கலவையையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும் ஓட்டு போட்டு கரைத்து வைக்கவும். கிளைமேட்டுக்கு  தகுந்தாற்போல இரண்டு மணி நேரமும் அல்லது ஒரு நான்கு மணி நேரமும் புளிக்க விடலாம். ஊற்றுவதற்கு முன்பு துருவிய மஞ்சள் பரங்கிக்காய், மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து ஊற்றவும் இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி வெல்லம் வெண்ணை அவியல் உங்க இஷ்டம் எது பிடிக்குமோ அந்த சைடு dishஐ செய்து கொள்ளுங்கள் உளுந்தம் பருப்பு மட்டும் அரை கப் என்று போட்டிருப்பதில் கொஞ்சம் போல் கம்மியாக போட்டுக் கொள்ளுங்கள் மற்றபடி இதில் எந்த ஒரு மாற்றமும் நான் செய்யாமல் அந்த கொடுத்திருந்த ரெசிபி படியே  செய்கிறேன் நன்றாக முருகலாக வருகிறது



No comments:

Post a Comment