வசந்தகாலம் வருமோ?-90
By N Krishnamurthy
ராஜேஸ்வரியின் குடும்பம் அந்த இடத்தை விட்டு காலி செய்தவுடன், ரங்கநாயகி முகத்தில் கொதிப்புடன் " இது என்ன ரொம்ப அநியாயமா இருக்கு. இது மாதிரி மனசுல ஒரு எண்ணத்தை வெச்சுண்டுதான் அந்த மாமி, உங்க கூட எல்லாம் பழகிண்டு இருந்திருக்கா" என்று சொன்னவள் சாரங்கனை பார்த்து" நான் தான் ஒண்ணும் தெரியாத அப்பாவியா ஆயிட்டேன் . உங்கிட்ட வசுவோட சின்ன மாமியார் பையன் ஜாதகத்தை அனுப்பிச்சனே, இந்தப் பையனை மனசுல வச்சிண்டுதான், நீ அந்த ஜாதகத்தை ஜோசியருக்கு காட்டாத உட்டிருக்க போல இருக்கு. அப்புறம் நான் இதுல முயற்சி எடுத்துண்டதுக்கு என்ன அர்த்தம் இருக்கு?" என்று லேசாக கண்ணீர் விட ஆரம்பித்தாள்.இந்த அபாண்ட பழி தன் மேல் விழுந்ததை கண்ட
சாரங்கன் இதைக் கேட்டதும் மிகவும் கோபப்பட்டான். "அக்கா தோ பார்.வீண் பழி போடத. நான் நம்ப ம்ருது ஜாதகத்தையையும், அந்த பையன் ஜாதகத்தையும் ஜோசியர் கிட்ட காட்டலைனு நீ சொல்றயா. ஜோசியர் கிட்ட காட்டினேன். அந்த ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தமே இல்லேன்னு ஜோசியர் சொல்லீட்டார். அந்த மாமி கிட்ட அடுத்த நாளே நான் இத சொல்லிட்டேன். அதனால்தான் இந்த பங்ஷனுக்கு அந்த மாமி வரலைன்னு நெனைக்கறேன். என்ன வுட்டா நீ பாட்டுக்கு பேசிண்டே போறே" என்றான் குரலை உயர்த்தி. இதை கேட்ட ரங்கநாயகி " பேசு. சாரங்கா.பேசு .நேக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிண்டு இருந்தேன் பாரு. இன்னும் நான் எதையெல்லாம் கேட்டுக்கணம்னு இருக்கோ" என்று லேசாக அழ ஆரம்பித்தாள். வசுமதி தாயைப் பார்த்து " போறும்மா. போறும். நல்ல நாளும் அதுவுமா அழாத. மாமா தான் அந்த ஜாதகம் பொருந்தலைன்னு சொல்லிட்டா இல்லையா. நேக்கு கல்யாணம் பண்ற போது இது மாதிரி ஜாதகம் பொருந்தலைனா, நீ ஒத்துண்டிருப்பயா"
என்று கண்டிப்புடன் கூறவும், இதை எதிர்பார்க்காத ரங்க நாயகி வாயடைத்து போனாள். அவள் நிலமை எய்த்து பேட்ஸ்மனுக்கு பும்ரா போலிங் செய்தது போல் இருந்தது. அதன் பின்பு ரங்க நாயகி மெதுவாக "அவா ஸ்மார்த்தா. நம்ப ஸ்ரீ வைஷ்ணவா . அந்த பையன எப்படி பண்ணிக்க முடியும் .
வட கல, தெங்கலைக்குள்ளே சம்மந்தம் வெச்சிகறதக்கு தயங்கற நம்ப ஸ்மார்த்தா கூட சம்மந்தம் வெச்சிண்டா சரிப்பட்டு வருமா. ஊர்,உலகம் என்ன சொல்லும்?
சரி.
அப்படி பண்ணிக்கலாம்னு ஒரு வார்த்தைக்கு வெச்சிண்டா கூட ஜாதகம் பொருந்தி வரணுமா,வேண்டாமா? என்னமோ நான் பாட்டுக்கு புலம்பிண்டு இருக்கேன்.எதுக்கு?
நம்ப கொழந்த நல்ல படியா வாழணம்னு தானே.நேக்கு இதல எந்த உள் நோக்கமும் இல்ல" என்று திருவிளையாடல் தர்மி மாதிரி புலம்பினாள்.
இந்த விஷயத்தில் வசுமதி ராஜேஸ்வரிக்கு சப்போர்ட் பண்ணுவாள் என ஓரளுவுக்கு ரங்கநாயகி ஊகித்திருந்தாலும்,தன் மகளே தனுக்கு இவ்வளவு ஓபனாக எதிரியாவாள் என அவள் எதிர்பார்க்கவில்லை.
பத்மநாபனுக்கு ரங்கநாயகியின் நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரும் அவளை அடக்க நினைத்தார். அதை வசுமதியே செய்து விட்டதால்,மீண்டும் தான் பேசவேண்டாம் என அவர் வாளாயிருந்தார்.
கோமளம் மகள் வருத்தப்படுவதை பார்த்து மனம் கஷ்டப்பட்டாள்.
No comments:
Post a Comment