Thursday, January 18, 2024

தக்காளி தொக்கு

 தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி – 1/2 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு 
நல்லெண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு 

செய்முறை

ஸ்டெப் 1

தக்காளியை கழுவிய பின் தண்ணீர் இல்லாமல் துடைத்த பின்பு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை சூடான நீரில் ஊறவைத்து 1/2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். 

ஸ்டெப் 2

கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் 1 டீஸ்பூன் கடுகு உளுந்து சேர்த்து வெடித்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 

ஸ்டெப் 3

பின்பு மூடிவைத்து தக்காளியில் இருக்கும் தண்ணீர் பிரிந்து மென்மையாகும் வரை வேகவிடவும். 

ஸ்டெப் 4

தக்காளி நன்கு குழைந்த பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துக்  கொள்ளவும். பின் கரைத்த புளிக்கரைசலை  சேர்த்து  நன்றாக கலந்து விடவும்.

ஸ்டெப் 5

மிதமான சூட்டில் கலவை சிறிது நேரம் கொதித்ததும் பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து தொக்கு  கெட்டியாகும் போது  வறுத்து பொடித்த வெந்தயப்பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். 

இந்தத் தொக்கை இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்துடன் பரிமாறலாம். காற்று புகாத பாட்டிலில் சேமித்து ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 

Recipe links here 

https://www.virundhombal.com/2017/01/tomatothokku.html?m=1

https://www.vikatan.com/food/cooking/my-vikatan-travel-article-about-indian-women-trekking

Full video link 

https://youtu.be/cI1RBXCT8Xo?si=Jjkx760_QS2JZFER

No comments:

Post a Comment