திருநெல்வேலி அரிசி உப்புமா
தேவையான பொருட்கள்
உப்புமா மாவு செய்ய
(இரண்டு பருப்பும் சேர்த்து 1/2 கப் அல்லது துவரம் பருப்பு மட்டும் 1/2 கப் சேர்த்துக் கொள்ளலாம்).
1கப் மாவில் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
செய்முறை
1. ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த ரவையை காற்று புகாத டப்பாவில் 1 மாதம் வரை வைத்து கொள்ளலாம்.
2. பொடித்த ரவையில் 1 கப் ரவையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.
3. கனமான வாணலியில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து பின் மிளகாய் வற்றல், பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பச்சை மிளகாய் வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. பின் தேவையான அளவு உப்பு மற்றும் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ரவையை சேர்க்கவும்.
6. இப்போது கிளற வேண்டாம்.மாவு 5 நிமிடம் முதல் 7 நிமிடங்கள் வெந்ததும் நன்கு வேகமாக கிளறவும். சிறிது தேங்காய் எண்ணெயை ஓரங்களில் விட்டு கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும்.
குறிப்பு
அரிசி பருப்பை பொடிக்கும் போது இடைவேளை விட்டு விட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும்.
இரும்பு வாணலி அல்லது வெண்கல உருளியில் செய்யும் போது சுவையாக இருக்கும். இதற்கு பொன்னி பச்சரிசி அல்லது அம்பை பதினாறு பச்சரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் பொடித்த அரிசி உப்புமா மாவிற்கு 1.5 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.
GL
No comments:
Post a Comment