Saturday, January 27, 2024

கும்பகோண மகிமைகள்

 கும்பகோண மகிமைகள் !!!!!

வெங்கடா லாட்ஜ்

ஆரிய பவன்

முருகன் கபே

மணிகண்ட விலாஸ்

மங்களாம்பிகா காபி ஹோட்டல்

ஐயப்ப விலாஸ்

ஹேமரிஷி மண்டபம்

பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்க்களமாக இருக்கும்.

ஆரிய பவனின் ரவா தோசை முறுகலா , நெய்யுடன்  ரம்மியமாக இருக்கும்.

மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.

சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . 

கும்பகோணத்தில் இன்றும் பூரியை boori என்றுதான் அழைப்பர்.

கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களா ம்பிகா காபி ஹோட்டல் . 

இப்போது hifi ஆக மாறிவிட்டது. இதை சின்ன வயசில் இந்த ஊர் காரர்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து சொல்லி சந்தோஷப் படுவார்களாம் 

மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்.. அதன் காபி……டம்ளரை கீழே வைக்க மனமே வராது

நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். .

இங்கு கீழே பலகையில் அமர்ந்து தான் சாப்பிடவேண்டும். 

இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .

வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .

இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். 

So அனைவரும் ஆனந்த கண்ணீரோடு தான் பசியாறுவர்.

பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் 

அது ஒரு கோவிலா இல்லைஹோட்டலா  என்று எனக்கு இன்று வரை யாருக்கும் புரியாத புதிர். 

இட்லி தோசைக்கு அங்கு மிளகாய் பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .

அட அட அடா……சொர்க்கம்…சொர்க்கம் ! 

கும்பகோணே க்ருதம் பாபம் கும்ப கோணே  விநஸ்யதி

No comments:

Post a Comment