முற்பகல் செயின்..17
By N Krishnamurthy
ஒரு நாள் கண்ணன் சார்
சார் எனக்கு
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
இவன் தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல் "
என்ற குறளை பாடம் எடுத்தார். அந்த குறளின் முழு அர்த்தத்தையும் உள் வாங்கிய நான்,என் அப்பாதான் அது மாதிரி செய்யமுடியாத சூழலில் மாட்டிக்கொண்டு விட்டாரே,நான் ஏன் அவருக்கு பதில் உங்களுடையை வயது முதிர்ந்த காலத்தில்,உங்களின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்ளக்கூடாது என நினைத்தேன். இப்படி நான் நினைத்ததில் ஒரு சுய நலமும் உள்ளது. அப்பா உங்களை சரியாக கவனித்துக்கொள்ள வில்லையே என்ற நினைப்பில்,உங்களை அறியாமல், நீங்கள்அவர் மீது கோபம் கொண்டால், அது அவருக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க, நான் வந்து உங்களுக்கு பணிவிடை செய்வதாக எண்ணம் கொண்டேன். இதை கண்ணன் சாரிடம் நான் சொன்னபோது அவர் என்னை பாராட்டினார். பின்னர் அவர் " நீ இந்தியா செல்வதற்குண்டான உண்மையான காரணத்தை உன் பெற்றோரிடம் கூறாதே. அதை அறிந்தால் திரு மன வருத்தம் அடைய வாய்ப்புண்டு" "என்றார்.
என்னுடைய தமிழ் அறிவிற்கும், இன்று நான் உங்களிடம் வந்து சேர்வதற்கும் காரணம் அந்த கண்ணன் சார் தான். அன்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தான் அந்த மாயக்கண்ணன்.
ஒன்றுக்கும் உதவாத என் மனதை தெளிவித்து, எனக்கு இதோபதேசம் செய்த மகான் கண்ணன் சார்" என்ற போது ஆதித்யாவின் குரல் தழுதழுத்தது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் முடித்ததும், பல பெரிய அமெரிக்க மல்டி நேஷனல் கம்பனிகளில் வேலை வாய்ப்பு கிடைத்தன.நான் எல்லாவற்றையும் உதறித்தள்ளினேன்.
இன்போசிஸ் மற்றும் விப்ரோ கம்பனிகளுக்கு வேலைக்கு அப்ளை செய்தேன். விப்ரோவிலிருந்து பெங்களூரில் வேலைக்கு ஆர்டர் வந்தது.பெங்களூர் வேண்டாம் சென்னைதான் வேண்டும் என நான் கேட்டபோது, அதற்கு காரணம் கேட்டார் H.R. மேனேஜர். நான் உண்மையான காரணத்தை சொன்னபோது அவர் கண்களிள் வியப்பு தெரிந்தது. ",நீ வித்யாசமானவனாக இருக்கிறாய். நீ நாற்பது வருடம் முந்தி பிறந்திருக்க வேண்டும்"என்றும் கூறினார். உடனடியாக சென்னைக்கு போஸ்டிங் செய்து ஆர்டர் கொடுத்தார். அடுத்த இரண்டு நாட்கள் அவர் லீவில் போவதாக கூறினார்."காரணம் சொல்லவா " என்றார். பின்பு அவரே கலங்கிய கண்களுடன் "நீ, நாகர்கோவிலிலிருக்கும் என்னுடைய வயதான தாத்தா,பாட்டியை நினைவூட்டி விட்டாய்.
அவர்களை நான் பார்த்து பல வருடங்கள் கழிந்து விட்டன. இப்போது உன்னால்,
அவர்களை பார்க்க நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
நான் சென்னைக்கு சென்று வேலையில் சேரப்போவதாக சொன்னதும்,அப்பா கோவப்பட்டார்.
"உனக்கென்னப்பா பைத்தியமா. அவனவன் வேலைக்கு இந்தியாவிலிருந்து அமெரிக்கா வருகிறான். நீ இங்கே இருந்து வேலைக்கு இந்தியா போகிறாய்"என்றார். அப்போது தான் நான் அவரிடம் என்னையும் அறியாமல் ஒன்றை சொன்னேன். பின்னர்தான் அதை சொல்லியிருக்க வேண்டாமோ என வருத்தப்பட்டேன்" என்றான் ஆதித்யா.
No comments:
Post a Comment