வசந்த காலம் வருமோ?-66
By N Krishnamurthy
வெள்ளிக்கிழமை மாலை மைதிலியும், ம்ருதுளாவும் ஒரு பஸ்சை பிடித்து அடையார் பஸ் டிப்போவில் இறங்கி, பொடி நடையாக இந்திரா நகர் யூத் ஹாஸ்டலில் இருக்கும் ஹம்சத்வனி சபாவிற்கு சென்றார்கள். இவர்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்த மாதிரி, ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும் நின்று கொண்டிருந்தார்கள். ம்ருதுளாவைப் பார்த்ததும் சங்கர க்ருஷ்ணன் முகம் மலர்ந்தது. ராஜேஸ்வரி மைதிலியைப் பார்த்து "வாங்க மாமி" என்றாள். ம்ருதுளா, நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றாள் "இதல என்ன மாமி இருக்கு" என்றாள் ம்ருதுளா.
சரியான டயத்துக்கு கச்சேரி ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கச்சேரி செய்தான் சங்கர க்ருஷ்ணன்.
ஆந்தோளிகாவில் G.N.B யின் "நீ தய ராதா நீரஜாக்ஷி" யை பாட ஆரம்பித்ததுமே, மிக அரிதாக பாடப்படும் இந்த வர்ணத்தை M.L.V போன்ற மாபெரும் வித்வான்கள் பாடக்கேட்டிருந்த சிலர், அதை இவன் பாடுவதை கேட்டு சந்தோஷமடைந்தார்கள்.
இதனை ஆடுத்து சஹானாவில் "வந்தனமு ரகு நந்தன"வை பாடி பின்னர் கல்யாணியில் "கமலாம்பா பஜரே"வை பாடத்தொடங்கினான்.
ஒரு வேளை இன்றைய கச்சேரியின் கன ராகமாக இதுவாக இருக்குமோ என பலர் நினைக்க ஆரம்பிக்கும் போது அப்பாட்டிற்கு ஸ்வரம் போடாமல் பாடி முடித்தவன், தோடி ராக ஆலாபனையை ஆரம்பித்தான்.
சில இடங்களில் மதுரை சோமுவின் தோடியும், மற்ற இடங்களில் G.N.B யின் தோடியும் எட்டி பார்த்தன. தீக்ஷதரின்
" ஸ்ரீ கிருஷ்ணம் பஜ மானச"வை அக்கு வேறு ஆணிவேறியாக அலசி, படு திருப்தியாக பாடினான். தோடியில் அவன் போட்ட ஸ்வரங்கள் அவனது கடும் உழைப்பை வெளிப்படுத்தியது. இதை தொடர்ந்து தேனுகாவில் " தெலிய லேது ராமா பக்தி மார்கமு"என்ற தியாகய்யர்வாளின் கீர்த்தனையை உருக்கமாக பாடினான்.
கடைசியில்,யாருமே எதிர்பாரா வண்ணம் சுருட்டியில், தமிழ் மூவரில் ஒருவரான முத்தையா பிள்ளையின் "ஏதுக்கித்தனை மோடிதான் உனக்கு எந்தன் மீதய்யா" பாடி கச்சேரியை நிறைவு செய்தான். அவனுடைய பாடாந்தரத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
.அவன் மனோதர்மம் மிகவும் நல்லபடியாக இருந்தது.
கச்சேரிக்கு வயலின் வாசித்தவரும், மிருதங்கம் வாசித்தவரும், மிகவும் அனுசரணையாக வாசித்தார்கள்.
கச்சேரி முடிந்ததும் மேடையை விட்டு கீழே இறங்கி வந்தவன், ம்ருதுளாவிடம்,மிக ஆர்வமுடன் , How Was my singing today "எனக்கேட்டான். "சுபர்ப்" என்றாள் ம்ருதுளா. "ரியலி" என்றான் அவன். "எஸ்" என்றாள் அவள். "தோடி பிரமாதம். தோடியை பாடறதுக்கு நெறய பாடுபட்டிருக்கேள்.
சுருட்டி ராகம் ரொம்ப நண்ணா இருந்தது. சுருட்டில பாடின தமிழ் பாட்டு டாப் க்ளாஸ் " என்றாள்.
"ஆமாம் "வனஜாக்ஷி" வர்ணம் பாட போறேன்னு எங்கிட்ட சொல்லீட்டு, ஆந்தோளிகாவ்ல G.N.B சாரோட வர்ணத்தை பாடீட்டேளே" என்றாள் ம்ருதுளா. அதற்கு அவன் "ரெண்டு நாள் முன்னாடி G.N.B சாரோட டேப்ல இத கேட்டேன்.நேக்கு ரொம்ப பிடிச்சூட்த்து.I simply loved it. இதை வெறித்தனமா ரெண்டு நாளா சாதகம் பண்ணேன்" என்றான்.
" உங்க உழைப்பு வீண் போகல.நானே இத உங்கா கிட்ட கத்துண்டு என்னோட அடுத்த கச்சேரில பாடணம்னு ஆச படறேன்" என்றாள் ம்ருதுளா.
பின்பு ராஜேஸ்வரி ம்ருதளாவிடம்" ஏம்மா, இவன் பாட்ல ஏதாவது improvement இருக்கா" என்று கேட்டாள். அதற்கு அவள் "என்ன மாமி என்ன கேக்கறேள். நானும் உங்க பையன் மாதிரி தான் இப்பதான் பாட ஆரம்பிச்சிருக்கேன்" என்று சொன்னாள். அதற்கு ராஜேஸ்வரி " உம்பாட்டு வேற லெவல்னு எல்லாருக்கும் தெரியும்மா. உண்மைய சொல்லு, எப்படி இருந்தது" என்றாள்.
" ரொம்ப நண்ணா இருந்தது மாமி. தோடியும், சுருட்டியும் என் காதுல இன்னும் ரீங்காரமிட்டுண்டு இருக்கு. நிச்சயம் நல்ல ரிவ்யூ கிடைக்கும்" என்றாள் ம்ருதுளா.
சபா செக்ரட்ரி சங்கர க்ருஷ்ணனிடம் ஒரு கவரை கொடுக்க, அதை பிரித்துக்கூட பார்க்காமல் அவரிடமே திருப்பிக்கொடுத்து "Please keep this for sabha imorovement" என்றான்.
சபா செக்ரட்ரி பின்னர் ம்ருதுளாவை பார்த்து "நீ ம்ருதுளா இல்லையோ" என்றார்." ஆமாம் மாமா"என்றாள் அவள்.
"சாரிம்மா.இந்த தபா உன் கச்சேரியை வெச்சுக்க எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. கிட்டத்தட்டே ஆறு மாசம் முன்னாடியே ப்ரோக்ராம் எல்லாம் பிக்ஸ் பண்ணீட்டோம். அடுத்த வருஷம் நீ எங்க சபாவ்ல பாடணம் "என்று கேட்டுக்கொண்டார்.
"அதானாலென்ன. அடுத்த வருஷம் பாடறேன்" என்றாள் ம்ருதுளா. ராஜேஸ்வரி மனதுக்குள் அடுத்த வருஷம் அவள் ம்ருதுளா சாரங்கனாக பாடுவாளா அல்லது ம்ருதுளா சங்கர க்ருஷ்ணனாக பாடுவாளா என்று யோசித்தாள்.
பின்பு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு மைதிலியும், ம்ருதுளாவும்,ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள். இதுவே கிட்டத்தட்ட அந்த வருஷத்தின் கடைசி கச்சேரி ஆக இருந்தது.
ஞாயிறன்று இரண்டு மணி போல ம்ருதுளாவும், மைதிலியிம் சுப்புலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்றார்கள். "வாங்க வாங்க உங்களை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்றாள் சுப்புலக்ஷ்மி. சமையல் ரூமில் அப்பொழுதுதான் டிபன் செய்ய ஆயத்தமாக இருந்தாள் அவள்.
No comments:
Post a Comment