வசந்தகாலம் வருமோ?-91
By N Krishnamurthy
இதைக் கேட்ட வசுமதி"அம்மா.இப்போ நீ சொன்னயே அதுதான் சரி. ஜாதகம் பொருந்தணம்ன்ற விஷயத்தை நிச்சயம் நான் ஏத்துக்கறேன்.
இத பத்தி நான் கடைசியா சொல்றேன். மத்தபடி இந்த ஸ்மார்த்தா, வைஷ்ணவான்ற பேதம்லாம் இப்போ கெடையாது. அதெல்லாம் உங்க காலம். அது மலையேறி போச்சு. இனிமேலயும் இதுபோல பேசி பூச்சி காட்ட முடியாது" என்றாள்.
உடனே கோமளா "அதுக்கு இல்லடி வசு. அம்மா சொல்றதிலேயே ஒரு பாயிண்ட் இருக்கு இல்லயா" என்ற சொல்ல, வசுமதி அவளைப்பார்த்து "என்னிக்கு பாட்டி நீ உன்னுடைய சொந்த கருத்தை சொல்ல போறே. பொண்ண நீ சப்போர்ட் பண்ணி தான் ஆகணும்னு அவசியம் இல்லை" என்று கூறினாள். அதன் பின்பு வசுமதி " அவாள்து நல்ல குடும்பமா இருக்கு. பையனும் நண்ணா படிச்சிருக்கான். சங்கீதத்லயும் அவனுக்கு நல்ல பாண்டித்யம் இருக்கு. பணம் கொட்டி கெடக்றது. வேற பிக்கல், பிடுங்கல் இல்ல . அந்த மாமிக்கு ம்ருதுவ ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக்கு.
அந்த பையனும் ம்ருதுவை விரும்பறான்னு நெனக்கறேன். இதைவிட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்" என்று சொன்னாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்தி " நான் என் அவிப்ராயத்தை சொல்லலாமா" என்றார். " தாராளமா சொல்லலாம் தாத்தா" என்றாள் வசுமதி.
" நேக்கு இந்த வைஷ்ணவா, ஸ்மார்த்தான்ற வித்யாசாத்ல நம்பிக்கை இல்லை. அந்த காலத்துல ராமானுஜர் வர்ணத்ல பேதம் பாக்க வேணாம்னார். நம்ப அவர் சொன்னதுல, நமக்கு வேண்டியதை மட்டும் பாலோ பண்றோம். ஒரு முக்கியமான பாய்ண்ட் நீங்க எல்லாம் மறந்தூட்டேள்.
கல்யாணம் பண்ணிண்டு வாழ்நாள் பூரா குடும்பம் நடத்த போறவோ நமப ம்ருது.
அவளுக்கு அந்தப் பையனை பண்ணிக்கிறதுக்கு சம்மதம் இருக்கா அப்படின்னு யாரும் அவ கிட்ட கேக்கல. என்ன பொருத்தவரைக்கும் ம்ருதுவுக்கு அந்த பையன் மேல ஒரு அபிப்பிராயம் இருந்தா, அதுக்கப்புறம் வேற எதைப் பத்தியும், ஜாதகத்தையும் சேர்த்து, பாக்க வேண்டாம் என்று நான் நெனைக்கிறேன்" என்றார் .இதை கேட்ட வசுமதி "வெல் செட் தாத்தா "என்றாள்.
வசுமதி பின்னர் ம்ருதுளாவை தனியாக அழைத்துக் கொண்டு போய் ஐந்து நிமிடம் பேசிவிட்டு திரும்பி வந்தாள். பின்பு வசுமதி அங்கு கூடியிருந்தவர்களிடம் "தாத்தா சொன்ன முக்கியமான பாயிண்ட்டை ம்ருது கிட்ட பேசினேன். அவ இந்த பையன பண்ணின்டா , தனக்கு சங்கீதத்தை வளர்த்துக்கறதுக்கு ரொம்ப ஒத்தாசையயா இருக்கும்ன்னு ஃபீல் பண்றா"என்று கூறினாள்.
அப்பொழுது பத்மநாபன் தாயார் ருக்மணி" இது உங்காத்து விஷயமா போயிடுத்து. நான் என் அபிப்பிராயத்தை சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா சொன்னா அது தப்பாயிடுமோன்னு பயமா இருக்கு" என்றாள். ரங்கநாயகி தன் மாமியாரை பார்த்து " தாராளமா நீங்க சொல்லுங்கம்மா. நீங்களும் நம்ப ஆத்துல ஓருத்தர்தானே" என்றாள்.
" நான் வசு கல்யாணத்தின் போது இந்த மாமியையும், அந்த பையனையும் பாத்தேன். ரெண்டு பேரும் ரொம்ப நல்லவளா தெரியறா. அத்தோடு இல்லாம ம்ருதுவுக்கும், அந்த பையனுக்கும், ஜோடி பொருத்தம் ரொம்ப நண்ணா இருக்கு. ஜாதகம் மட்டும் பொருந்தித்தானா இவா கல்யாணத்த வெச்சுக்கலாம்னு என்னுடைய அபிப்பிராயம்" என்றவள் "நம்ப எல்லாம் பேசிக்கொண்டே போறோம். பொண்ண பெத்தவா இத பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா" என்றாள். சாரங்கன் " நான் ஸ்மார்த்தா, வைஷ்ணவா பேதம் பாக்றதில்ல. அந்தப் பையனும் நல்லவனா தான் இருக்கான். என் பொண்ண கண் கலங்காம பாத்துப்பான்னு நான் நம்புறேன். எனக்கு இந்த சம்பந்தத்துல பரிபூரண சம்மதம்" என்றார். எல்லோரும் மைதிலியை உற்று நோக்கினார்கள். அப்போது மைதிலி ,யாரும் எதிர் பாராத வண்ணம், அவர்களிடம் " நேக்கு இந்த சம்பந்தத்ல அவ்வளவா இஷ்டம் இல்ல "என்று கூறினாள். இதை கேட்டதும் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். ரங்கநாயகிக்கு உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கி வழிந்தது . வசுமதி"வெண்ணை தெரண்டு வரும்போது தாழி உடைந்த கதையா போச்சே" என்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். ம்ருதுளா லேசாக விசும்ப ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment