முற்பகல் செயின்..22
By N Krishnamurthy
அந்த வெள்ளி ஆதித்யா உற்சாகமாக ஆபிசிலிருந்து வந்தான். இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது நமச்சிவாயத்திடம் "தாத்தா. இப்போ நான் ரேண்டு விஷயம் சொல்லப்போறேன். முதலாவது, அப்புவின் எதிர்கால படிப்புக்காக நான் மாசம் ஒரு பேங்க்ல, ரெண்டாயிரம் ரூபா ரெக்கரிங் டெபாசிட் போட போறேன்.ஐந்சு வருஷத்ல இதனால ஒரு கணிசமான தொகை அவனுக்கு கெடைக்கும். அவனுடைய காலேஜ் படிப்புக்கு இது உதவியா இருக்கும்.என்ன சொல்றீங்க" என்றான்.
கோமதி அவனிடம்"ஏழ,பாழைங்க படிப்புக்கு உதவற மாதிரி உத்தமமான காரியம் வேற இல்லை "என்றாள்.நமச்சிவாயம் "உன்னை நெனச்சா எனக்கு ரொம்பா பெருமையா இருக்கப்பா"என்றார்.
"சரி.சரி.காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சூன்னு நிருபிக்கவேண்டாம். அடுத்த விஷயத்துக்கு வறேன். எங்க ஆபிசுல "தரகு" ன்னு ஆரம்பிச்சிருக்காங்க"என்றான் ஆதித்யா.
நமச்சிவாயம் "அதென்னப்பா தரகு"என்றார். "தாத்தா அது *தமிழை ரசிப்போர் குழு* என்பதின் சுருக்கம்.
நாளைக்கு அதன்முதல் கூட்டம் எங்க ஆபிஸ்ல வெச்சு நடக்க போவுது. நீங்களெல்லாம் வரலாம். மதியம் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கு" என்றான்.
மறுநாள் ஒரு டக்சியில் ஆதித்யா தன் தாத்தா,பாட்டியை ஆபிசுக்கு அழைத்து சென்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
இன்னும் சிலர் தங்கள் பெற்றோர்களை அழைத்து வந்திருந்தார்கள்.
கூட்டத்தை அவர்களது டீம் லீடர் தமோதரன் ஆரம்பித்து வைத்து
" ஐ.டீ.இண்டஸ்ட்ரி ஆபிஸ்களில் பொதுவாக எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறோம். தமிழில் பேசினால் தரக்குறைவு என்று கூட சிலர் நினைக்கிறார்கள். இந்த குழுவின்மூலம் சிறிது சிறிதாக அந்த நிலையை மாற்ற முடியும் என நம்புகிறேன். இப்போது தேன்மொழி பேசப்போகிறார்."என்றார்.
தேன்மொழி என்ற அந்தப்பெண் இருக்கையை விட்டு எழுந்தாள்.
அந்தப் பெண் ஆதித்யாவின் தோள்பட்டை அளவு உயரத்தில் இருந்தாள். மாநிறத்தை விட சிறிது கூடுதல் நிறம். தலை முழுவதும் கரிய. பெருங்கூந்தல். கூரிய நாசி. அறிவை பறை சாற்றும் கண்கள்.நல்ல முகவெட்டு.கரு நீல கலர் புடவையும், மேட்சிங் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.
மொத்தத்தில் ரவிவர்மா வடித்த கலைவாணி சித்திரத்தை போல இருந்தாள்.
மைக்கை பிடித்த அவள் "நான் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து ஒரு பாட்டை படித்து விளக்குவேன் "என்று கூறி
என்ற பாடலை சொல்லி அதற்கு எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் விளக்கம் அளித்தாள். கூட்டம் கை தட்டியது.பின்னர் அவளை பாராட்டி பேசிய தாமோதரன் "ஒரு பெண் இப்படி இனிய தமிழ் பாடலை சொல்லி விளக்கம் அளித்தது மிகவும் மன நிறைவை அளிக்கிறது.தேன்மொழி தமிழ் மீது ஆறாக்காதல் கொண்டவள்.மகா பாரதி பிறந்த திருநெல்வேலி சீமையில் பிறந்தவள். சரி,இனி,ஆண்களும் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் யாரேனும் ஒரு ஆண் பேச முற்பட்டால் நன்றாக இருக்குமே"என்றார்.
ஹாலில் நிசப்தம் நிலவியது. யாரும் பேச முன் வரவில்லை.
அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் ஆதித்யா கையை உயர்த்தினான். அவன் அமெரிக்காவிலிருந்து வந்தவன், ஏதோ சரளமாக தமிழ்பேசுகிறான் என்று மட்டும் அறிந்திருந்த அங்கிருந்த பலர் அவன் என்ன பேசிவிடப் போகிறான் என்று எண்ணினார்கள். ஆதித்யா மைக்கைப்பிடித்தான்.
No comments:
Post a Comment