முற்பகல் செயின்..6
By N Krishnamurthy
காசிநாதன் கல்யாணத்திற்கு நாள் குறித்து அதை நமச்சிவாயத்திடம் சொன்னார்.
தேனாம்பேட்டையிலுள்ள ஆபட்ஸ்பரி ஹாலை பிக்ஸ் செய்தார் காசிநாதன்.முதலில் நிர்வாகம் சில காரணங்களுக்காக ஹாலைத்தர மறுத்தபோது, ஒரு மந்திரியிடமிருந்து வந்த போன் காலால் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிதாயிற்று.
சென்னையிலுள்ள பிரபல இன்னிசை குழு நிகழ்ச்சியை கல்யாணத்திற்கு முதல் நாள் மாலைக்கு ஏற்பாடு செய்தார்.
இரு வீட்டாரும் பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு நேரிலும்,தபாலிலும் வினியோகம் செய்தனர்.
கல்யாணத்திற்கு இரண்டு வாராம் முன்னதாகவே திரு வந்துவிட்டான் . வந்த அன்று மட்டும்தான் அவன் வீட்டிலிருக்க முடிந்தது.
அவனது வசதிக்காக ஒரு வாடகை காரை திருமண நாள் வரை ஏற்பாடி பண்ணியிருந்தார் காசிநாதன். ஆங்கில பத்திரிக்கை அடிப்பது, துணிமணி வாங்குவது போன்றவைகளுக்கு அது அவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு நாள் மாலை அவனை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து, அவனை தன் நண்பிகளுக்கு அறிமுகப்படுத்தினாள்நித்யா.
ஆங்கில பத்திரிக்கையை தேர்ந்தெடுக்க அவனுடன் நித்யாவும் கோடம்பாக்கத்திலிருந்த மேனகா கார்டுக்கு சென்று வந்தாள்.
கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரை திரு வீட்டிலேயே தங்கவில்லை.இது விஷயமாக கோமதி மனதுக்குள் சங்கடப்பட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லை. நமச்சிவாயம் புத்திசாலி. காசிநாதனின் பணப்பகட்டில், திரு,விளக்கில் விழும் விட்டில் பூச்சியை போல விழுந்து கொண்டிருக்கின்றான் என நன்றாக புரிந்து கொண்டார்.சில சமயம்,நாயாக, உள்ளங்கால் தேய உழைத்து,மகனை இந்தநிலைமைக்கு ஆளாகி இருக்க வேண்டாமோ என்று கூட நினைக்க ஆரம்பித்தார்.விதி வலிது என்றும் எல்லாம் இறைவனின் திட்டப்படிதான் நடக்கிறது என அவர் திடமாக நம்பினார். இது விஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை நிலையை குறித்து மனம் வெதும்பினார், ஆனால் அது வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொண்டார்.
தன் மகன் மேல் அதீத பாசத்தை வைத்திருக்கும் கோமதிக்கு இது போன்ற உண்மைகள் தெரிந்தாள் அவள் மனதுடைந்து போவாள் என்பதை அவர் அறிவார்(தொடரும்)
No comments:
Post a Comment