Sunday, January 7, 2024

வசந்த காலம் வருமோ?-65

 வசந்த காலம் வருமோ?-65

By N Krishnamurthy 

வியாழன் அன்று காலை பத்து மணி சுமாருக்கு மைதிலிக்கு சுப்புலஷ்மி  போன் செய்தாள்.

" உங்க நாத்தனார் பொண்ணு கல்யாணம்லாம் நல்லபடியா முடிஞ்சிதா" என்று கேட்டாள். பின்னர் அவள் "என்ன இவ்வளவு லேட்டா கல்யாணம் விஜாரிக்கிறேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. எனக்கு ரெண்டு,மூணு நாளா ஜுரமா இருந்தது. அதனால தான் பேச முடியல" என்றாள். மைதிலி அவளிடம்" அதனால் என்ன மாமி.  கல்யாணம் பிரமாதமா   நடந்தது. கல்யாணத்தன்னிக்கு சாயங்காலம் ம்ருதுளா கச்சேரி பண்ணா. கல்யாணதுக்கு மூணு நாள் முன்னாடிதான்  அவ கச்சேரி பண்ணனம்னு தீர்மானம் ஆச்சு. வயலின் வாசிச்சது யார் தெரியுமா?ராஜேஸ்வரி மாமி பையன் தான்"என்றாள்." ஓ.அப்டியா" என்ற சுப்பலக்ஷ்மி "உங்க கிட்ட ஒரு நல்ல சமாஜாரத்தை சொல்லலாம்னு பாக்கறேன்" என்றதும்  மைதிலி உற்சாகத்துடன் " சொல்லுங்க மாமி" என்றாள். சுப்பு லக்ஷ்மி 

" வர ஞாயித்து கிழம சாயங்காலம் ராதிகாவை பெண் பார்க்க வரா" என்றாள். 

" அப்படியே மாமி. இது ரொம்ப நல்ல சமாச்சாரம் ஆச்சே.கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு" என்றாள்  மைதிலி.

 " ராதிகா அனாதை ஆசிரமத்திற்கு போறாளோன்னோ, அங்கு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல கண்ணன் என்ற பையன் ஒர்க் பண்றானாம். எம்.காம் படிச்சிருக்கானாம். அவனுக்கு பொண் பாத்திண்டிருக்காளாம்.ஆச்ரம செக்ரட்ரி நேக்கு போன் பண்ணி " அவன் ரொம்ப தங்கமான பையன். அப்பா இல்ல. அம்மாதான். வேற பிக்கல் பிடுங்கல் இல்ல. சேலையூர்ல  சொந்த ப்ளாட் இருக்கு. 

அவா ஸ்ரீவத்ச கோத்ரம். வடமா.சகோத்ரம் இல்லைனா நீங்க ஏன் இவன ராதிகாவுக்கு பாக்க கூடாது" அப்டீன்னு கேட்டு பையன் ஜாதகத்தை அனுப்பிச்சார். ரெண்டு ஜாதகத்தையும் தெரிஞ்ச ஜோஸ்யர் கிட்ட காமிச்சேன். அவர் பத்துக்கு எட்டு பொருந்தர்து. தாராளமா மேக்கொண்டு ஆக வேண்டியத பாக்கலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்துட்டார்.

நான் அந்த பையன் ஆபிஸ் போயிருக்கற நேரமா பாத்து அவன் அம்மாவை, அவாத்துல போய் பாத்தேன். அந்த மாமி கிட்ட என் முழு சரித்தரத்தையும் ஒண்ணு விடாம,ஒளிக்காம சொன்னேன். எல்லாத்தையும் கேட்ட அந்த மாமி " நேக்கு இத பத்தியெல்லாம் கவலை இல்ல. கண்ணனுக்கு பொண்ண பிடிச்சா போறும். சீர் செனத்தி எல்லாம் வேண்டியதே இல்ல. அந்த பகவான் தினமும்  மூணு வேளையும் குறையில்லாம சாப்டறதுக்கு வேண்டியதை கொடுத்திருக்கான்" என்று சொல்லீட்டு 

" நீங்க ஜாதகம் பாத்தா அதுவே போறும். நான் மறுபடியும் பாக்க வேணாம்.வர ஞாயித்துக்கிழம ராதிகாவை பார்மலா பாக்க க்ருஷ்ணனை அனுப்பிச்சு வைக்கறேன் " என்றாள்.

" நீங்களும் வாங்கோ"ன்னு நான் அவாள கூப்பிட்டேன். " நல்ல காரியத்துக்கு நான் எதுக்கு அச்சான்யமா"ன்னு சொன்னா. நான் மாமியை ரொம்ப வற்புறுத்தி ராதிகாவ பாக்க மாமியையும் வரச்சொல்லியிருக்கேன். என் சரித்திரத்தை கேட்டு,அந்த மாமி  கொஞ்சம் தயங்குவான்னு நெனைச்சேன் .ஆனா அந்த மாமி ஒண்ணும் அப்ஜெக்ஷனே பண்ணல. பகவானா பாத்து இதுபோல ஒரு நல்லவாள காமிச்சிருக்கான்.இந்த விஷயத்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டது ராதிகாவால் தான். கல்யாணத்துக்கு ஒத்தக்க மாட்டேன்னு சொல்லீட்டா . ரெண்டு நாள்  எங்கிட்ட பேச கூட இல்லை. அப்புறம் நான் ஆசிரமத்து  செக்ரட்ரி கிட்ட சொல்ல, அவர் அவ கிட்ட எடுத்து சொல்லி அவள சம்மதிக்க வெச்சார்" என்றாள்.

பின்னர் " என்  அத்தையும், அத்திம்பேரும் அன்னிக்கு வரா. நீங்களும், ம்ருதுளாவும்  அவசியமும் வந்து கலந்துகணம் " என்றாள்." அப்படியா மாமி. நிச்சயம் வந்துடறோம்" என்ற மைதிலி " எத்தனை மணிக்கு வரணம்"  என்று கேட்டாள்.

" அவா  நாலு மணியை போல  வறேன்னு சொல்லியிருக்கா.  நீங்க மத்தியானம் ரெண்டு மணிக்கே வந்தேங்களானா ஒத்தாசையா இருக்கும்" என்றாள் சுப்புலக்ஷ்மி. "சரி மாமி. நான் ம்ருதுளாவையும் கூப்டுண்டு ஞாயித்து கெழம ரெண்டு மணிக்கு டாண்ன்னு வந்துடறேன்" என்றாள் மைதிலி. 

கல்லூரியில் இருந்து ம்ருதுளா வந்தவுடன் மைதிலி அவளிடம் விஷயத்தை கூறினாள். உடனே ம்ருதுளா போனை எடுத்து ராதிகாவை தொடர்பு கொண்டாள் .

" அக்கா, விஷயத்த கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா. பேர் பொருத்தம் சூப்பர் "என்றாள்." தேங்க்ஸ் ம்ருது.இது போல நான் நோக்கு எப்ப சொல்ல போறேன்னு தெரியல"என்றாள். இதைக்கேட்டு கன்னம் சிவந்த அவள் "போங்கக்கா.நான் இன்னும் டிகிரியே முடிக்கல." என்று கூறி பேச்சை முடித்தாள்.

இந்த சமயத்தில் ம்ருதுளாவிற்கு சங்கர க்ருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தான்.அவன் முகத்தை ஞாபகப்படுத்தி பார்க்க முயன்றபோது திடுமென ரகு நந்தனுடைய முகம் தெரிய ஆரம்பித்ததும் மிகவும் மனக்லேசத்துக்கு உள்ளான ம்ருதுளா "ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி" என்ற பாரதியின் சாகா வரிகளை பாட ஆரம்பித்தாள்.

"கண்ணன் முகமறந்து போனால் -இந்தக் கண்களிருந்து பய னுண்டோ " என்ற வரிகளை அவள் வாய் பாடும்போது அவளது கண்கள் உணர்ச்சிப்பெருக்கால் நீரை பெருக்கின.பாடல் முடிந்ததும் மானசீகமாக" பெருமாளே.எங்களை பிரிச்சூடாதே" என வேண்டினாள்.

No comments:

Post a Comment