Thursday, January 11, 2024

வசந்த காலம் வருமோ?-70

 வசந்த காலம் வருமோ?-70

By N Krishnamurthy 

இரண்டு நாள் கழித்து சுப்புலக்ஷ்மி ராஜேஸ்வரிக்கு போன் செய்தாள்.

"மாமி. உங்காத்து மாமா கிட்ட பேசீட்டேளா.நீங்க கல்யாணம் வர இருக்க முடியுமா"எனக்கேட்டாள்.இதற்கு ராஜேஸ்வரி "நேத்து ராத்திரி பதினோரு மணிக்குதான் பேசினேன்.

அவர் ஓ.கே சொல்லீட்டார்"என்றாள்.

" ரொம்ப சந்தோஷம்.நீங்க அப்படீன்னா இன்னும் கொறஞ்சது ரெண்டு மாசம் இந்தியாவில இருக்கணம்.

ஹோட்டல் சாப்பாடு ஒத்துவருமான்னு தெரியல"என்றாள் சுப்புலக்ஷ்மி.

ராஜேஸ்வரி " ஆமாம் மாமி.கஷ்டமாத்தான் இருக்கு.வேற என்ன பண்றது"என்றாள். சுப்புலக்ஷ்மி அவளிடம் "எங்க தெருவுல நேக்கு தெரிஞ்சவா அவா சொந்த  Flat ஐ  காலி பண்ணீட்டு, பொண்ணு பிரசவத்துக்கு சிங்கப்பூர் போயிருக்கா. வர ஆறு மாசம் ஆயிடும். அது வர யாராவது நல்லவாளா இருந்தா , அந்த ப்ளாட்டை எடுத்துண்டு, மெயிண்ட்டன் பண்ணா நண்ணாயிருக்கும்னு அவிப்ராயப்படறா. அது த்ரீ பெட்ரூம் Flat. ஒரு ரூம்ல முக்யமானதை போட்டு பூட்டி வெச்சிருக்கா. மத்தபடி கேஸ் ஸ்டவ், ப்ரிட்ஜ், க்ரைண்டர் எல்லாம் உபயோக படுத்திக்கலாம். மூணு மாச வாடகையை அட்வான்ஸ்ஸா கொடுத்தா போறும். என்ன சொல்றேள்" என்றாள்."கேக்க இந்த ஐடியா நண்ணாதான் இருக்கு. ஆனா சங்கர க்ருஷ்ணன் அங்கேந்து ராமாகிருஷ்ணன் மாமாவாத்துக்கு அடையார் போணமே" என்றாள் ராஜேஸ்வரி.

."அது சுலபம்.ரெண்டே நிமிஷம் நடந்து ஸ்டேஷன் போய் எலக்ட்ரிக் ட்ரெயின் பிடிச்சா, பத்து நிமிஷத்ல கிண்டியோ,சைதாபேட்டையே போயிடலாம். அங்கேர்ந்து பஸ் பிடிச்சா அடையார் இருபது நிமிஷம் தான் " என்றாள் சுப்புலக்ஷ்மி.

" அப்போ சரி. நாங்க சாயங்கலமா வந்து எடத்தை பாக்கலாமா" என்றாள் ராஜேஸ்வரி." தாராளமா" என்றாள் சுப்புலக்ஷ்மி.

அன்று மாலை நான்கு  மணிக்கு ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும் சுப்புலக்ஷ்மி வீட்டிற்கு வந்தார்கள். சுப்புலக்ஷ்மி அவர்களை அழைத்துக் கொண்டு போய் அந்த Flat ஐ காட்டினாள். ராஜேஸ்வரிக்கு அந்த Flat மிகவும் பிடித்து போய்விட்டது. அதை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தார்கள். பின்பு அவர்கள் சுப்புலக்ஷ்மியின் வீட்டிற்கு  திரும்பினார்கள்.

" சரி மாமி. நீங்க அவா கிட்ட சரீன்னு சொல்லிடுங்கோ. எவ்ளோ அமௌன்ட் நான் பே பண்ணனும் சொன்னீங்கன்னா பரவாயில்லை" என்றாள். "அவா இப்போ எனி டைம் போன் பண்ணுவா" என்றாள்  சுபலக்ஷ்மி. பின்பு அவள்  சங்கர க்ருஷ்ணனுக்கும், ராஜேஸ்வரிக்கும் காபி போட்டு கொடுத்தாள். அரை மணிக்கு பின்  போன் மணி  அடித்தது. போனை எடுத்த சுப்புலக்ஷ்மி "சொல்லுங்க" என்றவள் " அந்த மாமி வந்து பாத்துட்டா .அவாளுக்கு எடம் பிடிச்சு  போயிட்த்து. இப்ப கூட அந்த மாமி இங்க தான் இருக்கா. எவ்வளவு பே பண்ணனும்னு  கேட்கறா" என்றாள்.

சிங்கப்பூரிலிருந்து பேசிய அவர் " மூணு மாசத்துக்கு வாடகையா 45 ஆயிரம் வரது. இதைத் தவிர E.B க்கு வேற கட்ட வேண்டி இருக்கும். 50,000 டெபாசிட் பண்ண சொல்லிடுங்கோ. நான் உங்களுக்கு அக்கவுண்ட் நம்பர் அனுப்பிடறேன். மூணு மாசம் முடிவுல எவ்வளவு ஆறதூன்னு  பாத்துண்டு மீதியை அவாளுக்கு கொடுத்துடலாம்" என்றவர் பின்பு " அந்த மாமி கிட்ட கிரிஜா கொஞ்சம் பேசணம்றா" என்றார். "சிங்கப்பூர் மாமி பேசணம்றா" என்றாள் சுப்புலக்ஷ்மி  ராஜேஸ்வரியை பார்த்து. சுப்புலக்ஷ்மியிடமிருந்து போனை வாங்கிக் கொண்ட ராஜேஸ்வரி "சொல்லுங்க. என் பேர். ராஜேஸ்வரி" என்றாள். கிரிஜா  அவளிடம் " ராஜேஸ்வரி மாமி. உங்களுக்கு இடம் பிடிச்சிருக்குன்னு சொன்னா சுப்புலக்ஷ்மி மாமி. ரொம்ப சந்தோஷம். பூஜை அறையில வெள்ளிக் குத்து விளக்கு இருக்கு. தினந்தோறும் சாயங்காலம் அம்மனுக்கு முன்னாடி விளக்கேத்தி வச்சிடுங்கோ. வெள்ளி, செவ்வாய்ல முடிஞ்சா நெய் விட்டு ஏத்துங்கோ. பால்கனியில துளசி செடி வச்சிருக்கேன். மறக்காம தண்ணி விட்டுடுங்கோ. வீடு பெருக்க, தொடைக்க, வாசல்ல பெருக்கி கோலம் போட ஏற்பாடு பண்ணி கோங்கோ"" என்றாள். இதைக் கேட்டு ராஜேஸ்வரி"  நீங்க இத சொல்லவே வேண்டாம்.நானே பண்ணீடுவேன்" என்றாள்.

இதன் பின் ராஜேஸ்வரி சுப்புலக்ஷ்மியிடம் "ஹோட்டலுக்கு போய் சாமானை  எல்லாம் பேக் பண்ணணம். இன்னும் ரெண்டு நாள்ல இங்க வந்துட பாக்கறேன். அதுக்கு முன்னாடி ஒரு நல்ல நாளா பாத்து பால் காய்ச்சி சாப்டணும்" என்றாள். இதற்குள் சுப்புலக்ஷ்மி  பாம்பு பஞ்சாங்கத்தை பார்த்து " நாளைக்கு காலைல ஏழு மணிக்கு கூட நல்ல டைமா இருக்கு . நீங்க அப்ப கூட பால் காய்ச்சி சாப்பிடலாமே" என்றாள். "நல்லதா போச்சு" என்றாள் ராஜேஸ்வரி. சுப்புலக்ஷ்மி அவளிடம் " நான் நான் அரை லிட்டர் பால் வாங்கி வெச்சுட றேன். காலைல 6:30 மணிக்கு நீங்க வந்துடுங்க" என்றாள். அதற்கு ராஜேஸ்வரி "நானும்,என் பையனும் வரோம். இத தவிர மைதிலி மாமியையும், ம்ருதாளாவையும் கூப்பிடலாம்னு இருக்கேன்" என்றாள். சுப்புலக்ஷ்மி" பேஷா செய்யுங்கோ" என்றாள். அன்பின் ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும்   ஹோட்டலுக்கு சென்றார்கள்.

No comments:

Post a Comment