வசந்தகாலம் வருமோ?-72
By N Krishnamurthy
இதன் பின்னர் சுப்புலட்சுமி அவள் அத்தை வீட்டுக்கு சென்று துணிமணிகள் என்னவெல்லாம் வாங்க வேண்டும், திருமாங்கல்யம் டிசைன் விவரம், வேறு என்னென்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
இதற்குள் அவளது அத்திம்பேர் " நேக்கு தெரிஞ்ச இங்க ராமசுப்புன்னு ஒரு மாமா கல்யாணத்துக்கெல்லாம் சமைக்கிறார். அவரை வரச் சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்ச நாழில அவர் வந்துடுவார்.அவர் கிட்ட பேசிட்டு கல்யாண சமையல அவர்கிட்ட ஒப்படைச்சூடலாம்" என்றார்.
சுப்புலக்ஷ்மி " இது என்ன அத்திம்பேர். காண்ட்ராக்ட் மாதிரியா" என்று கேட்டாள். சுப்புலட்சுமி" ஓரளவு காண்ராடாக்ட் மாதிரி தான்.ஆனா காண்ராக்ட் இல்ல" என புதிர் போட்டார் அவர். "அவர் கறிகா, மளிகை சாமான் இதுக்கெல்லாம் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவார். தனித்தனியா சமையல்காரர் ஆளுக்கு எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லிடுவார். ஆனா பந்தி விசாரணை எல்லாம் நம்ம தான் பாத்துக்கணும். அவரே மளிகை சாமானும், கறிகாய்க்கும் ஏற்பாடு பண்ணீடுவார். ஜான்வாசத்து, முஹுர்தத்தன்னிக்கு காலைல ப்ரேக்பாஸ்ட், மத்யானம் சாப்பாடு,ராத்திரி சாப்பட்டுக்கு எவ்வளவு பேர் வருவான்னு சொல்லிடணம். அவரோட ஆட்கள் எல்லாம் கட்டு சாத முடியுற வரைக்கும் அங்கேயே தான் இருப்பா" என்றார்.
இதனை அடுத்து அரை மணி நேரத்தில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர், நெற்றியில் விபுதி பட்டை துலங்க, காதில் கடுக்கன் அணிந்து, காவி வேஷ்டி, மேலே வெள்ளை சட்டை யுடன் வந்தார்." வாங்க, ராமசுப்பு" என்று கூறிய அத்திம்பேர் அவரை சுப்புலக்ஷ்மிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராமசுப்பு கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். வேளா வேளைக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டு, எவ்வளவு செலவாகும் என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தார். " மளிகை சாமானுக்கும், கறிகாய்க்கும் அட்வான்ஸ்சா இப்போ 10% கொடுத்துடுங்கோ. மீதியை கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வாங்கிக்கிறேன். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்களுக்கு தரவேண்டிய மீதிய கொடுக்கலாம்" என்றார். அத்திம்பேர் அவரிடம் " 10% அட்வான்ஸெல்லாம் வேணாம். நாங்க என்ன முன்ன பின்ன தெரியாதவாளா?" என்று கூறி நூறு ரூபாய் நோட்டோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து ராமசுப்புவிடம் " இத அட்வான்ஸா வச்சுக்கோப்பா" என்று கொடுத்தார் அத்திம்பேர். இதை வாங்கிக் கொண்ட ராமசுப்பு" நீங்க சொன்ன சரிதான் மாமா" என்று சொன்னார். பின்னர் ஒவ்வொரு வேளைக்கும் என்ன மெனு என்று எழுதித் தருவதாகவும் அதில் மாற்றமிருந்தால் தெரிவிக்கும் படி கூறி " அப்ப நான் விடை பெத்துகறேன்" என்று அவர் கூறிய போது, சுப்புலக்ஷ்மி அவரிடம் " வரவா எண்ணிக்கை தோராயமாக தான் கொடுத்து இருக்கு. கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிண்டு, எல்லோரும் சந்தோஷமா சாப்ட்டு போற மாரி பண்ணனும்" என்றாள். அதற்கு அத்திம்பேர்
" இதெல்லாம் பத்தி நீ கவலைப்படாதம்மா. ராமசுப்புவை நேக்கு ரொம்ப நாளா தெரியும். அவர் எல்லாத்தையும் பாத்துப்பார் " என்று கூறினார்.
சுப்புலக்ஷ்மி அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.
No comments:
Post a Comment