Saturday, January 27, 2024

வசந்த காலம் வருமோ?- 84

 வசந்த காலம் வருமோ?- 84

By N Krishnamurthy 

மறுநாள் மாலை  இந்திய நேரப்படி ஏழு மணி இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் ராஜேஸ்வரிக்கு இந்தியாவிலிருந்து ஒரு டெலிஃபோன் வந்தது. "சரி. தங்களை சாரங்கன், தானாக கூப்பிட்டால் தான் முறையாக இருக்கும், என்று கூப்பிடுகிறார் போல இருக்கிறது" என்று நினைத்துக் கொண்ட ராஜேஸ்வரி ஃபோனை எடுத்து "ஹலோ" என்றாள். "ஹலோ.ராஜேஸ்வரி மாமி தானே  சௌக்கியமா"என்று பெண் குரல் கேட்டது. "ஆமாம்.ராஜேஸ்வரிதான். நீ யாரம்மா பேசறது" என்று கேட்டாள் அவள். "மாமி நான் தான் வசுமதி பேசறேன்" என்றாள் வசுமதி.

" ஓ.வசுமதி. வாட்ட எ    சர்ப்ரைஸ். நீ எப்படி இருக்க. ஆத்ல எல்லோரும் சௌக்யமா"  என்று கேட்டாள் ராஜேஸ்வரி.

"நான் சௌக்கியமா இருக்கேன் மாமி. ஆத்லயும் எல்லாரும் செக்யம்தான்" என்றவளிடம் " என்ன, ஏதாவது விசேஷம் உண்டா" என்று கேட்டாள் ராஜேஸ்வரி. 

" ரெண்டு விசேஷம் இருக்கு  மாமி. முதல் விசேஷம் நான் இப்போ கேரியிங்"என்றாள் வசுமதி. "கன்கிராட்ஸ்.எத்தனாவது மாசம்" என்று கேட்டாள் ராஜேஸ்வரி. 

" நாலாவது மாசம் நடந்திண்டிருக்கு மாமி"என்றவள் "அடுத்த விசேஷம் இன்னும் ரொம்ப இம்பார்டன்ட் மாமி" என்றாள். "என்னம்மா அது " என்று 

ராஜேஸ்வரி கேட்டாள் வசுமதி" சாரங்கன் மாமாக்கு 60 வருது. உங்கள கூப்பிடுவாளா, இல்லையான்னு நேக்கு தெரியாது. கூப்பிட்டாலும், கூப்பிடாட்டாலும், நீங்க ஃப்ங்கஷனுக்கு   குடும்ப சகிதமா வந்துடணம். ஏன்ற காரணத்தை நான் பின்னாடி சொல்றேன். மறக்காம உங்காத்து மாமவையும் கூட்டிண்டு வரணம். நவம்பர் 26 பங்க்ஷன்" என்று கூறினாள் வசு.

 "நேத்திக்கு  ம்ருதுளா போன் பண்ணா .அவ அப்பா, அம்மா சார்புல எங்களை கூப்பிட்டு இருக்கா. இன்னிக்கு டிக்கெட்டுக்கு  செக் பண்ணீட்டு பிளாக் பண்ணிடுவோம். முக்காவாசி டிக்கட்  கெடச்சுடும். பங்ஷனுக்கு நாங்க நிச்சயம் இந்தியா வருவோம்"என்றாள் 

ராஜேஸ்வரி." கேக்கறக்கு சந்தோஷமா இருக்கு மாமி. ரொம்ப நல்லது" என்று கூறிய வசுமதி

 " இப்பதான் உங்களுக்கு முக்கியமான மேட்டரே சொல்ல போறேன்" என்று கூறினாள். பின்பு அவள் ரகுநந்தனுடைய அம்மா எடுத்த  முயற்சியையும், அதற்கு தனது அம்மா ரங்கநாயகி எப்படி ஆதரவு அளிக்கிறாள் என்றும் விளக்கினாள். பின்னர் "மாமி. உங்களுக்கு ம்ருதுளா மாட்டு பொண்ணா வரணம்னு   இருக்கூன்னு நெனைக்கிறேன் "என்று கூற,ராஜேஸ்வரி " ஆமாம்மா. என்னிக்கு ம்ருதளாவ  முதன்முதலா பாத்தேனோ, அவ பாட்டை கேட்டேனோ, அன்னிக்கே அவளை மாட்டு பொண்ணா எப்பேர்பட்டாவது ஆக்கிகணம்ன்ற தீர்மானத்துக்கு வந்துட்டேன்.  சங்கர க்ருஷ்ணனும் அவள தன் மனைவியா அடையணும்னு நெனைக்கிறான்" என்றாள்.

வசுமதி "ம்ருதுளா மனசு உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.உங்க பையன் மேல அதீத அன்பு வெச்சிருக்கா. உங்க பையன் கெடைக்கலேன்னா அவ என்ன பண்ணிப்பாளோன்னு நெனச்சு பாக்கச்சே நேக்கு கதி கலங்கறது. இந்த  கேஸ்ல நான் ஒரு பெரிய  ப்ரோப்ளத்த  எதிர்பாக்கறேன் மாமி"என்றாள்.வசுமதி இப்படி சொல்லியதும், ராஜேஸ்வரி தனக்கு எதிர்பாராத இடத்திலிருந்து சப்போர்ட் கிடைப்பதை எண்ணி மகிழ்ந்தாள்.பின்பு அவள் " நேக்கும் இந்த விஷயம் சுமுகமா முடிவாகாதூன்ற பயம் இருக்கு.இப்போ  என்ன ப்ராப்ளத்த நீ எதிர்பாக்கறேன்னு சொல்லு"என்றாள்.

No comments:

Post a Comment