Saturday, January 27, 2024

வசந்த காலம் வருமோ?- 81

 வசந்த காலம் வருமோ?- 81

By N Krishnamurthy 

மறுநாள் ரங்கநாயகி ரகுநந்தனின் அம்மாவிற்கு ஃபோன் செய்தாள். விஷயம் எதிர்மறை ஆனதை பற்றி கூறாமல் கொஞ்சம் மாற்றி சொல்ல விரும்பினாள்.

"மாமி. நான் என் தம்பி கிட்ட பேசிட்டேன் பேசிக்கா அவனுக்கு இஷ்டம் இருக்கு. ஆனா இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு சொல்றான். மறுபடியும் அவன்கிட்ட நான் பேசி பார்க்கிறேன். நிச்சயம் இந்த இடத்தை முடிக்கலாம் தான் நான் நெனைக்கிறேன்" என்று பட்டும் படாமல் சொன்னாள். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாத ரகுநந்தனின் தாய் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்தன் மாதிரி ஏதாவது செய்ய வேண்டுமென ரங்கநாயகி நினைத்தாள். சாரங்கன் பிடிவாதமாக இருந்தது அவளுக்கு ஆச்சர்யம் அளித்தது. வேறு யாரையாவது அவன் மனதில் நினைத்துக் கொண்டிரிக்கிறானோ என அவளுக்கு  சந்தேகம் 

எழுந்தது. இந்த சந்தேகம் அவளுக்கு வந்த போது அவளுக்கு ஏனோ திடீரென்று ராஜேஸ்வரி மற்றும் சங்கர க்ருஷ்ணன் ஞாபகம் வந்தது.

மறு நாள் ரங்கநாயகி கோமளத்திற்கு போன் செய்தாள்."என்னம்மா எப்படி இருக்க. அப்பா எப்டி இருக்கா"என்றாள்.

"எல்லாம் சௌக்யமா இருக்கோம்.மாப்பிள்ளை சௌவுக்யமா " என்று கேட்டாள் கோமளம்.பின்னர் ரங்கநாயகி அவளிடம் எல்லா விஷயத்தையும் விவரமாக எடுத்துரைத்தாள். கோமளா அவளிடம் "அந்த பையன் இங்க கூட வந்திருந்தான். பாக்கா லக்ஷணமா இருக்கான்.ரொம்ப அடக்க ஸ்வபாவம்.ம்ருதுவுக்கு ஏத்தவனாகத்தான் இருப்பான்னு நேக்கும் மனசுல பட்டுது.நானே சாரங்கன் கிட்ட இது பத்தி பேசலாம்னு நெனச்சிண்டிருந்தேன்" என்றாள். இதைக்கேட்ட ரங்கநாயகி,பழம் நழுவி பாலில் விழுந்தது போல, உற்சாகமாகி " நீ சாரங்கனுக்கு எடுத்து சொல்லும்மா.நான் நம்ப ம்ருதுவுக்கு நல்ல வாழ்க்கை அமையணம் தான் இவ்வளவு தூரம் மெனக்கடறேன்" என்றாள்."நேக்கு புரியர்துடி. கவலப்படாதே. நான் சாரங்கனுக்கு எடுத்து சொல்றேன்" என்றாள்கோமளா.

அடுத்த நாள் கோமளா சாரங்கனிடம் இது பற்றி கேட்டாள். சாரங்கனும் ரங்கநாயகிக்கு அளித்த பதிலையே அம்மாவிடமும் சொன்னான்."சரி.இவனை விட்டுப்பிடிப்போம் ",என எண்ணிக்கொண்டாள்  கோமளா.

சக்ரவர்த்தி அவளிடம்"என்ன ,அம்மாவும், பிள்ளையும் ரகசியமா என்னமோ பேசறீங்க.எங்கிட்ட சொல்லப்படதாக்கம்"என்றார்.

"உங்ககிட்ட சொல்லாமா எங்க போகப்போறோம்"என்று கூறிய கோமளா அவரிடம் எல்லாவற்றையும் கூறினாள். அவர் சிறிது நேரம் கண்களை மூடி இருந்தபடி "நேக்கென்னமோ இந்த எடம் அமையாதுன்னு தோணர்து" என்றார். பல சமயம் அவர் சொல்வது நடந்திருக்கிறது. எந்த அடிப்படையில் அவர் அவ்விதம் சொல்கிறார் என்பது தெரியாது. இந்த விஷயத்தில் அவர் இப்படி சொன்னது கோமளாவிற்கு ஏமாற்றமளித்தது. பிராமணன் வாக்கு பலிக்காம இருக்கணம் என்று வேண்டிக்கொண்டாள்.

அடுத்த நாள் ரங்கநாயகி லைனில் வந்தபோது கோமளா நடந்ததை கூறினாள்.

ரங்கநாயகிக்கு ஆத்திரம் வந்தது. அடுத்து இது விஷயமாக என்ன செய்வது என தீவிரமாக யோசிக்க தலைப்பட்டாள்.

No comments:

Post a Comment