Thursday, January 11, 2024

முற்பகல் செயின்..3

 முற்பகல் செயின்..3

By N Krishnamurthy 

திரு அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஆறு வருடம் கழிக்க வேண்டி வந்தது.

மாஸ்டர்ஸ் முடித்து பி.ஹெச்.டி சேர்ந்ததும் கிடைத்த ஸ்காலர்ஷிப்பில் தனது சொந்த செலவுயையும் பார்த்துக்கொண்டு, மாதாந்தோறும் எஜுகேஷன் லோனுக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.

 பி.ஹெச்.டி முடித்த கையோடு இந்தியா திரும்பினான் திரு.சரி இத்தோடு நம் கவலைகளும் பறந்தோடி விடும் என்று தப்பு கணக்குபோட்டார் நமச்சிவாயம்.

"என்னப்பா வேலைக்கு அப்ளை செய்ய ஆரம்பித்துவிட்டாயா" என்று அவர் கேட்டபோது தான் அந்த குண்டை தூக்கி போட்டான் திரு. "என் படிப்புக்கு இந்தியாவில் கிடைக்கும் சம்பளத்தில் நாக்கை கூட வழித்துக்கொள்ள முடியாதப்பா.அமெரிக்காவில் ஒரு பெரியசாப்ட்வேர் கம்பனியிலிருந்து வேலைக்குண்டான தகவலை எதிர் பார்க்கிறேன்" என்றான். நமச்சிவாயம் திகிலடைந்தார். கோமதியிடம் தன் பயத்தை கூறினார். கோமதி திருவிடம் "என்னடா திரு. நீ அமெரிக்காவிற்கே திரும்பி வேலைக்கு போகப்போகிறாயாமே.திரும்பி வரமாட்டாய் என்கிறாரே உன் அப்பா"என்றாள்.  திரு அவள் கைகளை பிடித்துக்கொண்டு "இதில் முதல் பாதி உண்மை.நாலைந்து வருடம் வேலை பார்த்து பணத்தை சேர்த்து, லோனையெல்லாம் அடைத்துவிட்டு இந்தியா திரும்பி சொந்தமாக தொழில் செய்யப்போகிறேன் "என்றான்.

அந்த பேதையும் இதை நம்பினாள்.இந்த முறை அவள் நமச்சிவாயத்தை தேற்ற முனைந்தாள். 

திரு எதிர்பார்த்த லெடரும் வந்தது.

அதை நமச்சிவாயத்ததிடம் காண்பித்தான்.

மாச சம்பளத்தை அமெரிக்க டாலரிலிருந்து ரூபாய்க்கு மாற்றினால்  நாலு லட்சம் வந்தது. ஆச்சரியப்பட்டார் நமச்சிவாயம்.

திரு கிளம்பி அமெரிக்கா போனான். இந்த முறை மாதாந்தோறும்  கொஞ்சம் கூடவே பணம் அனுப்பினான்.

கோமதிக்கு சந்தோஷத்தில் வாயெல்லாம் பல்(எதோ எல்லோரும் எழுதுவதை போல எழுதி விட்டேன்.படிப்பவர்கள் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்).சொந்தங்களிடம் சொல்லி சொல்லி பெருமை  பட்டுக்கொண்டாள். நமச்சிவாயத்திடம்"ஏங்க திருவுக்கு வயசாகிகிட்டே போவுது. கல்யாணம் (கார்த்திக்கு) ஏற்பாடு பண்ணவேண்டாமே"

என்று நச்சரித்தாள். இது தனக்கு தானே தோண்டிக்கொள்ளும் குழி என்று அவள் அப்போது அறியவில்லை.

ஒரு நாள் ஒரு பெரிய கார் அவர்கள் வீட்டின் முன்னே நின்றது. ட்ரைவர் காரின் கதைவை திறந்து விட கோல்ட் பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி அணிந்த ஒருவரும், கழுத்து,காது,மூக்கு என்ற எல்லா  அவயங்களிலும் தங்க நகைககளாக நிரப்பிய ஒரு மாதும் காரிலிருந்து இறங்கினார்கள். வீட்டின் வாசலில் நின்று, நமச்சிவாயத்தை பார்த்து "சார்வாள் தானே நமச்சிவாயம்"என்றார் அவர்.(தானும் திருநெல்வேலி சீமையை சார்ந்தவன் என்று காட்டிக்கொள்கிறாராம்) ஒன்றும் புரியாதவரான நமச்சிவாயம் "ஆமாங்க.உள்ளை வாங்க"என்று அழைத்தார்.

வாழ்க்கையின் இறுதி காலத்தில் தானும், கோமதியும் சந்திக்கப்போகும் துன்பங்களுக்கு இதுதான்  வித்திடப் போகிறது  என்று அன்று அவர் அறியவில்லை

(தொடரும் )

No comments:

Post a Comment