நந்து சுந்து
நளினிக்கும் வருணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
கல்யாண மண்டபம் கிடைக்கவில்லை. நளினி அப்பாவிடம் கொஞ்சம் பணத் தட்டுப்பாடும் இருந்தது.
கவலையில் இருந்த அப்பாவுக்கு ஒரு ஐடியா உதித்தது.
மனைவியிடம் அதை சொன்னதும் சரியென்றார்.
"எதுக்கும் பொண்ணு, மாப்பிள்ளை கிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுங்க"
அவர்களும் சரியென்றார்கள்.
அன்று காலை வருணும் நளினியும் ஜோடியாக வெளியே புறப்பட்டார்கள்.
"பாத்து சூதனமா நடந்துக்குங்க. வெற்றியோட வாங்க"
அன்று மாலை. கழுத்தில் புது தாலியுடன் வந்தார்கள் இருவரும்.
"அப்பா..நீங்க சொன்ன படியே பார்க்ல போய் நானும் வருணும் உக்காந்தோம். கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் வந்தது. யார் நீங்கன்னு கேட்டாங்க. லவ்வர்ஸ்னு சொன்னோம். அப்போ கட்டுடா தாலியைன்னு வருண் கைல தாலிய கொடுத்தாங்க. அவரும் கட்டிட்டாரு"
"சூப்பர்மா" என்றாள் அம்மா.
"கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிட்டோம். தாலி கூட அவங்க செலவு. ஐம்பது பேர் கூட்டம் வேற" என்றார் அப்பா.
"அப்பா..பேப்பர்ல போட்டோ கூட வருமாம்" என்றாள் நளினி.
- காதலர் தின சம்பவம்.
No comments:
Post a Comment