Monday, February 21, 2022

கோகினூர் வைரத்தின் கதை பகுதி 3

 🌺🌺கோகினூர் வைரத்தின் கதை பகுதி 3

பானிபட்போரில் விக்ரம ஜித் மரணம் அடைந்ததால் அவரது குடும்பம் ஆக்ரா அரண்மனைக்கு தஞ்சம் புகுந்தது. பாபரின் மகன் ஹுமாயூன் ஆக்ராவை கைப்பற்றிய போது விக்ரம ஜித் குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கோஹினூர் வைரத்தை ஹுமாயூன்க்கு கொடுத்தனர். வைரத்தைப் பரிசாகப் பெற்ற ஹூமாயூன் விக்ரம ஜித் குடும்பத்தினரை ஆக்ரா கோட்டையில் இருந்து வெளியேற்றி சித்த ஊரிலுள்ள மேவாருக்கு கடத்தவும் அனுமதித்தார். ஆனால் அனைவரையும் போன்று ஹுமாயூன் கோகினூர் வைரத்தைப் பார்த்து வியந்து போகவில்லை.

மயிலாசனத்தில் கோஹினூர் வைரம்

முகலாயர்களின் பலர் தங்கத்திற்கு அடுத்ததாக பவளம் போன்ற நவரத்தின கற்களையே அதிகமாக விரும்புவர். இதனால் முகலாயர்களுக்கு பரிசளிப்பவர்கள் அதிகம் பவளங்கள் வைரங்கள் போன்றவற்றையே கொடுப்பார்கள். இந்த நவரத்தினங்களை வைத்து ஷாஜஹான் அழகான சிம்மாசனம் ஒன்றை தயார் செய்ய நினைத்தார். அந்த சிம்மாசனம் மயிலாசனம் என்று அழைக்கப்பட்டது. 1500 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த ஆசனத்தில் பவளம், வைடூரியம், கோமேதகம் என விலை உயர்ந்த அரிய கற்கள் பொறிக்கப்பட்டன. அவற்றில் கோஹினூர் வைரம் மிக முக்கியமானது.

1635 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அந்த சிம்மாசனத்தில் சாஜஹான் அமர்ந்தார். சிம்மாசனத்தை உருவாக்க செய்யப்பட்ட செலவு 4 தாஜ்மஹால் கட்டுவதற்கு செய்யப்படும் செலவுக்கு சமம். இந்த காலகட்டத்தில் தான் தாஜ்மஹாலும் கட்டப்பட்டு வந்தது. முகலாய வம்சத்தின் வீழ்ச்சி முகமது ஷா ரங்கீலா காலகட்டத்தில் துவங்கியது. முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரத்தை விரும்பிய முகமது ஷா வாழ்நாள் முழுவதையும் கேளிக்கைகளில் கழித்தார். காலை வேளைகளில் யானைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து மகிழ்வார். மதிய நேரத்தில் விருந்துகளும் கேளிக்கைகளும் என்றால் மாலையும் இரவும் கலைஞர்களின் நடனம் இசை என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்

அந்த காலகட்டத்தில் காபூல் முதல் வங்காளம் வரை பரவிக் கிடந்த முகலாய ஆட்சி கட்டுப்படுத்தும் தலையாய இடமாக இருந்த டெல்லி அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய நகரங்களின் வரிசையில் முக்கியமானதாக திகழ்ந்தது. லண்டன் மற்றும் பாரிஸ் நகரின் மக்கள் தொகையை சேர்த்தால் கூட டெல்லியின் மக்கள் தொகையை விட குறைவாகவே இருக்கும். மேலும் உலகில் உள்ள செல்வ செழிப்புமிக்க நகரங்களிலேயே டெல்லி திகழ்ந்ததால் அன்னியர்கள் டெல்லியை குறி வைக்கத் தொடங்கினார்கள். அதற்கு ஏற்றார்போல் மது கேளிக்கை போன்றவற்றிற்கு அடிமையாகி முகமது ஷா பலவீனமானது போல் அவரின் சாம்ராஜ்யமும் பலவீனமாகக் துவங்கியது.

No comments:

Post a Comment