Thursday, February 24, 2022

கோதாவரி நதி தீரம் 26

 🎼🎻🌹 கல்லிலே கலைவண்ணம்🌹🎻🎼

(சுஜாதா&வெங்கடேசன்) பகுதி  26 கோவிந்த ராஜுலு கொண்டா

ஒத்தக்கல்லு மலை மேலே அப்படி ஒன்னும் பெரிய கோட்டைலாம் இல்லை. ஒரு கட்டடம் ஒரு பாழடைஞ்ச கோயில்.. அது வாசல்ல நம்ம ஊர் வழக்கப்படி ஜோடி ஜோடியா பொண்ணும் பையனுமா காலேஜ் பசங்க. மேலேர்ந்து வாரங்கல் முழுக்கத்தெரியறது. பக்கத்துல பெரிய ஏரி. 

ருத்ரமாதேவி படத்துல வர மாதிரி கோன கன் னா ரெட்டி வர மாதிரி பெரிய கோர்ட் யார்ட்லாம் எங்க செட் போட்டு எடுத்தாலோ தெரியல. இறங்கி வரோம். குழந்தைங்க விளையாட பார்க் சீசா எல்லாம் இருக்கு. மறுபடி ரெண்டு ஆட்டோ பிடிச்சு கீதா பவன் வந்து ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டு  ரெஸ்ட் எடுத்துண்டு திரும்பவும் ஆட்டோ பிடிச்சு வாரங்கல் வரோம். 

வாரங்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரொம்ப  பக்கம்தான். ராத்திரி இங்க வந்துதான் ட்ரெய்ன் ஏறணும். ஆனா லக்கேஜ் எடுத்துண்டு அலையறதை விட சேவிச்சிட்டு ரூம் காலி பண்றதுதான் பெட்டர் னு சொல்றார். கோவிந்த ராஜுலு குட்டா கோயில் ஒரு மலை மேல இருக்கு. தேவி தியேட்டர் எதிரே 150 படி ஏறி மேலே போனா கோயில் பூட்டி இருக்கு.

தல்ல வேளையா கம்பி கேட் வழியா பெருமாள் ஸேவை சாதிக்கறார். ஸயன திருக்கோலத்தில் புதையல் பாத்திரம் பக்கத்தில். பாதமருகில் ஶ்ரீதேவி,பூதேவி நீளாதேவி.. 

தலைமாட்டில் நாரத முனி…

திருப்பதி ஶ்ரீனிவாசர் பக்தாளோட வேண்டுதல்களை நிறைவேத்தி டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்க மறைவா வந்தவர் ருத்ரம்மா கனவுல அதை சொல்ல அவள் ஆட்களை அனுப்பி தேட கோவிந்தராஜர் கிருஷ்ணர் சிலைகளை கண்டு சிறிய கோயில் கட்டியதாக..செவி வழி செய்தி…

கோயில் 5 மணிக்கு திறக்கும்ங்கறா..ஆனா இவர் ரூம் போய் காலி பண்ணி மறுபடி வந்து டிபன் சாப்ட்டு ட்ரெய்னை பிடிக்க முடியாது. கன்னத்துல போட்டுண்டு போட்டோ எடுத்துண்டு கிளம்ப சொல்றார். 

சூரியன் மறைய ஆரம்பிக்கற நேரம் மலை மேலேர்ந்து வாரங்கல் மனசை மயக்கறது..

பெருமாளை மறுபடி கம்பி வழியா பார்த்து “போய்ட்டு அப்பறம் வரே”ன்கறேன். 

என் ஏக்கத்தை பார்த்து இவர் சொல்றார்..….

“பார்வை" என்பது ஆன்மீகத்தில் ரொம்ப முக்கியம். அற்புதங்களையும் பார்க்கத் தெரியவேண்டும்! நம்பிக்கை என்பதை விட இந்தப் "பார்வையை" நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னால் ஆன்மீகம் தேனாய், பாலாய் இனிக்கும். நமக்காக அதைச் சொல்லித் தருகிறார் திருக்குருகூர் சடகோபன்.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்தோறும்-பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

அதனால இந்த மலை இந்த மரம் இந்த ரயில்வே ஸ்டேஷன் மட்டுமில்லாம உன் மனசு என சர்வ இடங்கள்லயும் வ்யாபிச்சிருக்கற என்னை இந்த மட்டும் கஷ்டப்பட்டு ஊர்ஊரா வந்து என் மலை மேலே ஏறினதே போதும்.சீக்ரம் போய் ட்ரெய்னை பிடின்னு பெருமாள் சொல்றார்…

முக்கு போய் கீதா பவன்ல சாப்பிட்டு ட்ரெய்ன்ல ஏறி ஸ்லீப்பர்ல தூங்க ஆரம்பிக்கறேன்.  

கோதாவரியும்,கோவிந்தராஜரும்,ராமரும், ராஜமுந்திரியும் மன ஆழத்திலேர்ந்து ‘’மறுபடியும் எப்ப’’ன்னு கேக்கறா..

ரதம் முழுக்க காடா,நதியா மலையான்னு இயற்கையோடஇயற்கையா இருக்கற இந்து தெய்வங்களை தேடறதுதானே எங்க லட்சியம். வேற ஒரு நதி மலை உருவத்துல உங்களை கட்டாயம் தரிசிப்பேன்”கறேன்.




No comments:

Post a Comment