😃தஞ்சாவூர் மாவட்டமனிதர்கள்
தி.நகர் ரங்கநாதன் தெருவில் அவ்வளவு கூட்டத்திலும் நீங்கள் தஞ்சைமாவட்டமனிதர்களை எளிதாக அடையாளம்கண்டுகொள்ளமுடியும்.அவர்களுக்கு என்று ஆண் பெண் இருவருக்கும் பிரத்யேக குணங்கள் உண்டு.
ஆண்கள்:-
1.எப்பொழுதும்அரைக்கை சட்டை போடவே விரும்புவார்கள்.
2. நீங்கள் எதாவது கேட்டால்பதில்சொல்லாமல் உங்களிடம் குறைந்தது பத்து கேள்விகள்கேட்பார்கள். உங்கள் கேள்வியே மறந்து விடும்.
3. கையில் பை எடுத்துக் கொண்டு போகாமல் வெளியே செல்லமாட்டார்கள்.
4. அடுத்தவர் எது பேசினாலும் அது பற்றி கேட்டிராத தகவல் ஒன்றை சொல்வார்கள். டென்டுல்கர்கிரிக்கெட் ஆட்டத்தை பற்றி பேசினால். அவர் மனைவி அவரைவிட ஐந்து வயது மூத்தவர் என்று சொல்லி பேசுபவரை திகைக்க வைப்பர்.
5. நேரம் தவறாமை அவர்களது குணம். பள்ளி,ஆபிஸ்,பயணம், விழாக்களுக்கு சரியான நேரத்திற்கு முன்னதாகவந்துவிடும் பழக்கம். தாமதம் பிடிக்காது.
6. அரசாங்க வரி, கட்டணம்போன்றவைகளை உடனே கட்டிவிடுவார்கள். கடைசி நேர அவசரம் இருக்காது.
7. யாருடனும் எளிதாக பழக மாட்டார்கள். அவர்கள் மாவட்டம் என்று தெரிந்தால் மட்டும் பேசுவார். இதை அடுக்கு மாடி குடியிருப்பில் கவனித்திருக்கலாம்.
8. என்பதை எம்ளது என்று சொல்வார்கள்.
9. நான்கு "C" க்களுக்கு அடிமை. Coffee, Carnatic music, Cinema and Cricket.
10. சட்டம் விவரங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்.
பெண்கள்:-
------------------
1. ஆடைகளுக்கு முக்கியத்துவம்அதிகம் கொடுப்பார்கள்.
2.உறவுமுறைகளை மறக்கமாட்டார்கள். அனைத்து உறவுகளையும் கேட்டு நலம் விசாரிப்பது. யார் வீட்டுக்கு சென்றாலும் அங்குள்ள அனைவரிடமும் பேசி நலம் விசாரிப்பார். குழந்தைகள்வயதானவர்கள்வேலைக்காரர்கள் உட்பட.
3. எவ்வளவு வருடமானாலும் எதையும் மறக்க மாட்டார்கள்.
4. சமையலறையை நேர்த்தியாக ஒழுங்கு முறையுடன் பராமரிப்பது. பால்கரண்டியை மறந்து போய் கூட சாம்பாரிலோ ரசத்திலோ உபயோகிக்க மாட்டார்கள். என்ன சமைக்க வேண்டும் என்பதை பெண்களே மாமியார் அல்லது மருமகள் மட்டுமே முடிவு செய்வார்கள். ஆண்கள் தலையிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.
5. அட்லான்டா, சிட்னி, பர்மிங்காம் எங்கே வாழ்ந்தாலும் பண்டிகைகளை முறைப்படி கொண்டாடுவார்கள். உணவு விஷயத்தில் எந்த சமரசமும் பிடிக்காது.
6. என்ன நெட்வொர்க் என்று தெரியாது. நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு த.மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் என்ன சமையல் என்று கேட்டு பாருங்கள் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment