🌺🌺கோகினூர் வைரத்தின் கதை பகுதி 5
கோஹினூர் கண்டெடுக்கப்பட்ட போது கூறப்பட்ட அதன் சாபத்தின் பற்றிய தெளிவான குறிப்புகளும் இங்கு இருந்துதான் துவங்குகிறது. சபிக்கப்பட்ட கோஹினூர் வைரத்தை கவர்ந்து சென்றதால் தான் நாதிர் ஷா கொல்லப்பட்டதாக இன்றளவும் வதந்திகள் உலவுகின்றன. நாதிர் ஷா மரணத்தைத் தொடர்ந்து பாரசீக படையில் கலகம் வெடித்தது. நாதிர் ஷாவை கொன்ற ஈரானியப் படைகள் அவரது குடும்பம் மற்றும் வாரிசுகளையும் கொல்ல நினைத்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து ஆப்கானிஸ்தான் படையினர் நாதிர் ஷாவின் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இதற்கு நன்றிக்கடனாக ஆப்கான் படைத்தளபதி முஹம்மத் ஷாவுக்கு நாதிர் ஷாவின் மனைவி கோஹினூர் வைரத்தை பரிசாக வழங்கினார்.
நாடு திரும்பிய கோஹினூர்
அதன்பின் முஹம்மத் ஷா ஆப்கானிஸ்தானில் ராஜ்ஜியத்தை அமைத்து தனிக்காட்டு ராஜாவாக ஆனார். கோஹினூர் வைரத்தின் சாபம் அவரையும் விடவில்லை சில ஆண்டுகளிலேயே அவரது முகத்தில் கொப்பளங்கள் ஏற்பட்டு கோரமானது. அதனை மறைக்க இரும்பினால் ஆன முகமூடியை அணிந்து அவர் வாழ்ந்தார். அவரது இந்த நிலைக்கு கோஹினூர் வைரத்தின் சாபமே காரணம் என்று கூறப்பட்டது. காலங்கள் உருண்டோட ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த பல போர்களில் ரத்த ஆறுகளுக்கு மத்தியில் ஒவ்வொரு ஆட்சியாளரின் கையில் இருந்தும் இன்னொருவருக்கு கோகினூர் வைரம் மாறியது. பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது.
1813 இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதனை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கவுரவம் மீட்கப்பட்டதாக அவர் பெருமிதம் கொண்டார். லாகூரை உள்ளடக்கிய பஞ்சாபை ஆண்ட ரஞ்சித் சிங் தன் தந்தையுடன் பத்தாவது வயதிலேயே முதல் போர்க்களத்தை பார்த்தவர். பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ரஞ்சித் சிங்கை மக்கள் போற்றினர். கோஹினூர் வைரத்தை ரஞ்சித் சிங் மீட்டது முதல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரது வலது கை மணிக்கட்டில் தஞ்சம் அடைந்திருந்தது கோகினூர் வைரம். மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்த ரஞ்சித் 1837 ஆம் வருடம் மரணமடைந்தார்.
5 வயது சிறுவனிடம் ஆட்சி
ரஞ்சித் சிங் மறைந்த பிறகு அவருக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை இன்றைய ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு தானமாக வழங்க வேண்டுமென்று அவரது ஆசையை உயிலில் எழுதியிருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறியதா?
No comments:
Post a Comment