தப்புக்கணக்கு
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு.இந்த வார்த்தைஎங்களுக்குத்தானோ?
கல்யாணம் முடிந்து 10வருடங்களுக்கு பின் 2 மகள்கள் பிறந்தனர்.இரு பக்க உதவியும் இல்லாமலேயே வளர்த்தோம்.
பெரியமகள் தியாகராஜா இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைத்து அட்மிஷனுக்கு மதுரை செல்லும்போது இரண்டு மைத்துனர்களில் ஒருவரும் வாருங்கள் என்று சொல்லவில்லை. நாங்களும் எதிர் பார்க்கவில்லை.
என் தம்பி,தங்கைகள் ஏதாவது கேட்டால் நமக்கு செலவு வருமோ என்று வாயே திறக்கவில்லை.ஆனால் உள்ளூற அனைவருக்கும் புகைச்சல்.
பெரிய மகள் டிசிஸ் சேர்ந்து பிறகு கல்யாணமாகி, சிறியமகள் ஐசிஐசிஐ டெபுடி மானேஜராக பணியும் ஏற்றபிறகு மூச்சுவிட்டு பொறுப்புகள் பெருமளவு முடிந்துவிட்டன,தேசாந்திரம் செல்வோம் என்று நினைக்க
பெரியமகள் மறைந்து அவள் இரண்டரை வயது மகனுடன் நாங்கள்.
சிறியமகள் மணமாகி டைவர்ஸ் ஆகி பிறந்ததிலிருந்து இன்று வரை அந்தப்பேரனும் எங்களுடன் மீண்டும் ஸ்கூலில் இருந்து துவக்கம்.
ரிடையர்ஆன பிறகு 10வருடங்களில் 60வருடத்தில் கண்டதிற்கு மேல் பெரிய பேரனுக்கு டைப் 1 சர்க்கரை குறைபாடு.கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல்.தற்போது கூட சுகர் செக் பண்ணி லோவாக இருப்பதைக்கண்டு அதற்கு வேண்டியவற்றைச் செய்து ஒரு மணி நேரம் சென்றவுடன் செக் செய்துவிட்டு தூங்க வேண்டும்.
இருபக்கத்து மக்களும் தொலைதூரத்தில்.ஆனாலும் நான் வேண்டுவது இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும் இடுக்கிப் பிரான் என்று வினவுவோம் அல்லோம் என்பதுதான். கணக்கு எங்கு தப்பியது.அறிந்திலேன்.
நன்றி.
.
No comments:
Post a Comment