பருப்பு ரசம்
🍱 தேவையான பொருட்கள்:
2. தக்காளி - 1 எண்ணம்
3. புளி - சிறு நெல்லிக்காய் அளவு
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. பூண்டு - 5 பற்கள்
7. கறிவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
🫕 தாளிக்க:
10. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
11. மிளகாய் வத்தல் - 1 எண்ணம்
12. கடுகு - 1 தேக்கரண்டி
🍴 செய்முறை:
1. துவரம் பருப்பை வேக வைத்து அந்தத் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
2. அரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
3. மிளகு, சீரகம், பூண்டு மூன்றையும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வத்தல் போடவும். பிறகு கடுகு , காயம், வெந்தயம் போடவும்.
5. கடுகு வெடித்தவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும் பொடித்து வைத்துள்ளப் பொடியை சேர்த்துக் கிளறி புளித்தண்ணீரை ஊற்றவும்.
7. ஒரு கொதி வந்ததும் பருப்புத் தண்ணீரை ஊற்றவும். நுரை கூடி வரும் போது கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் உப்பைப் போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
No comments:
Post a Comment