🌹🙏திருப்பதி முதல் 🏞திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 3
12 மணிக்கு ஶ்ரீனிவாசம்ல ரிபோர்ட் பண்ணனும். ஆனா 11 40 க்கு ரேணிகுண்டா பைபாஸ் தாண்டி எம் எஸ் ஸ்டாட்ச்யூ வந்து ராமானுஜர் சிலை வரச்சே 11.45 ஆகி படபடன்னு வரது... பஸ்ஸ்டாண்ட் முன்னாடியே பஸ்ஸை ஸ்லோ பண்ண சொல்லி குதிக்கறோம். மெட்ரோவோ எதோவோ bridge கட்டறான்..அந்த புழுதில இவரை இழுத்துண்டு ஶ்ரீனி வாசம் ஓட மணி 12.00.. மெடல் டிடக்டர் உள்ள நுழைஞ்சு ஓட கௌன்டர்ல செல் போனை காட்டறேன். அவன் பார்கோடு ஸ்கேன் பண்ணிட்டு கரெக்ட் டயம். ஒரு நிமிஷம்லேட் ஆனாலும் கான்சல்ங்கறான்.
ரெண்டாவது மாடில A 220 ஐ தேடி பிடிச்சு லக்கேஜ வைக்கறோம். பெரிய ரூம். பத்து பேர் கூட தங்கலாம். பாத்ரூம் டாய்லட் க்ளீனா இருக்கு. லேசா குழாயை அழுத்தினா தண்ணி செம ஃபாஸ்டா பாஞ்சு பக்கெட்ட தள்ளி விடறது. ஒன்னு ரெண்டு கொசு நுழையப்பாக்கறது.
வயத்துல பசி ஆரம்பிக்க அன்னதானம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லன்னு நெனவு வந்து கீழ இறங்கறோம். போன தடவை செருப்ப தொலைச்சுட்டு இவர வெயில்ல துரத்தி வாங்கிண்டு வரச்சொன்னது நினைவு வர ஜாக்ரதையா ஜோடிய பிரிச்சு தனித்தனியா போடறோம்
சாம்பார் சாதத்துல பரங்கிக்காய் தான்..நல்லா வெந்து இருக்கு.கார தொகையல் தயிர் சாதத்துக்கும் இதுதான் தொட்டுக்க. ரூம் வந்து கொஞ்சம்ரெஸ்ட் எடுத்துண்டு நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச திருச்சானூர் ,கோவிந்த ராஜர் தவிர மத்த கோயில்கள் சுத்தப்போறோம்னு (சேவிக்க போறோம்னு சொல்லுங்கோன்னு மொறைக்கறேன்)அழச்சிண்டு போறார். வாசல்ல 800/- ரூபாய்க்கு எல்லா கோயிலுக்கும் கூப்பிடறான். அவன் கார்காரன். நாம ரெண்டு பேர்க்கு ஆட்டோ போதும்னு இன்னிக்கு கோதண்டராமர் ,கபில தீர்த்தம்,இஸ்கான் ,கோவிந்த ராஜர் கவர் பண்ணிட்டு நாளைக்கு மத்த கோயில்னு 350/- ஆட்டோ பேசறார்.
முதல்ல கோதண்ட ராமர் சன்னதிக்கு போறோம்.
ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி பெருமாள் ஆலயம். இவ்விடத்திலுள்ள பெருமாளை ராமாயண காலத்தில் ராமனுடன் வாழ்ந்த ஜாம்பவான் என்ற பாகவதர் ப்ரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்றது.
ஆலயம் திருப்பதி நகரத்தோட மையப் பகுதியில் இருக்கு. .இங்கு மூலவர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி சீதா பிராட்டியுடனும் இளைய பெருமாளான லக்ஷமண ஸ்வாமியுடனும் எழுந்தருளி இருக்கார்
இங்கும் வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடந்துண்டு இருக்காம். ஆச்சார்ய ஸ்தானத்தில் விளங்கும் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமனின் சந்நிதிக்கு நேர் எதிரே தனிக்கோவில் கொண்டருளியுள்ளார்.
கோவிலைச் சுற்றி அருமையான நந்தவனம், குளு குளுவென இருக்கு..
கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டதாம். .
புராணங்களின்படி இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய ராமன் இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.
நரசிம்ம ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் விஜயநகர கோயிற்கலை அம்சங்களின் பாதிப்பை கொண்டுள்ளது
ஏகதள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் சிம்ம உருவங்கள் பொதிக்கபட்டிருக்கு..இந்த கோயிலின் கோபுரம் வட்டவடிவில் அமைந்து உச்சியில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.
திருப்பதி-திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
இவருடைய சந்நதியில் காட்சி தரும் ராமபிரான் பிற தலங்களில் பார்ப்பதுபோல நிமிர்ந்து காணப்படுவதில்லை.
தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டுகி றார். எதற்காக இந்த சாய்ந்தத் திருக்கோலம்? ...நாளை..
குறிப்புகள்
3. வேத மலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி வெங்கடாசலபதியை பூஜித்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த மலையை வேதமலை என்று அழைக்கப்படுகிறது.
வட மொழியில் நாராயணாத்ரி:
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.
4. கருட மலை
கருட பகவான் இங்கு எம்பெருமானை வணங்க வந்தார். அப்போது வைகுண்டத்திலிருந்து ஏழுமலையானை எடுத்து வந்தார். அதன் காரணமாக இந்த மலையை ‘கருட மலை’ என்று அழைக்கப்படுகிறது.
கருடாத்ரி:
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே இன்பமெலாம்
பெற்றேரும் பெறற்கரிய பேறு.
No comments:
Post a Comment