Wednesday, February 23, 2022

இலந்தைப் பழம்

 🌷🌷இலந்தைப் பழம் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு பாருங்க.. உடலில் இந்த மாற்றங்கள் நடக்கும்!

ஆரோக்கியம் நிறைந்த பழ வரிசையில் இலந்தைப்பழமும் ஒன்றாகும். இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு டயட்டிரி ஃபைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்த பழம் இது. இதில் கிட்டதட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.

தற்போது இந்தபழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

இலந்தைப் பழத்தில் இருக்கும் சப்போனின் இயற்கையாகவே தூக்கத்தைத் தூண்டி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மனம் அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும். 

மலச்சிக்கல் பிரச்சினைக்கு இலந்தைப்பழம் தீர்வாக இருக்கும். கிடைக்கும் நேரங்களில் ஒரு கைப்பிடி அளவுக்கு இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளைச் சரிசெய்து ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

இலந்தைப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. ஃப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுகிறது.

இலந்தைப் பழத்தில் உப்பின் அளவு மிகக் குறைவு. குறைந்த சோடியமும் அதிக அளவு பொட்டாசியமும் நிறைந்திருக்கின்றன. பொட்டாசியம் ரத்தக் குழாய்களின் இறுக்கங்களைத் தளர்த்தி, இலகுவாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

இலந்தைப் பழத்திலுள்ள அதிக அளவிலான பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க இலந்தைப் பழம உதவி செய்கிறது. 

 இலந்தைப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகள் உறுதியடையும். ஆஸ்ட்டிரியாபொராசிஸ் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறவர்கள் அடிக்கடி இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் பிரச்சினை கட்டுக்குள் வரும்.



No comments:

Post a Comment