Monday, February 21, 2022

இரத்த அழுத்தம்

 *இரத்த அழுத்தம்-B.P

     இரத்த நாளங்களில் உள்ள இரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்து இருபப்பதை,"இரத்த அழுத்தம்"B.P. or இரத்த கொதிப்பு என்று கூறுவர்.உடனே வெளியே தெரியாது.

பாக்டீரியா,வைரஸால் வரும் நோய் அல்ல. நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையும்,உணவு பழக்கம் கட்டுபாட்டுக்குள் இருந்தால் மூளை,இருதயம் பாதுகாக்கப்படும்.இரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வதில் தவறில்லை.Silent Killer ஆக B.P.ஐ நமக்கு எந்த பணியும் இல்லாமால் ஓய்வாக இருக்கும் நாளில் வேறு வேறு சமயங்களில் மூன்று தடவை எடுத்து பார்த்த பின்னரே ஓரு முடிவுக்கு வர வேண்டும்.பணி சுமை சிலருக்கு மூளை உழைப்பு,சிலருக்கு உடல் உழைப்பு காரணமாக மன அழுத்தம்,மன உளைச்சல், காரணமாக B.P.வரலாம்.B.P.நோயாக. நினைத்து மனதை வாட்டி கொள்ள கூடாது.பிறருடன் ஓப்பிட்டு பார்த்தாலும்,இல்லாததை நினைத்து கவலை கொள்ளுவதாலும்,நடைமுறை சூழலில் தன்னை பொருத்தி  கொள்ள தயாராக இல்லாத மனநிலை,தன்நம்பிக்கை இழந்து காணப்படுதல்,தாழ்வு மனபான்மை,திறமையை வளர்த்து கொள்ளாது இருத்தல்,எதிர்மறையாகவே நினைத்தல்,மிக முக்கியமானது நேரம் மேலாண்மை கடைப்பிடிக்காதவர்க்கு,Global Level மாற்றத்தால் தேவையற்ற சிந்தனையால் பயம்,உறவுகளில் சிக்கல்,சாப்பாட்டில் தவறு ,மது,புகை,அதிக இறைச்சி உணவு,போன்ற காரணங்களில் எது நம்மிடம் உள்ளதோ அதை நீக்க முயற்சி  செய்தலே,நம் மூளையில் Serotonin,Melatonin ஹார்மோன் கட்டுபாட்டுக்கு வரும்.உளவியல் காரணமாக B.P. வாய்ப்பு உள்ளது.ஆரம்ப நிலையிலே நம் *உணவு முறை,பயிற்சி, ஓழுக்கம்,யோகா,மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டாலே மனதினால் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட இரத்த கொதிப்பிலிருந்து விடுபடலாம்.இரத்த அழுத்தம் சரி செய்யாவிட்டால் இதய நோய்கள்,பக்கவாதம், சிறுநீரக செயலிப்பு,இதய நோய்கள்,மூளை நரம்பு பாதிப்பு,மயக்கம்,தலைசுற்றல் வரலாம்.

     *எண்ணெயில் வறுத்த உணவுகள்,உப்பு பதார்த்தங்கள்,ஊறுகாய் வகைகள்,மசாலா அதிகம் சேர்க்க பட்ட துவையல்கள்,உப்பு,நெய்,வெண்ணெய் கண்டிப்பாக தவிர்க்க.

     பிறர் நம்மை ஊக்கம் படுத்துவதை விட நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.எதையும் நேர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டும்.திறமையில் உயர்ந்த மனிதர்களோடு நட்பு வைத்து* கொள்க.நேரம் மேலாண்மை கடைபிடிக்க. மனதுக்கு பிடித்த இசை கேட்க மனது பிடித்த காரியங்களை செய்க.வெதுப்பான சூடான நீரில் குளித்தால் Tension குறையும்.சுவாசத்தை உள் இழுத்து மென்மையாக வெளியிட்டு தாளாமாக செய்க.உங்களிடமே நீங்கள் *Positive ஆக பேசி கொள்ளுங்கள்.Tension,stress,Depression சமயத்தில் இரு காதுகளை தேய்த்து கொள்ளுக.தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓரே இடத்தில் *தியானம் செய்க.Eat Rightly Low Sugar and High Protein.கட்டாயம் தேவையான அளவு *தூங்கினாலே  B.P.க்கு தலை சிறந்த மருந்தாகும்.

     துளசி இலை -100,gm,வில்வம் -100,gm,சர்ப்பகந்தா -100,gm,அஸ்வ கந்தா -100, gm,ஓன்றாக கலந்து தூள் செய்து 02,கிராம் அளவில் இரு வேளை தேனில் சாப்பிட்டு வர B.P.குணமாகும்.உடல் எடை அதிகம் உள்ளவர் குறைந்த கலோரி உணவுகளை உண்ணுக.அதிகமாக தினசரி டீ,காபி தவிர்க்க.

No comments:

Post a Comment